search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shortlist"

    • இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.
    • தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும்.

    இந்திய அணியின் பயிற்சயாளர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் ஐசிசி 2024 உலகக் கோப்பையுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    பயிற்சியாளர் பதவிக்குக் கவுதம் காம்பீர், விவிஎஸ். லக்ஷ்மன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஐபிஎல் 2023 தொடரில் கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் விளங்கியதால் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் கேகேஆர் இணை உரிமையாளர் ஷாருக் கான், காம்பீரை தங்கள் அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள விரும்புவதால் காம்பீர், இந்தியஅணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதிவிக்கான விண்ணப்பம் கடந்த மே 27 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பி.சி.சி.ஐ இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை.

    இதற்கிடையே தலைமைப் பண்புகளில் சிறந்து விளங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இந்திய அணியின் பாயிற்சியாளர்காக வர முடியாதா? என்ற கேள்வி சிலருக்கு எழக் கூடும். பி.சி.சி.ஐ விதிகளின்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ஒருவரே இந்திய பயிற்சியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர் ஆவார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் டோனி தொடர்கிறார்.

     

    நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடருடன் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டோனியின் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் தற்போதும் சிஎஸ்கே வீராகவே உள்ளதால் பயிற்சியாளர் பதவிக்கு டோனி தகுதி பெற்றவர் இல்லை.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதிவுக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை போலி விண்ணப்பங்களாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரில் விண்ணப்பங்கள் வந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்து இறுதிக் கட்ட தேர்வர்களின் பட்டியலை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடக்கிறது. #WomenCricket #TeamCoach #India
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் இன்று நடக்கிறது. இந்த பதவிக்கு கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார் உள்பட 10 பேருக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    வெஸ்ட்இண்டீசில் கடந்த மாதம் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. அரைஇறுதி ஆட்டத்தில் சீனியர் வீராங்கனையான மிதாலி ராஜூக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்ததாக மிதாலி ராஜ் புகார் தெரிவித்தார். அதேநேரத்தில் ‘தொடக்க வீராங்கனையாக தன்னை இறக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டியதாகவும், அவர் தனிப்பட்ட சாதனைக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும்’ ரமேஷ்பவார் குற்றம் சாட்டினார். ரமேஷ் பவாரை பயிற்சியாளர் பதவியில் நீட்டிக்கக்கூடாது என்று மிதாலி ராஜூம், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக தொடர செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், மந்தனா ஆகியோரும் வற்புறுத்தினார்கள். இந்த சர்ச்சையால் ரமேஷ் பவாரின் இடைக்கால பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டயானா எடுல்ஜி மறைமுகமாக ரமேஷ் பவாருக்கு ஆதரவு தெரிவித்தார். வீராங்கனைகள் தேர்வு குறித்து அணி நிர்வாகம் எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்று டயானா எடுல்ஜி கூறினார். அத்துடன் கேப்டன் விராட்கோலியின் வேண்டுகோளின் படி இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப்பட்டது போல் இந்திய பெண்கள் அணிக்கும் பயிற்சியாளரை நியமனம் செய்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து வெளிநாட்டினர் உள்பட 28 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியான 10 பேருக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த இறுதி பட்டியலில் கேரி கிர்ஸ்டன், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), ரமேஷ் பவார், டபிள்யூ.வி.ராமன், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் (4 பேரும் இந்தியா), டிரென்ட் ஜான்ஸ்டன் (அயர்லாந்து) மார்க் கோலெஸ், மாஸ்கரனாஸ் (இருவரும் இங்கிலாந்து), பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    புதிய பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியால் நியமிக்கப்பட்ட இடைக்கால தேர்வு கமிட்டியினர் கபில்தேவ், அன்ஷூமான் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் இறுதிபட்டியலில் இடம் பிடித்துள்ள 10 பேரிடமும் நேர்காணல் நடத்த இருக்கிறார்கள். இதில் சிலர் நேரில் வந்து தங்கள் தரப்பு திட்டத்தை விளக்குகிறார்கள். சிலர் ‘ஸ்கைப்’ மூலம் தேர்வு கமிட்டியினருடன் உரையாடுகிறார்கள்.

    கேரி கிர்ஸ்டன், கிப்ஸ், ரமேஷ் பவார் ஆகிய 3 பேரில் ஒருவரே பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது கேரி கிர்ஸ்டன் ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தால் தான் பெண்கள் அணியின் பயிற்சியாளராக ஆக முடியும். 
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. #DonaldTrump #AmulThapar
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அந்தோணி கென்னடி (வயது 81), இந்த மாதம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் ஏற்படுகிற காலி இடத்தை நிரப்புவதற்கான பணியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

    முதலில் அவர் தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்தார். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபரும் (49) இடம் பிடித்து இருந்தார்.



    அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் கடந்த 2-ந் தேதி டிரம்ப் நேர்காணல் நடத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் அவர் நேர்காணல் நடத்தினார்.

    இப்போது 3 பேரைக் கொண்ட இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் இந்தியர் அமுல் தாபர் பெயர் இல்லை என்றும் ஊடக தகவல் ஒன்று நேற்று கூறியது. அந்த பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளதாக தேசிய பொது வானொலி செய்தி கூறுகிறது. இந்த 3 பேரில் முதல் 2 பேரில் ஒருவரை டிரம்ப் தேர்வு செய்யலாம் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் ஓரிரு நாளில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமுல் தாபர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கான தேர்வில் வாய்ப்பை நழுவ விட்டிருப்பது இது 2-வது முறை ஆகும். ஆன்டனின் ஸ்கேலியா என்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி 2016-ம் ஆண்டு இறந்தபோது, முதல் கட்ட பரிசீலனை பெயரில் அமுல் தாபர் பெயர் இடம் பெற்றிருந்தது. அப்போது நீல் கோர்சச் என்பவரை டிரம்ப் நியமனம் செய்து விட்டார். #DonaldTrump #AmulThapar #Tamilnews 
    ×