என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shenkottai"

    • செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சங்கடகர சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. செக்கடி பால விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. மாலையில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தேங்காய் மாலையால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதே போன்று வல்லம், இலஞ்சி,பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவ பிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், ஸ்ரீமுக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
    • கூட்டத்தில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மாவட்டத்திற்கு முதல் முறையாக அவர் வர இருப்பதால் செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு நகரச்செயலாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி தென்காசி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும் முதல்-அமைச்சருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு வழங்கிடும் வண்ணம் செங்கோட்டை குண்டாறு ஆற்றுப்பாலம் முதல் நித்தியகல்யாணி அம்மன் கோவில் ஆற்றுப்பாலம் வரை சாலையின் இரு புறத்திலும் நிர்வாகிகள், பொதுமக்கள் என 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்துசரோஜா, ராஜா, பொருளாளர் தில்லை நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் பீர்முகமது, மணிகண்டன், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மண்டல தொ.மு.ச. மத்திய சங்க துணைச்செயலாளா் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • கடையநல்லுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் புதிய வாக்காளா் சேர்ப்பு, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஒன்றிய பகுதியில் உள்ள சீவநல்லுாரில் கடையநல்லுார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய வாக்காளா்கள் சேர்ப்பு முகாம் நடந்தது. முகாமை கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், அ.தி.மு.க. தென்காசி வடக்குமாவட்ட செயலாளருமான கிருஷ்ணமுரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா, செங்கோட்டை ஒன்றிய செயலாளா் ஆய்க்குடி செல்லப்பன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் புதிய வாக்காளா் சேர்ப்பு, முகவரி மாற்றம், உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

    • மேலச் செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.

    செங்கோட்டை:

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் மேலச் செங்கோட்டை, அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தலைமையாசிரியர் ராஜன், ஆசிரியர் பிரதிநிதிகள் ஜெஸிகலா, வேலம்மாள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இசக்கித்துரைபாண்டியன், சந்திரா ஆகியோர் உள்ளடக்கிய விழாக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு போட்டிகளுக்கான நடுவர்களும் நியமிக்கப்பட்டு பள்ளி அளவில் போட்டிகள் கடந்த 23-ந் தேதி முதல் 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. பள்ளி அளவில் இறுதி போட்டி 28-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் முதலிடம் பெறுபவர்கள் வட்டார அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். வட்டார அளவில் வெற்றிபெற்றவர்கள் மாவட்ட அளவில் கலந்து கொள்வார்கள்.மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்ப டவுள்ளது. தரவரிசையில் முதல் 20 பேர் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

    • செங்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது.
    • முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வாகை மரத்திடல் காந்தி சிலை முன்பு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி முகாம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராம லெட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணை தலைவா் கணேசன் நகர்மன்ற உறுப்பினா் ராஜ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனா்.

    செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் முத்துலெட்சுமி வரவேற்று பேசினார். அதனைத்தொடா்ந்து விழிப்புணா்வு கண்காட்சி முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து மாற்றுதிறனா ளிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள், அடையாள அட்டை பெறுவது எப்படி, சுயதொழில் உபகரணங்கள் பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

    முகாமில் விழிப்புணா்வு காட்சிகள் அடங்கிய பதாகைகள் வைக்க ப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய களப்ப ணியாளா் இந்துமதி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். அமர்சேவா சங்கத்தின் சிறப்பு பள்ளி ஆசிரியா் ஈஸ்வரி நன்றி கூறினார்.

    • செங்கோட்டை பகுதிகளில் ஒரு ரூபாய் முதல் ரூ.500 வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.
    • 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 பைசாவிற்கு விற்கப்பட்ட அகல்விளக்குகள் தற்போது ரூ.3-க்கு விற்கப்படுகிறது.

    செங்கோட்டை:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு செங்கோட்டை பகுதிகளில் வெளி மாநிலங்களில் இருந்து தற்போது விற்பனைக்காக அகல் விளக்குகள் குவிந்துள்ளன.

    குறிப்பாக ரெடிமேட் பீங்கான் விளக்கு, மகா லெட்சுமி விளக்கு, நாகராஜா விளக்கு, கும்ப விளக்கு, தாமரை விளக்கு, அடுக்கு விளக்கு, கோபுர விளக்கு, தேங்காய் விளக்கு, பிரதோஷ விளக்கு, உருளி விளக்கு, ஸ்ரீதேவி விளக்கு என பல வகையான விளக்குகள் தள்ளுவண்டியில் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு ரூபாய் முதல் ரூ.500 வரை விளக்குகள் விற்கப்படுகின்றன.

    இதுகுறித்து தள்ளு வண்டியில் விளக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-


    "கார்த்திகை மண் விளக்குகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் விருத்தாசலம், புதுச்சேரி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். மண் விலை அதிகரித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அகல்விளக்குகள் ரூ.3-க்கு விற்கபடுகிறது.

    மேலும் மண் விளக்கு ஒரு ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்ற மண் விளக்கு 75 ரூபாயாகவும் அதிகரித் துள்ளது.விலை ஏற்றத்தால் பீங்கான் விளக்குகளுக்கு பொதுமக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைக்கிறது.

    எங்களிடம் ரூ.3 முதல் ரூ.500 வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. எங்களிடம் சில்லரை விற்பனைக்காக வியாபாரிகள் மொத்தமாக வாங்கி கிராமங்களுக்கு கொண்டு சிறுகடைகளில் விற்பனை செய்வதால் அதிகளவில் லாபம் கிடைப்பதால் இதனை நம்பி ஏராளமானோர் இந்த சீசன் தொழிலை நம்பி களத்தில் இறங்கி உள்ளதாக கூறினார்.

    மெழுகு, பீங்கானால் ஆன ரெடிமேட் விளக்குகளின் வருகையால் மண்ணால் ஆன விளக்குகளின் விற்பனை மந்தமாகியுள்ளது. வீடுகளுக்கும் ரெடிமேட் விளக்குகளேயே வாங்கிச் செல்கின்றர்.

    மேலும் வழக்கமாக நகர்புறத்தில் மட்டுமே விற்பனையான ரெடிமேட் பீங்கானால் விளக்குகள் தற்போது கிராமங்களிலும் அதிகமாக விற்பனையாகிறது என்றார்.

    • குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்புஆராதனைகள் நடந்தது.
    • சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழி பட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை போன்று ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.

    அதனைதொடர்ந்து சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழி பட்டனர். இதனை போன்று இலத்தூர், புளியரை, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

    • அச்சன்கோவில் தர்மசாஸ்தாகோவிலில் ஆண்டுதோறும் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    செங்கோட்டை:

    தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அய்யப்பன் அரசராக இருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மகோற்சவ திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் இரு மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டிற்கான மகோற்சவ திருவிழா செண்டை மேளம் முழங்க வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. இதில் தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து இன்று முதல் 4 நாட்கள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை, 7,8-ம் திருநாள் விழாக்களில் கருப்பன் துள்ளல், 9-ம் திருவிழா அன்று தேரோட்டம், 10-ம் திருவிழா நாளன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா மற்றும் 27-ந் தேதி அன்று மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியுடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்தும், மாணவிகள் தேவ தூதர்கள் போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இசை இசைத்து பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ-மாணவிகள் கேரல் ரவுண்ட் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

    பள்ளியில் இயேசு பிறந்தது போன்ற குடில் அமைக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தலைமை தாங்கினர்.

    • தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா சுவாமி அய்யப்பன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவின் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது. மூங்கில் கம்புகளை வைத்து பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    முன்னதாக சுவாமி அய்யப்பனின் தங்கவாள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தேரோட்டத்திற்கு முன்பாக கருப்பன் துள்ளல் என்று அழைக்கப்படும் கருப்பசாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


    • பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.
    • பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் அருகே பழமையான பாலம் ஒன்று உள்ளது.

    புதிய பால பணி

    கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய இணைப்பு பாலமாக அமைந்துள்ள இந்த பாலம் சேதமடைந்து காணப்பட்டதால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு கோரிக்கை வலுத்தது.


    இதையடுத்து அந்த பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதி வழியாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று செல்கின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினமும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பிரானூர் பார்டர் வழியாக செல்லும் வாகனங்கள், கனரக லாரிகள், அய்யப்ப பக்தர்களின் கார்கள் அனைத்தும் ெசங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை, பண்பொழி, குத்துக்கல்வலசை வழியாக வழியாக செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் பிரானூர் பார்டர் பாலம் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு இன்று முதல் போக்குவரத்து சீராக நடைபெற்றது.

    • கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது.
    • பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமைதாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார்.

    பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை போன்ற விழி்ப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனா். பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து ெதாடங்கி எஸ்.ஆர்.கே. தெரு. கரையாளா் தெரு, காமாட்சி தெரு உள்ளிட்ட தெருக்கள் வழியாக சென்று பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சார்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமைஆசிரியா் பீட்டர்ஜூடுதத்யேஸ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா். வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் நன்றி கூறினார்.


    ×