search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk cocoon prices"

    • தற்போது அதிக அளவில் சீன பட்டு நூல் இறக்குமதியாவதுடன், பட்டுப்புழுவின் முட்டை விலை உயர்ந்துள்ளது.
    • 100 நாள் வேலை திட்டத்தால் பட்டு வளர்ப்பு தொழிலுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

    ஈரோடு, ஜூன். 9-

    பட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.வி.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    பட்டுக்கூடு உற்பத்தி நல்ல வருவாய் தரும் தொழில் என்பதால், படித்த இளைஞர்கள் இத்தொழிலுக்கு வருகின்றனர். முன்பு சீன பட்டு நூல் இறக்குமதிக்கு தடை இருந்தது.

    தற்போது அதிக அளவில் சீன பட்டு நூல் இறக்குமதியாவதுடன், பட்டுப்புழுவின் முட்டை விலை உயர்ந்துள்ளது. ஆனால் பட்டுக்கூட்டின் விலை இறங்கி உள்ளது.

    தரமான பட்டுப்புழு முட்டை அரசால் வழங்கப்படவில்லை. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உதாரணமாக கடந்த ஆண்டு ஜூனில் ஒரு கிலோ பட்டுக்கூடு 650 ரூபாய் முதல் 750 ரூபாய்க்கு விற்பனையானது.

    தற்போது 350 முதல் 400 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. கடந்தாண்டுக்குப்பின் நடப்பாண்டில் பட்டுக்கூட்டின் விலை உயரவே இல்லை. பட்டு முட்டை விலை கடந்தாண்டு ஒரு முட்டை 7 ரூபாயாகவும், இன்று 10 ரூபாயாக உள்ளது.

    ஆட்கள் கூலி அன்று 350 ரூபாயாகவும், தற்போது 450 ரூபாயாகிவிட்டது. ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்திக்கு 400 ரூபாய் செலவாகும்.

    தற்போது 500 ரூபாயாகிறது. இவை தவிர களை கொல்லி, பூச்சி கொல்லி மருந்தின் விலையும் உயர்ந்து விட்டது. 100 நாள் வேலை திட்டத்தால் பட்டு வளர்ப்பு தொழிலுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

    எனவே உற்பத்தி செலவை குறைக்கவும், இழப்பை தடுக்க தரமான பட்டுப்புழு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்பு போல பட்டுக்கூடு ஒரு கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறினார்.

    ×