என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silambarasan"

    • யுவனின் சங்கர் ராஜா 'ஸ்வீட் ஹார்ட்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.

    இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார்.

    தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட் ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    இந்நிலையில், ரியோ ராஜ் நடிக்கும் ஸ்வீட் ஹார்ட் படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
    • தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

    சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

    இதை தொடர்ந்து சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு புதிய திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் சிலம்பரசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மன்மதன் திரைப்படத்தில் சிம்பு இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • மன்மதன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இதுதவிர மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் வருகிற 3-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை ஒட்டி, இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "மன்மதன்" திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு வெளியான "மன்மதன்" திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை எஸ்.கே. கிருஷ்ணகாந்த் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அந்தோனி படத்தொகுப்பு செய்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மன்மதன் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.
    • இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

    இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்தனர். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்தது.

    இப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்ததாக நடிகர் சிம்பு நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    இந்த படத்தின் அறிவிப்பை சிம்புவின் பிறந்தநாளன்று பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    சிம்பு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் நடித்துள்ளனர்.
    • டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

    ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் வழித்துணையே பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'டிராகன்' படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன் டி விட்டு போன' என்ற பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் இப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் சிலம்பரசன் ஜாலியாக பாடல் குறித்து உரையாடுகின்றனர்.

    சிலம்பரசன் பாடிய இந்த பாடல் வருகிற 28 ஆம் தேதி வெளியாகும் என டிராகன் படக்குழு அறிவித்துள்ளது.

    டிராகன் திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கும் என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டிராகன்' திரைப்படம் அடுத்த மாதம் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • சிலம்பரசன் பாடிய பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக 'டிராகன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'டிராகன்' திரைப்படம் அடுத்த மாதம் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரைஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் வழித்துணையே பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை நிலையில், நேற்று நடிகர் சிலம்பரசன் பாடிய 'ஏன் டி விட்டு போன' என்ற பாடலின் ப்ரோமோ வெளியானது. ப்ரோமோவில் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உடன் சிலம்பரசன் ஜாலியாக பாடல் குறித்து உரையாடுகிறார். சிலம்பரசன் பாடிய இந்த பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதனிடையே, 'ஏன்டி விட்டு போன' பாடலின் ப்ரோமோவில் தோன்றியதற்கு நடிகர் சிம்புவுக்கு 'டிராகன்' படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வேற ஒருத்தரோட படத்துக்கு ப்ரொமேஷன் பன்றதால உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது? என்ன கிடைக்கும்னு யோசிக்காம, என்ன குடுக்கலாம்னு யோசிக்கறவன் மாஸ்.. நீங்க மாஸ் சார். தங்க மனசு... பாடலை பாடியதற்கு நன்றி... என பதிவிட்டுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • சிம்பு நடிக்கும் 49-வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். ரசிகர்களால் சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையொட்டி, நடிகர் சிம்புக்கு திரைத்துறையினர், ரிசகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    சிம்பு பிறந்தநாளை ஒட்டி, சிம்பு நடிக்கும் 49-வது படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், தக் லைஃப் படக்குழு சார்பில் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தக் லைஃப் படத்தை தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்து இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பு பிறந்த நாளை ஒட்டி அவரது படம் குறித்த வீடியோ வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
    • சிம்பு நடிக்கும் 49-வது படம் அறிவிக்கப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் தான் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதை அறிவித்துள்ளார்.

     


    மேலும், அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படத்தின் அப்டேட் இன்று மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.
    • சிம்பு நடிக்கும் 49-வது படம் அறிவிக்கப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வருகிறார். தற்போது தக் லைஃப் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் தான் நடிக்கும் அடுத்த படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில், நடிகர் சிம்பு நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

     


    இது தொடர்பாக நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இறைவனுக்கு நன்றி. அட்மேன் சினி ஆர்ட்ஸ் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

    "இதைவிட சிறப்பாக இதனை துவங்க முடியாது. என் 50-வது படம், எனக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் கனவு படம். இருவரும் முழுமனதுடன் பணியாற்றுகிறோம். புதிய பயணம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் போல் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன். நீங்க இல்லாம நான் இல்ல," என குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வகையில், அட்மேன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் சிம்பு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் 50-வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    ஒளிப்பதிவு பணிகளை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரவீன் மேற்கொள்கிறார். கலை இயக்க பணிகளை மூர்த்தி மேற்கொள்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிம்பு குழந்தை பருவ தோற்றத்தில் கையில் தீப்பந்தம் ஏந்தி சிரித்த முகத்துடன் நிற்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர், பாடகர் என பல பரிணாமங்கள் கொண்ட சிலம்பரசன் தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். அவரது பிறந்தநாளான இன்று, சொந்தமாக 'அட்மேன் சினி ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் சிம்பு 50-வது பட அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இதை தொடர்ந்து சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு 'காட் ஆப் லவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காட் ஆப் லவ்' திரைப்படம் கோடை விடுமுறையின்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்.'
    • இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியீட்டை ஒட்டி படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.

    தற்போது டீசல் படத்தின் இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
    • இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்தது.

    இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் வெளியான காதல் திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்தப் படம், இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர். இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.

    நடிகர் சிலம்பரசன் டி.ஆர். கூறும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்," என்றார்.

    நடிகை திரிஷா பேசும் போது, "விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்," என்று தெரிவித்தார்

    இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேசும் போது, "சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், 'விண்ணைத்தாண்டி வருவாயா' பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி."

    "திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின," என்றார்.

    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகித்தது. இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தப் படத்தின் பாடல்களை பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் விடிவி ரசிகர்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×