search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shocking incident"

    • அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களை அதே பகுதியை சேர்ந்த சாந்தனு லட்சுமன் ஜாதவ் (வயது 22) என்ற வாலிபர் வழிமறித்து தனது கையில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கினார். இதில் பிரீத்தியுடன் வந்த வாலிபர் காயம் அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும், சாந்தனு, பிரீத்தியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாந்தனு ஓட, ஓட விரட்டி பிரீத்தியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×