என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Signature drive"
- ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான்.
- பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
சென்னை:
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.
இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார். ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ, வஞ்சிய தேவன், ஜீவன், கழககுமார் பூங்கா ராமதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:- தமிழ்நாட்டின் வரலாற்றில் சுதந்திர இந்தியா என்று நாடு விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டு கவர்னர்கள் யாரும் செய்யாத அட்டூழியம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்.
ஜூன் 14-ந் தேதி நடத்திய பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இன்று கையெழுத்து இயக்கம் நடத்த தொடங்கி உள்ளோம்.
ஆளுநர் உரை என்பது ஆட்சியாளர்கள் தயாரிக்கும் உரை தான். குடியரசு தலைவர் உரை இந்திய அரசு தயாரிக்கும் உரை தான்.
ஆனால் பெரியார் , அம்பேத்கர், அண்ணா பெயர்களை வாசிக்காமல்விட்டது மாபெரும் தவறு. அவர்கள் பெயர் உச்சரிக்க கூடாத பெயரா?
மார்க்சியம் காலாவதியானது என்று சொன்னார். அது பற்றி இவருக்கு என்ன தெரியும். அம்பேத்கர் சொன்ன கருத்துக்கு மாறாக பேச ஆரம்பித்தார். முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த போது அவர் முயற்சியை முகத்திற்கு நேராக பேசுகிறார்.
முதலமைச்சர் செயலை விமர்சிப்பதற்கு இவர் எதிர்கட்சி தலைவரா?
கவர்னர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்தியை திணிக்க சொல்ல இவருக்கு என்ன உரிமை தகுதி உள்ளது. ஆளுநர் பதவியே இருக்க கூடாது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும்.
தமிழக ஆளுநர் நீக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டில் ஜனநாயகம் ஜனநாயகமாக இருக்கும். தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி. இவரை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். நாகாலாந்தில் இதே நாச வேலை செய்தார் அவர்கள் துரத்திவிட்டார்கள். கையெழுத்து எல்லோரிடமும் பெற வேண்டும் இது அரசியல் காரணத்திற்கு இல்லை. தமிழ் நாட்டின் நன்மைக்கு என்று சொல்லுங்கள். எங்கெங்கு கையெழுத்து வாங்க முடியுமோ அங்கு எல்லாம் கையெழுத்து வாங்குங்கள், வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் வாங்குங்கள். இது வெற்றி பெரும் என்ற நம்பிக்கையோடு இதனை தொடங்குகிறோம். தி.மு.க. தோழமை கட்சிகள் இதனை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்று வதற்கான உறுதி மொழி யான 'இந்திய அரசிய லமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தை களின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வ தை ஊக்குவிப்பேன் எனவும்,
குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்று வதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறு கிறேன்" என அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரை பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொ ண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களையும் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோ ஷினி சந்திரா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுபாப்பு திட்டம்) குமரன், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம், செக் போஸ்ட், உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் பல்லடம் பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது என்றும், பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, நால்ரோடு பகுதியில் செயல்படும் பார் உள்ளிட்டவைகளை,வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பல்லடம் பஸ் நிலையம்,கடைவீதி, உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்