search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shift overall"

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை,

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் விடுத்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

    மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தி அங்கு 17 ரெயில் நிலையங்களை அமைத்து, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப் பாலம் கொண்டு வரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நடப்பாண்டு நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

    மதுரை சக்கிமங்கலத்தில் சிட்கோ புதிய தொழில் பூங்கா அமைக்க வேண்டும். மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள ஒட்டுமொத்த விற்பனை சந்தைகளையும் புறநகருக்கு மாற்றி, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    மதுரை மையப் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படவுள்ளது. எனவே சிறைச்சாலை அமைந்த இடத்தை பசுமைப் பகுதியாக மேம்படுத்த வேண்டும்.

    விரகனூர் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்புகளில் புதிய மேம்பாலம் அமைக்க ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கு நடப்பு நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

    மதுரை விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் சுரங்க பாலம் (அண்டர்பாஸ்) அமைக்க வேண்டும். கப்பல்-விமான மார்க்கமாக ஏற்றுமதி செய்யும் சரக்கு மீதான போக்குவரத்து கட்டணம் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விலக்கு நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×