search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk cloth on power loom like handloom silk"

    • விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    ஆரணி என்றாலே பட்டு பெயரெடுத்த ஊராகும் சில மாதங்களாக கைத்தறி பட்டு போல விசைத்தறியில் பட்டுபுடவை நெய்து கைத்தறி பட்டு என விற்பனை செய்யபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கூறி நெசவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு கைத்தறி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் ஆரணி அருகே சுந்தரீகம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியில் விசைத்தறியில் கைத்தறி பட்டு புடவை நெய்வதாக புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகள் தேடி கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த நெசவாளர் பாபு என்பவர் விசைத்தறி நெய்யப்படும் இடத்தை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. இதனை கண்ட விசைத்தறி நெசவாளர் எங்கள் வீட்டை அதிகாரிகளிடம் காட்டி கொடுக்கின்றாயா என கூறி சிலர் பாபுவை சராமரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×