என் மலர்
நீங்கள் தேடியது "Shootupothai"
- முத்துகிருஷ்ண சுவாமிகளின் 109-வது குருபூஜையையொட்டி கிரிவல தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
- 6-ந் தேதி மாலை சூட்டுப்பொத்தை மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டு பொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.
தேரோட்டம்
இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 109-வது குருபூஜையையொட்டி கிரிவல தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சூட்டு பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்ட பத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5.30 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டி யம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். இத்தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை குருபூஜை
நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் தேதி குருஜெயந்தியும், 8-ந் காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது .விழா ஏற்பாடுகளை ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.