என் மலர்
நீங்கள் தேடியது "Shreyas"
- பிசிசிஐ-ன் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா இடம் பிடித்துள்ளனர்.
- B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
2024 அக்டோபர் 1, முதல் 2025 செப்டம்பர் 30, வரையிலான இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
A பிரிவில் சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்
C பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ், ஷிவம் துபே, பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, படிதார் , சர்பராஸ் கான், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷத் ராணா ஆகிய 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதல் முறையாக ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
A+ பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், A பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடியும், C உள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படும்.
- 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- வெற்றி பெற்ற பின்பு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாசை பார்த்து கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 37வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து. இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 73 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற பின்பு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாசை பார்த்து கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனை பார்த்து ஷ்ரேயாஷ் கடுப்பானார். பின்பு ஷ்ரேயாசிடம் வந்து கோலி கைகுலுக்க வந்தபோது ஷ்ரேயாஸ் கோவமாக காணப்பட்டார். இதனையடுத்து கோலி சிரித்துக்கொண்டே அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் ஷ்ரேயாஸ் கடுப்பாகவே காணப்பட்டார்.
கோலியின் ஆக்ரோஷமான இந்த கொண்டாட்டம் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் பலரும் கோலியை விமர்சித்து வருகின்றனர்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-லோகேஷ் ராகுல் ஜோடி 208 ரன் குவித்தது. உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு இது புதிய சாதனையாகும்.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மைக்கேல் கிளார்க்-பிராட் ஹோட்ஜ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர்-ராகுல் ஜோடி முறியடித்தது.
ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் அதிவேக சதமாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 63 பந்தில் சதம் அடித்திருந்தார். அதை ராகுல் முறியடித்தார்.
- 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
- 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் இணைந்து கேப்டன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின
- இப்போட்டியில் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - கில் ஜோடி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு ரன்களை சேர்த்தனர். கிட்டத்தட்ட 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை நெருங்கிய நிலையில், அக்சர் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்னிலும் ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 249 ரன்கள் எடுத்தது.
- ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- ஷ்ரேயஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் 63 ரன்களும் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, முகமது ஷமி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.
நிதானமாக விளையாடி வந்த கில் சாட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கில் தூக்கி அடித்த பந்தை சூப்பர் மேன் போல பறந்து பிலிப்ஸ் பிடித்தார். அடுத்ததாக களமிறங்கிய கோலி பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த ரோகித் 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து பிரேஸ்வெல் பந்துவீச்சில் அக்சர் அவுட்டானார்.
42 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் அடித்துள்ளது.