search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "singapore pm"

    • நாட்டின் 3-வது பிரதமரான லீ சியென் லூங் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
    • பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் என லீ சியென் லூங் கூறி உள்ளார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 3-வது பிரதமரான இவர் கடந்த 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபகாலமாக இந்த கட்சியின் மந்திரி மற்றும் எம்.பி.க்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக 2 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்தநிலையில் பிரதமர் லீ சியென்னும் அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் தான் பதவி விலகும் அதேநாளில் லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்பார் எனவும் அவர் கூறி உள்ளார்.

    இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் `எந்தவொரு நாட்டுக்கும் தலைமை மாற்றம் ஒரு முக்கியமான தருணம்' என அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி.
    • சிங்கப்பூரின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து.

    சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×