என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sj surya"

    • நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது.


    பொம்மை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை (ஜூன் 4) காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார். இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். 


    • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலர் வைரலானது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி,'பொம்மை' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'இந்த காதலில்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.



    • இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.


    பொம்மை

    பொம்மை

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'பொம்மை' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் செல்வராகவன் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
    • செல்வராகவன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக பிரபலம் ஒருவரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    அஜித் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான 'வாலி' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    பொம்மை

    பொம்மை

    இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் 'பொம்மை' படத்தின் ஸ்னீப் பீக் வீடியோவை பதிவிட்டு, என்ன ஒரு நடிப்பு! புல்லரிக்கிறது என்று எஸ்.ஜே. சூர்யாவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றுள்ளது.

    ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொம்மை’.
    • இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அஜித் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'வாலி' படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கள்வனின் காதலி, வியாபாரி, நண்பன், மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    இந்நிலையில் படவெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது, நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது, 'பொம்மை' திரைப்படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் வரும் காதல் கதையே வித்தியாசமாக இருக்கும். இயக்குனர் ராதா மோகன் சாருக்கு தான் அந்த பெருமை சேரும். பிரியா பவானி சங்கர் படத்தில் பொம்மையாக நடித்துள்ளார், ஆனால் நிஜத்தில் அவர் பார்ப்பதற்கும் பொம்மை தான் அவ்வளவு அழகு. படத்தில் நடித்துள்ள அத்தனை கதாபாத்திரமும் சிறப்பாக வந்துள்ளது.


    யுவன் சாரின் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருந்தது. படப்பிடிப்பின் பாதியிலேயே கொரோனா வந்துவிட்டது, ஆனாலும் அது படத்திற்கு உதவியாகத்தான் இருந்தது. படத்தின் பின்னணி இசைக்காகவே படத்தைப் பார்க்கலாம் நான் அதற்கு உறுதி அளிக்கிறேன். இயக்குனர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார். இந்த படத்தின் காட்சிகள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்று நம்புகிறேன்.  இந்த படம் உணர்வுகளின் அடிப்படையில் உருவான படம். இந்தப் படத்தை மக்களிடம் கொடுத்து விடுகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்று கூறினார்.


    மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் பேசியதாவது, 'பொம்மை' ஜூன் 16-ஆம் தேதி வருகிறது. நிறைய ஆசைப்பட்டு செய்த படம். மனதுக்கு நெருக்கமான படம். இது ராதா மோகன் சாரின் படம் அவ்வளவுதான். ஒவ்வொரு காட்சியிலும் அவர் வைக்கும் உயிரோட்டம் அப்படியே தெரிந்தது. அவர் சொல்லித் தந்ததைச் செய்தாலே போதும். ஒரு நல்ல மனிதராக அவருடன் பழகியது சந்தோஷமான அனுபவம். எஸ்.ஜே. சூர்யா சாருடன் இரண்டாவது படம், இதில் தயாரிப்பாளராகவும் இருந்தார்.  ஒரு பக்கம் நெருப்பாக இருப்பார் இன்னொரு பக்கம் கூலாக நடிப்பார். ஒவ்வொரு டேக்கிலும் வித்தியாசமாகத் தரப் போராடுவார். எனக்கு நந்தினி கேரக்டர் தந்ததற்கு ராதா மோகன் சாருக்கு நன்றி. படம் கண்டிப்பாக நல்ல படைப்பாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்று பேசினார்.

    • நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிகர்தண்டா 2 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் "ஜிகர்தண்டா". சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.



    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்தது.



    இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதில், தியேட்டரில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
    • ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார்.

    மதுரை:

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர் கடந்த 7-ந்தேதி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன், மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் தூய்மை பணியாளர் மூச்சுத்திணறி இறந்ததால் ஒருவிதமான பதற்றம் நிலவுவதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

    மேலும் இதனை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறார் எனவும் கூறியிருந்தார். இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, சென்னையில் வசித்த எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    பின்னர் அவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது. தற்போது இந்த ஜாமின் நிபந்தனையை மாற்றி அமைக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் எஸ்.ஜி.சூர்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனது குடும்பத்தினர் சென்னையில் உள்ளனர். வாய் பேசமுடியாத தாய், 100 வயதான தாத்தா உள்ளனர். அவர்களை நான் தான் கவனிக்க வேண்டும். எனவே, சென்னையிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடும் வகையில் ஜாமின் நிபந்தனையை மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    முடிவில், நிபந்தனை ஜாமினில் உள்ள எஸ்.ஜி.சூர்யா சென்னை சைபர் கிரைம் போலீசில் நாள்தோறும் காலை கையெழுத்து இட அனுமதி வழங்கி நீதிபதி செய்து உத்தரவிட்டார்.

    • இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் 'ஜிகர்தண்டா'. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.


    8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 'டேய் இது சினிமா டா' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • விஷால் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இன்று (செப்டம்பர் 15) திரையரங்குகளில் வெளியானது.


    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார்.

    • எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாலி’.
    • இப்படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது.

    இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு 'வாலி' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் இந்தி உரிமை போனி கபூருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கதை எழுதியவற்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணத்தையும் எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்யாததால் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளருக்கு தான் சொந்தமானது அதனால் இப்படத்தின் இறுதி ரீமேக் வேலையை துவங்குவதற்கு இடைக்கால அனுமதியை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்களை பதிவு செய்யும் நீதிமன்றத்தில் நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர் முன்பு இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்த விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிகர்தண்டா -2.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஜிகர்தண்டா 2 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் 9-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா -2 படத்தின் முதல் பாடலுக்கு நடனமாட நேரம் நெருங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
    • இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் வெளியாகியுள்ளது. விவேக் வரிகளில் தீ மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.



    ×