என் மலர்
நீங்கள் தேடியது "sit-in protest"
- 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
- 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
வால்பாறை,
வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த ஒப்பந்ததாரர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 23-ந் தேதிக்குள் நிலுவை தொகை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
- 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் வசிக்கும் ஒருவர், அவரது வீட்டை விரிவாக்கம் செய்வதற்காக,தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.28லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் ரூ.13 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். இதற்கிடையே கொரோனா பாதிப்பு, தொழில் நஷ்டம் உள்ளிட்ட காரணங்களால், பாக்கி தொகையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த அவர் நிதி நிறுவனத்தில் கால அவகாசம் கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 31 வரை அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், கெடு தேதி முடிந்ததால் நிதி நிறுவனத்தினர், நீதிமன்ற உத்தரவு பெற்று அவரது வீட்டை ஜப்தி செய்வதற்காக சம்பவத்தன்று போலீசார் உடன் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உள்பக்கமாக கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதி நிறுவனத்தார், மேலும் 7 நாட்களுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தனர். இதையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
- செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர்.
- கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுமதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுவதில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தினால் எப்படி மக்கள் பிரச்சனையை பேசுவது. எங்களது வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டும் இதுவரை நிறைவேற்றி தரவில்லை என பேசினர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் சாந்தி, மலர்க்கொடி, வனிதா சஞ்சீவ் காந்தி, காந்தி ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி அலுவலகத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால் கூட்ட அரங்கு இருட்டாக காணப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர். இதனால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.