என் மலர்
நீங்கள் தேடியது "shenkottai"
- செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
- இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
- காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகர செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது. முன்னதாக காந்தி உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.
- இதுவரை எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என தி.மு.க. உறுப்பினா் ரஹீம் கூறினார்.
- அடுத்த கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என்று அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பொறுப்பு ஜெயப்பிரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
நகர்மன்ற தலைவா் ராலெட்சுமி பேசும்போது, நாம் அனைவரும் பதவியேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இதுவரையில் எனக்கு நீங்கள் அளித்துள்ள ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
விருப்பு, வெறுப்பு இன்றி நமது நகரின் நலனுக்காகவும், முன்னேற்றதிற்காகவும் அனைவரும் ஒன்றாக இணைந்து பணி செய்ய வேண்டும் என பேசினார்.
தி.மு.க. உறுப்பினா் ரஹீம் பேசும்போது, இதுவரையில் எனது வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் கூறமுடியாமல் இருந்து வருகிறோம். தி.மு.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டிக்கிறோம். அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பேசினார்.
இதனையடுத்து அ.தி.மு.க. உறுப்பினா் ஜெகன் பேசும்போது, ஓராண்டு நிறைவு பெற்ற பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளான சாலை வசதி, கழிவு நீர் ஓடை, சீரான குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.
எனவே அடுத்து நடக்க இருக்கிற கூட்டத்தினை நாங்கள் புறக்கணிக்க இருக்கிறோம் என பேசினார்.
இதேபோல் நகர்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, சுடர்ஒளி, வேம்புராஜ், செண்பகராஜன், இசக்கித்துரை பாண்டியன் மற்றும் ஏனைய உறுப்பி னா்கள் இதே கருத்தை வலியுறித்தி பேசினா்.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துபாண்டி, சுகந்தி, ராதா, இந்துமதி, ராம்குமார், மேரி அந்தோணிராஜ், பேபி ரெசவுபாத்திமா, இசக்கயம்மாள் மணிகண்டன், முருகையா, சரவண கார்த்திகை ஆகியோர் கலந்து கொண்ட னா்.
- ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் நடந்தது.
- மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை பிரானுார் பார்டரில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மற்றும் தென்காசி மேற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. வடக்குமாவட்ட செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவா் மூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளா் சண்முகப்பிரியா, துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் முருகையா, தங்கம்பிச்சை, காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளா் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச்செயலாளா் சுப்பிரமணியன் தொகுப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிரணி துணைச்செயலாளா் முன்னாள் அமைச்சருமான ராஜலெட்சுமி, தலைமை கழக பேச்சாளா்கள் பழனிக்குமார், கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினா்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் கண்ணன், விவசாய பிரிவு செயலாளா், மருத்துவா் அணி செயலாளா் மற்றும் ஒன்றியக் செயலாளா்கள், நகரக் செயலாளா்கள், பேரூர் செயலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கிளைச்செயலாளா் மாடசாமி நன்றி கூறினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை ராமசாமி தெருவை சேர்ந்தவர் பலவேசம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). இவர் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் உள்ளே நுழைந்து மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலியை பிடித்து இழுக்கவும் திடீர் என்று விழித்துக்கொண்ட மகேஸ்வரி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார்.
சுதாரித்து கொண்ட மர்ம நபர் மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு இருந்த 4 கிராம் நகையை மட்டும் அறுத்து கொண்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடிவருகிறார்.
- நிகழ்ச்சிக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனா்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனா். மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினா்கள் சேர்க்கை விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. வழங்கி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடைய அடையாள சான்று பெற்று உறுப்பினர் ஆக்க சேர்க்க வேண்டும், இரட்டை பதிவு இல்லாமல் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் அதிகளவில் புதிய உறுப்பினா்களாக இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
- சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
- முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை -குற்றாலம் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சிலுவைமுக்கு பகுதியானது வல்லம், பிரானூர் பார்டர், வாஞ்சிநகர், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாகும். இந்த சாலையை சுற்றுவட்டார மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிலுவைமுக்கு சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் போது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மீது காற்றில் பறந்து சென்று விழுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டி அமைத்து அவ்வப்போது குவியும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது.
- ரெயில் ஓட்டுனர்களுக்கு தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தென்காசி:
செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான ரஹீம், நிர்வாகிகள் கல்யாணி, மணிக ண்டன், சரவணன், மேரி, ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி, துணைத் தலைவா் ராஜேந்திரராவ், செயலாளா் கிருஷ்ணன், துணைச் செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமர், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னு லிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை-தாம்பரம் தாமிரபரணி அதிவிரைவு ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
பாவூர்சத்திரம்
செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருகபக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.
மேலும் ரெயில் பயணிகள் கோரிக்கையாக இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் எனவும் பாவூர்சத்தி ரம் ரெயில் நிலையத்திற்கு பேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கடையம் ெரயில் நிலையத்திற்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது .
- சிறப்பு விருந்தினராக மருத்துவர் முகமது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, சமீமா பர்வீன் ஆகியோர் செய்திருந்தனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஸர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூக நல்லிணக்க விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக மீரான் மருத்துவமனை மருத்துவர் முகமது மீரான், கம்பீரம் பாலசுப்ரமணியம் , வடகரை ஊராட்சி தலைவர் ஷேக் தாவுத், தென்காசி மாவட்ட தி.மு.க. பொறுப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், செங்கோட்டை ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம், பள்ளி நிறுவனர்கள் முகமது பண்ணையார், பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் இப்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நோன்பு திறப்பதற்காக அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் பலகாரங்கள் வழங்கப்பட்டது.
- ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
- வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதி களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர்.
இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கவுரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போது அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் உடன் இருந்தனர்.
- காயத்ரிக்கும், அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
- குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த காயத்ரி திடீரென மயக்கம் அடைந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சுடலை (வயது 52). இவர்களின் மகள் காயத்ரி (26). இவருக்கும், நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அபிஷேக் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
கர்ப்பம்
காயத்ரி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு அவர் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிப்படைந்து திடீரென இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மரக்கன்றுகள் நடும்விழாவுக்கு நீதிபதி சுனில்ராஜா தலைமை தாங்கினார்.
- நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றத்துறை நடுவரும் ,நீதிமன்ற நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல்கள் சங்க தலைவா் வெங்கடேசன், துணைத்தலைவா் முத்துக்குமாரசாமி, செயலாளா் அருண், பொருளாளா் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் கார்த்திகைராஜன் வரவேற்று பேசினார்.
அதனைதொடா்ந்து நீதிபதி சுனில்ராஜா நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னா் நீதிமன்ற பணியாளா்களுக்கும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச்சூழல் அவசியம் குறித்தும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் வக்கீல்கள் மாரியப்பன், நித்யானந்தம், வெங்கடேஷ், சிதம்பரம், வீரபாண்டி, கணேசன் நல்லையா, நீதிமன்ற பணியாளா்கள், போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.