என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "slug 102819"
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாமியப்பாநகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
செந்தில்குமார் நாகை மாவட்டம் வாய்மேட்டில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.60 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
அவரால் அசல் மற்றும் வட்டியை கட்ட முடியவில்லை. அவரை கடன் கொடுத்தவர்கள் தொல்லைபடுத்தி வந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூறினார். அதனை கேட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.
இதனால் மனம் மாறிய செந்தில்குமார் குடும்பத்துடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு காரில் சென்றார்.
இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டையை அடுத்த பாண்டிசத்திரம் என்ற இடத்திற்கு சென்ற செந்தில்குமார் அங்கு காரை நிறுத்தினார். பின்னர் காருக்குள் இருந்துகொண்டு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் காருடன் எரிந்து அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் கிடந்த செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பணை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துப்பேட்டை அருகே புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து விற்பணை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஜாம்பவான் ஓடையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சுப்பிரமணியன், ராஜசேகர், முத்து, கணேசன், குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாகர் குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராஜமாள் (வயது 65).
இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வளவனார் ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தடுமாறி ஆழத்திற்கு சென்று மூழ்கி இறந்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ராஜமாள்ளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் வடகாடு ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மதன் (வயது 25). கூலித்தொழிலாளி. இந்தநிலையில் கஜா புயலால் மதனின் வீடு முற்றிலும் சேதமானது. இதனால் அவர் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்கி வந்தார்.
நேற்று முகாமில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் பகுதி வேதாரண்யம் மெயின் ரோட்டில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை உள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத இந்த டாஸ்மாக் கடையை கடந்த ஜனவரி 6-ந்தேதி மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றனர். இந்நிலையில், நேற்று கடையை ஊழியர் திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 2,600 பிராந்தி பாட்டில், 13 பீர் பாட்டில், ரூ.3700 ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 2 லட்சத்து 93 ஆயிரமாகும். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். இதில் இரவில் வந்த மர்ம நபர்கள் சரக்குகளை லாரியில் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து டாஸ்மாக் கடை சூபர்வைசர் சத்தியமூர்த்தி முத்துப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முத்துப்பேட்டை வெள்ளகுளம் சுடுகாடு எதிரே டாஸ்மார்க் கடை உள்ளது. இன்று காலை அந்த பகுதியில் சென்ற சிலர் பார்த்தபோது டாஸ்மார்க் கடையின் பூட்டு உடைத்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் இருந்த ஆயிரக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் டாஸ்மார்க் சூப்பர்வைசர் உத்தராபதி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கற்பகநாதர் குளம் பகுதியை சேர்ந்தவர் உத்தராபதி. இவரது மனைவி கலைராணி (வயது 37).
உத்தராபதி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் மகள் சடங்கு நிகழ்ச்சிக்கு உத்தராபதியும், கலைராணியும் சென்றனர். அப்போது அவர்களுகிடையே மீண்டு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கலைராணி தங்களது வீட்டுக்கு சென்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை திருவாரூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கலைராணியின் உறவினர் அண்ணாதுரை முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை கிராமத்தில் சுக்ரீவன் வழிபட்டு வணங்கிய பழமையான சிவன்கோயில் உள்ளது. வடிவழகி என்ற சவுந்தரநாயகி அம்மன் உடனமர் சவுந்தரேஸ்வரசுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கும் இக்கோயிலில் திருப்பணிகள் நீண்ட நாட்களாக பக்தர்கள் உதவியுடன் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலை வழக்கம்போல் பணியாளர்கள் கோவிலை திறந்து அன்றாட பூஜைக்கு தயாராகினர். அப்போது குருக்கள் பாலாஜி வந்திருந்த பக்தர்களுக்கு அர்ச்சனை செய்து வந்தார். அப்போது 30வயது மதிக்கக்கூடிய வாலிபர் ஒருவர் அர்ச்சனை செய்துவிட்டு சன்னதியை சுற்றிவந்தார். இந்த வேளையில் குருக்கள் பாலாஜி பிரசாத தயாரிப்பில் ஈடுபட்டார். இதனை நோட்டமிட்ட வாலிபர் திடீரென்று கருவறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கட்டிங் பிளேடால் வடிவழகி அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயினை துண்டித்து எடுத்து கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டார்.
இதனை பார்த்த குருக்கள் சந்தேகம் அடைந்து சாமியை பார்த்தபோது கழுத்தில் இருந்த தங்க செயின் திருட்டு போனது தெரியவந்தது. குருக்கள் சத்தமிட்டு மக்களை கூப்பிட்டதும் மர்மநபர் தப்பி சென்று விட்டார்.
இதனையடுத்து கோவில் செயல் அலுவலர் ஜவகர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததில் அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 29-ந்தேதி காலை அறந்தாங்கியில் வைத்து மனோகரன் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், ஆயுதப்படை காவலர் பாலமுத்து ஆகியோர் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி கைதி மனோகரன் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் பல்வேறு குழுவாக பிரிந்து சென்று தேடி வருகின்றனர்.
கைதி தப்பியோடிய சம்பவம் முத்துப்பேட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(48). இவர் கடைத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் செல்வராஜ் கடையில் இருந்தபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் 20 உள்ளது. திருமணத்திற்கு மொய் கவரில் வைக்க 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
செல்வராஜிம் 100 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அப்போது செல்வராஜ் கடை கல்லாவில் இருந்த பணத்தை கவனித்த வாலிபர்கள் மளிகை சாமான்கள் வாங்குவது போல் நடித்து 10 கிலோ வெங்காயம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து அருகில் இருந்த கடையில் செல்வராஜ் பல்லாரியை எடுக்க சென்றபோது வாலிபர்கள் கடை கல்லாவில் இருந்த ரூ.46 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றனர். பின்னர் அங்கு வந்த செல்வராஜ் வாலிபர்கள் 2 பேரையும் காணாததால் குழப்பமடைந்தார்.
கடையில் கல்லாவில் இருந்த பணத்தை பார்த்த போது அது கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிய அடைந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களையும் தேடிவருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் காரைக்கால் மதகடி தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மபிரபு. இவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னத்தூர் வளைவு அருகே மணல் டிராக்டர் வந்து கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்குநேர் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அமுதா தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த அவரின் கணவர் தர்மபிரபுவை அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் தம்பிக்கோட்டை மேலக்காடை சேர்ந்த முருகானந்தம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார். அவர் போது, மத கலவரத்தை தூண்டும் வகையிலும், மேலும் மாவட்ட நிர்வாகத்தை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் மீது மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வர்த்தகக்கழக தலைவர் மெட்ரோமாலிக் தலைமை வகித்தார்.
திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் மற்றும் பல்வேறு கட்சியினர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன், நகர செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.