என் மலர்
நீங்கள் தேடியது "slipper"
- கவுன்சிலர் தேர்தலின்போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருந்தார்.
- அவற்றை நிறைவேற்றாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.
கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
இதற்கிடையே, அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.
இந்நிலையில், நேற்று நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அசாம் முன்னாள் முதல்வரின் மகள், தனது கார் ஓட்டுனரை செருப்பால் அடிக்கும் வீடியோ வைரல்
- அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் ஓட்டுநரை செருப்பால் வீடியோ வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், கார் ஓட்டுநர் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அப்போது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார்.
அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹாஸ்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள், "எனது ஓட்டுநர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீடு கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.
பிரபுல்ல குமார் மஹந்தா, 1985 முதல் 1990 மற்றும் 1996 முதல் 2001 வரையில் 2 முறை அசாம் முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.