search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shoots"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை பரிசோதித்தபோது எதிர்பாராத விதமாக பெண் மீது குண்டு பாய்ந்தது.
    • சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத். புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

    இதற்கிடையே, அலிகாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட்டு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன.

    இந்நிலையில், பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக இஷ்ரத் நேற்று அலிகார் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் மனோஜ் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டது. இதில் பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்கு வந்த இஷ்ரத் தலைமீது குண்டுபாய்ந்தது. உடனடியாக அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் இஷ்ரத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இன்ஸ்பெக்டரை தேடி வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். #CRPFjawan #jawanshootsself #ChhattisgarhCRPFjawan
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. 

    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் படை வீரர் ராஜிவ் குமார் சிங்(37) என்பவர் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தன்னிடம் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்திய ரிசர்வ் படையின் 148-வது படைப்பிரிவில் இடம்பெற்றிருந்த ராஜிவ் குமார் சிங், தலைநகர் ராய்ப்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கபிர் நகர் காவல் நிலையத்துக்குள் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    பலியான ராஜிவ் குமார் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலம், சன்டவுலி மாவட்டம், ஜமுனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. #CRPFjawan  #jawanshootsself  #ChhattisgarhCRPFjawan
    திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஜினிகுமாரி(வயது 33). இவர் கல்லுக்குழி சுப்பராயன் தெருவில் வசித்து வருகிறார். ரஜினிகுமாரியின் கணவர் ரஞ்சித்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ரஞ்சித்குமார், ரஜினிகுமாரி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ரஜினிகுமாரியை சுட்டார். இதில் ரஜினிகுமாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அப்போது ரஞ்சித்குமார் துப்பாக்கியால் தன்னுடைய தலையில் சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடிய ரஜினிகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், ரஜினிகுமாரியின் வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ராணுவ வீரர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×