என் மலர்
நீங்கள் தேடியது "Simmakkal"
- சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார்.
- 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
மதுரை
மதுரை சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா இன்று அதிகாலை காலமானார். இவர் ஆர்.வி.டி. டூல்ஸ், ஆர்.வி.டி. இன்டஸ்ட்ரீஸ், பாரத் டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார்.
காலமான ஆர்.வி.டி. ராமையா பல்வேறு சமுதாய பணிகளை ஆற்றி வந்தார். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார்.
ஆர்.வி.டி. ராமையாவின் உடல் சிம்மக்கல் தமிழ்ச்சங்கம் ரோட்டில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், வியாபாரிகள், சமுதாய பெருமக்கள், நண்பர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆர்.வி.டி. ராமையாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் நடக்கிறது. சிம்மக்கல்லில் உள்ள அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி, தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.