search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் கே.சிவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள் செயல்படுத்தப்படவேண்டும்.



    75-வது ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #ISRO
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ‘ககன்யான்’ திட்டம் மூலம் 2021-ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்காக விஞ்ஞானிகளை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது.

    மேலும் பூமி கண்காணிப்பு, காலநிலையை முன்கூட்டி அறிந்து கொள்வது, தொலைதொடர்பு வசதி போன்ற பல்வேறு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தி அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. தொடர்ந்து பாதுகாப்புக்கான செயற்கைகோள்களை அதிக அளவு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    பாதுகாப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவிவருகிறது. அனைத்து வகை செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மாறி உள்ளது.

    தற்போது நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது. இதனை படிப்படியாக விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது பூமி கண்காணிப்புக்கான 8 செயற்கைகோள்கள் அடுத்த மாதத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.



    ரேடார்களை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்’ வகை செயற்கைகோள் மற்றும் ‘கார்ட்டோசாட்-3’ வரைபட செயற்கைகோள் பாதுகாப்பு துறை பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளன. ஏற்கனவே ஏவப்பட்ட ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்களில் இருந்து துல்லியமான தகவல் களை பெறமுடியாததால் தற்போது ஏவப்பட உள்ள செயற்கைகோள்களில் துல்லியமான தரவுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக இந்த செயற்கைகோள்கள் மூலம் இரவு நேரத்திலும், மழைக்காலங்களிலும் தரவுகளை தெளிவாக பெற முடியும். எல்லையை கண்காணிக்க இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். செயலிழந்த செயற்கைகோள்களுக்கு பதிலாக தான் புதிய செயற்கைகோள்கள் ஏவப்பட இருக்கிறது.

    ரீசாட்-2பி மே மாதமும், கார்ட்டோசாட்-3 ஜூன் மாதமும், ரீசாட்-2பிஆர்1 ஜூலை மாதமும், ஜீசாட்-1 (புதியது) செப்டம்பர் மாதமும், ஆர்1சாட்- 2பிஆர்2 அக்டோபர் மாதமும், ஜி1சாட்-2 மற்றும் ஆர்1சாட்-1ஏ நவம்பர் மாதமும், ஜி-சாட்-32 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள். #ISRO
    ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. #ISRO #PSLVC45
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இஸ்ரோவின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பார்க்க முடியும்.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவப்படுவதை சாதாரண பொதுமக்களும் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து ராக்கெட் விண்ணில் பாய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கலாம்.

    வருகிற 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதை பொதுமக்கள் தனி அரங்கில் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசிக்கலாம்.

    இதுகுறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங் கூறியதாவது:-



    ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் தனி அரங்கு பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கேமரா, போன்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

    இதில் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வரும் காலத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அரங்கு விரிவுப்படுத்தப்படும். மேலும் அங்கு விண்வெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இனி ‘விண்வெளி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியரை சென்றடைய வேண்டும் என்ற இஸ்ரோ தலைவர் சிவனின் எண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    ராக்கெட் ஏவுகணை பொதுமக்கள் நேரில் பார்ப்பதால் குறைந்தபட்சம் சிலர் இந்திய விண்வெளி திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்புகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #PSLVC45
    தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    புதுடெல்லி:

    நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

    இந்த செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
     


    ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘I 2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.

    கடந்த இரண்டு மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைக்கோள் இதுவாகும். கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கைக்கோள், கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    இந்த ஆண்டு மட்டும் 32 ஏவுகணைகள் தயார் செய்யப்பட்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். #PSLVE44 #ISRO
    திருமலை:

    இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

    ஏவுகணைகள் செலுத்தும் முன்பாக இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இன்று இரவு கலாம் சாட்லைட் 2 விண்ணில் ஏவப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். அதைத் தொடர்ந்து சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பி.எஸ்.எல்.வி.இ44 என்ற கலாம் சாட்டிலைட் 2 இன்று இரவு 11.37 மணிக்கு விண்ணில் ஏவப்படும்.

    மேலும் இந்த ஆண்டு மட்டும் 32 ஏவுகணைகள் தயார் செய்யப்பட்டு விண்ணில் செலுத்தப்படும்.

    இவற்றில் மிகப்பெரிய விண்கலமான சந்திராயன் 2 அடங்கும். அது மட்டுமன்றி உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும்.

    அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PSLVE44 #ISRO

    இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி 8, 9-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களில் மாவட்டத்துக்கு தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.

    சிறிய ரக செயற்கை கோள்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விண்வெளி படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படும்.

    பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கடைசி பகுதியில் மாணவர்கள் உருவாக்கும் சிறிய ரக செயற்கைகோள்கள் பொருத்தி சோதனை செய்யப்படும்.

    பி.எஸ்.எல்.வி.சி-44 ராக்கெட் வருகிற 24-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு 17 செயற்கைகோள்கள், 14 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்.

    சிறிய ரக செயற்கைகோளான எஸ்.எஸ்.எல்.வி. முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் ஏவப்படும்.

    அதேபோல விண்ணில் இருந்து பூமிக்கும், பூமியிலிருந்து விண்ணுக்கும் மறு சுழற்சி ராக்கெட் சோதனை செய்து பார்க்கப்படும்.

    ககன்யான் என்ற மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு ஜூலையில் ஒரு விண்கலமும், 2021-ம் ஆண்டு டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

    ஒரு பயணத்தில் 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் 7 நாட்கள் தங்கி இருப்பார்கள். இதற்காக தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அவர்களுக்கு 6 முதல் 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

    சந்திராயன்-2 ஏவப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம், அதில் புதிய யுக்திகளை சேர்த்து நீண்ட காலம் செயல்படுவதற்கு பணிகள் நடக்கிறது. அதற்கு பல கட்ட சோதனை நடைபெறுவதால் தாமதம் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan

    மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில், இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. #ISRO #ISROSivan
    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக, இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ள புதிய திட்டம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-



    நாட்டின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிப் பணியில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் தற்போது இந்தியாவின் எதிர்காலமான  இளைஞர்கள் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பினை உருவாக்க உள்ளது. இதற்கான  தொடக்கமாக இஸ்ரோ மாணவர்களுக்கென திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நானே நேரடியாக மாணவர்களை சந்தித்து பேசவுள்ளேன்.

    இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு  இஸ்ரோ அமைப்பின் மூலம் தகுந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் சிறிய செயற்கைக்கோள்களை செய்ய அனுமதித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படைப்பினை இஸ்ரோ நிறுவனமே வாங்கிக் கொள்ளும்.

    இதன் முதல் கட்டமாக, விண்ணில் ஏவ தயாராகி வரும் பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்டுடன், முதல் முறையாக மாணவர்களின் செயற்கைக்கோளும் சோதனைக்காக  இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

    இந்த சிறிய செயற்கைக்கோளுக்கு “கலாம் சாட்” என பெயரிடப்படும். அனைத்து சோதனைகளுக்கான செலவுகளுக்கும் இஸ்ரோவே பொறுப்பேற்கும். இத்திட்டம் அனைத்து மாநில அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROSivan


    ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.

    இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.



    இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.

    இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.

    விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.

    இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

    இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார். #ISRO #Sivan 
    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய ‘ரோவர்’ எந்திரத்துடன் சந்திரயான்-2 விண்கலம் ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #Chandrayaan2 #ISRO #Sivan
    பெங்களூரு :

    இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நிலவில் தரை பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் சில சோதனைகள் இன்னும் முடிவடையாததால், சந்திரயான்-2 விண்கலம் மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதில் ரோவர் நகரும் ஆய்வு எந்திரம் பொருத்தப்படும். அந்த வாகனம், நிலவில் தரையில் இறங்கி ஆய்வு செய்யும். அது 500 மீட்டர் சுற்றளவுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.



    இஸ்ரோ வெளிநாடுகளிலும் தரை கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது. அது ரஷியா, ஜப்பான் நாடுகளாக இருக்கலாம். இஸ்ரோ டி.வி.யை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கான பூர்வாங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் இஸ்ரோ டி.வி. தொடங்கப்படும்.

    பூடான் நாடு, தங்கள் நாட்டில் தரை கட்டுப்பாட்டு மையத்தை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆதித்யா விண்கலம் 2020-ம் ஆண்டு விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது சூரியனை ஆய்வு செய்யும்.

    இவ்வாறு சிவன் கூறினார். #Chandrayaan2 #ISRO #Sivan 
    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #GSLVF11 #GSAT7A #ISRO
    ஸ்ரீஹரிகோட்ட்டா:
     
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது.


    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட் டவுன்’ நேற்று தொடங்கியது.

    49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  #GSLVF11 #GSAT7A #ISRO
    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.



    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

    5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    ×