என் மலர்
நீங்கள் தேடியது "slug 106186"
- போலீஸ் உதவியுடன் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை
- மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்களை தனியார் ஆக்கிர மித்து வைத்துள்ளனர். அந்த நிலங்களை அறநிலை யத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.
கரியமாணிக்கப்புரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் நாகர்கோவிலை அடுத்த வேதநகர் பகுதியில் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது.
இதனை புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார். மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி எந்த விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு இருந்தார்.
இந்நிலையில் அறநிலை துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் சிறப்பு தாசில்தார் சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அலுவலர் ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இன்று அந்த நிலத்தை மீட்டனர்.
அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.
- மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
- தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு தினமும் ஒரு குறிப்பிட்ட வேளையில், துர்க்கை அம்மனை வழிபடும்போது, நாம் வைக்கும் கோரிக்கைகளை அம்பாள் நிறைவேற்றித் தருவார் என்பது ஐதீகம். அதோடு திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து வெகு விரைவாக விடுபடுவார்கள் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை. துர்க்கை அம்மனை எந்த தினங்களில் எப்படி வழிபடலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
ஞாயிறு: ஆலயங்களில் காட்சி தரும் துர்க்கைக்கு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும். அப்போது சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகும். அதோடு எல்லா நலன்களும் உண்டாகும்.
திங்கள்: திங்கட்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள், துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும். மேலும் வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கும்.
செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
புதன்: மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்தியம் படைத்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலும் ரத்த சம்பந்தமான நோய் ஏதாவது இருந்தால், அது நீங்கும்.
வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம் பழம் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். மேலும் இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் துர்க்கையை வழிபட வேண்டும். இது மற்ற நாட்களை விட, மிகவும் ஏற்றம் தரும் காலம் ஆகும். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும்.
சனி: சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலைவாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும்.
- திருச்சி உறையூரில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன்.
- இந்த 108 போற்றியை சொல்லி அம்மன் வழிபட்டால் துன்பம் பறந்தோடும்.
ஓம் சக்தியே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் வெக்காளி அம்மையே போற்றி
ஓம் ஆதி சக்தியே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் ஏழைகளின் தாயே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மதுரையை எரித்தாய் போற்றி
ஓம் ஈசனின் தேவியே போற்றி
ஓம் இடபாகம் அமர்ந்தாய் போற்றி
ஓம் தில்லைகாளியே போற்றி
ஓம் சிறுவாச்சூர் காளியே போற்றி
ஓம் அம்மை உமையே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் மாயனின் தங்கையே போற்றி
ஓம் மணி மந்திரகாளியே போற்றி
ஓம் ஆனந்த நடனமாடும் தேவியே போற்றி
ஓம் செங்கண்மா தங்கையே போற்றி
ஓம் சிதம்பரம் காளியே போற்றி
ஓம் வேலனின் தாயே போற்றி
ஓம் வேல் தந்த வித்தகியே போற்றி
ஓம் சந்தன காப்பில் சிரிப்பாய் போற்றி
ஓம் சங்கரன் நாயகியே போற்றி
ஓம் உறையூரின் தேவியே போற்றி
ஓம் உள்ளத்தில் நிறைந்தாய் போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் கருணை உள்ளம் கொண்டாய் போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் காரணி பூரணி போற்றி
ஓம் தக்கன் கடை மொழிதாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரியே போற்றி
ஓம் அங்கையர் கண்ணியே போற்றி
ஓம் ஆதிபராசக்தியே போற்றி
ஓம் வெட்ட வெளியில் அமர்ந்தாய் போற்றி
ஓம் வெக்காளி தேவியே போற்றி
ஓம் மோகத்தை அழிப்பாய் போற்றி
ஓம் முக்கண்ணன் தேவியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிக்கலை தீர்ப்பாய் போற்றி
ஓம் மக்கள் மனதில் நிறைந்தாய் போற்றி
ஓம் மழலைச் செல்வம் தருவாய் போற்றி
ஓம் தத்துவ பொருளே ஆனாய் போற்றி
ஓம் சாம்பவி சங்கரி மனோன்மணியே போற்றி
ஓம் சரணாபுயத்தி சம்ஹாரியே போற்றி
ஓம் நமோ பகவதி உத்தமி போற்றி
ஓம் பஞ்சாசர பகவதியே போற்றி
ஓம் எஞ்சாகரத்தி இன்பதாண்டவியே போற்றி
ஓம் ஆணவம் அகற்றிஆட்கொள்வாய் போற்றி
ஓம் நவ வடிவான நாராயணியே போற்றி
ஓம் ஜோதி சுடராய் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சிவ சிவ சிவசங்கரியே போற்றி
ஓம் தந்தையும் தாயும் ஆனாய் போற்றி
ஓம் இடைப்பின் தலையில் இருப்பாய் போற்றி
ஓம் கடை சுழி முனையில் கலந்தாய் போற்றி
ஓம் முச்சுடராகி முளைந்தாய் போற்றி
ஓம் மூலத்தில் நின்ற முதல்வியே போற்றி
ஓம் ஜாலங்கள் புரியும் சமர்ப்பியே போற்றி
ஓம் ஒரெழுத்தான உத்தமியே போற்றி
ஓம் ஈரெழுத்தான ஈஸ்வரியே போற்றி
ஓம் மூன்றெழுத்தான முக்கண்ணியே போற்றி
ஓம் நான்கெழுத்தான நாராயணியே போற்றி
ஓம் ஐந்தெழுத்தான அம்பிகையே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் அகந்தையை அழிக்கும் அன்னையே போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணவதியே போற்றி
ஓம் குருவாய் விளங்கும் கோலவிழியே போற்றி
ஓம் சின்மயமாக சிரிப்பாய் போற்றி
ஓம் தன் மயமாக தனித்தாய் போற்றி
ஓம் வேதாந்த மால வித்தகியே போற்றி
ஓம் வேற்றுமையில்லா விமலியே போற்றி
ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி
ஓம் அரணோடு அறியாய் அமர்ந்தாய் போற்றி
ஓம் பரனோடு பறைவாய் இருப்பாய் போற்றி
ஓம் மோன பாத்திரத்தின் முடிவே போற்றி
ஓம் ஞானஷேத்திர வடிவே போற்றி
ஓம் நடுநிலை ஆன நான்மறை போற்றி
ஓம் கொடுவினை அகற்றும் குண்டலி போற்றி
ஓம் சுத்த சிவத்தில் ஜொலிப்பாய் போற்றி
ஓம் சக்தி சிவமாய் இருப்பாய் போற்றி
ஓம் சுக சொரூப சூழ்ச்சியே போற்றி
ஓம் அகண்ட பூரணி ஆனவள் போற்றி
ஓம் மாலை திருமகள் வானீயே போற்றி
ஓம் அன்னையே வடிவுடைய அம்மையே போற்றி
ஓம் கன்னியாய் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் மாலை திருமகள் வடிவே போற்றி
ஓம் ஆட்சியாய் நீலாய ஆட்சியே போற்றி
ஓம் நாரணி பூரணி நாயகி போற்றி
ஓம் ஆரணியாம் விசாலாட்சியே போற்றி
ஓம் கன்னியாம் பத்ரகாளியே போற்றி
ஓம் மண்ணும் துர்க்கை ஆனாய் போற்றி
ஓம் ஏந்திர வித்தைகள் செய்பவள் போற்றி
ஓம் மந்திர சொரூபினி மவுலியே போற்றி
ஓம் மாய குண்டலி மகேஸ்வரியே போற்றி
ஓம் ஆயிரம் நாமங்கள் கொண்டாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவுடை நண்பனே போற்றி
ஓம் மணவாக்கு கடந்த மாகாளியே போற்றி
ஓம் சர்வ சம்ஹாரி சக்தியே போற்றி
ஓம் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாய் போற்றி
ஓம் மன்னுயிர் குயிராய் இருப்பாய் போற்றி
ஓம் மகிமை மிகு காஞ்சி காமாட்சியே போற்றி
ஓம் கனகம் பொழிகின்ற காமகோட்டத்தே போற்றி
ஓம் மணங்கவர் காயத்ரி மாமண்டபத்தே போற்றி
ஓம் வெற்றி கம்பம் விளங்கும்மாலையத்தே போற்றி
ஓம் வேதனை நீக்கும் வெக்காளி அம்யேமை போற்றி.
- புதுக்கோட்டை நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள்.
- கரூர் மாரியம்மன் காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.
1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது.
2. மதுரை : மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்தினால் நோய் மறைகிறது.
3. மதுரை- எல்லீஸ் : மதுரை- எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம் மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள்.
4. புதுக்கோட்டை : புதுக்கோட்டை நார்த்தா மலையில் முத்துமாரியம்மன் திருவருள் புரிகிறாள். இங்கு அக்கினி காவடி எடுத்தால் தீராத நோய் தீருகிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
5. நீலகிரி : நீலகிரி, குன்னூரில் தந்தி மாரியம்மன் அருளாட்சி புரி கிறாள். தண்ணீர் பஞ்சம் ஏற் பட்டால் இந்த மாரியிடம் மன முருக வேண்டிக்கொள்ள, உட னே பெருமழை பெய்கிறது.6. ஊட்டி : ஊட்டியில் மகாமாரி, மகா காளி இருவரும் ஒரே கருவறை யில் அருள்கின்றனர். இங் குள்ள காட்டேரியம்மன் சந்நதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு, தோஷங்கள், நோய்கள், பில்லி சூனியம் விலக்குகின்றன.
7. நாமக்கல் -ராசிபுரம் : நாமக்கல்- ராசிபுரத்தில் நித்ய சுமங்கலி மாரியம்மனை தரிசிக்கலாம். வருடம் முழுதும் அம்பிகையின் எதிரே சிவாம்சமான கம்பம் நடப்பட்டிருப்பதால் இப்பெயர். ஐப்பசி மாதம் புதுக் கம்பம் நடும்போது தயிர்சாதம் நிவேதிப்பர். அந்த தயிர்சாத பிரசாதத்தை உண்பவர்களுக்கு அடுத்த வருடமே மழலைப்பேறு கிட்டுகிறது.
8. கோவை : கோவையில் ஆட்சிபுரியும் தண்டு மாரியம்மன், குடும்ப வளம் பெருகவும் தீராத நோய்கள் தீர்ந்திடவும் அருள்கிறாள்.
9. சமயபுரம் : சமயபுரம் மாரியம்மன், மாசி மாதம் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக் கடனாகச் செலுத்துகிறார்கள்.
10. மணப்பாறை : திருச்சி மணப்பாறையி லுள்ள மாரியம்மன் கோவிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நதியின் பின்னே உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.
11. திருப்பூர் : கோடீஸ்வரிமாரி என்ற கோட்டைமாரி திருப்பூரில் அருள்கிறாள். கருவறையில் அம்மனின் இருபுறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி இருவரும் அம்மனைப் போலவே சுயம்பு வாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அன்னையிடம் பூவாக்கு கேட்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு.
12. தேனி -பெரியகுளம் : தேனி-பெரிய குளத்தில் உள்ள கவுமாரியம்மனுக்கு விவசாயம் செழிக்க தானியங்கள், காய்கறிகள், கனிகளைப் படைக்கின்றனர்.
13. கரூர் : கரூர் மகா மாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக்கிடைக்க அருள்கிறாள்.
14. திண்டுக்கல் : திண்டுக்கல் -கோட்டை மாரியம்மனை பிரார்த்தித்து உப்பையும் மஞ்சளையும் கொடிமரத்தில் சமர்ப்பித்தால், வேண்டுதல் நிறைவேறுகிறது.
15. தஞ்சை -புன்னைநல்லூர் : தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், துளஜாமன்னர் மகளின்கண்நோய் தீர்த்தவள். புற்றுருவாய் இருந்த இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதா சிவப்பிரம்மேந்திரர்.
16. காரைக்குடி : காரைக்குடி, முத்துப்பட்டினம், மீனாட்சிபுரத்திலுள்ள முத்துமாரியம்மனுக்கு தக்காளி பழத்தை காணிக்கையாக்கி, தக்காளி பழச்சாறால் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
17. உடுமலைப்பேட்டை : கோவை- உடுமலைப் பேட்டை மாரியம்மன் ஆலயத்தில், மார்கழி திருவாதிரை அன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
18. ஈரோடு : ஈரோடு- பெரிய மாரியம்மன், வெப்பநோய்களை நீக்குகிறாள். அம்மை நோய் கண்ட அவர்களை அன்னை குணப்படுத்துகிறாள்.
19. கோபிசெட்டிபாளையம் : கோபிசெட்டிபாளையம் சாரதா மாரியம்மன் ஆலயத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வருவதை தரிசித்தால் வாழ்வு வளம் பெறுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
20. கருங்கல்பாளையம் : ஈரோடு-கருங்கல் பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அருள்கிறாள். இத்தல விபூதி பிரசாதத்தை நெற்றியில் பூசியும் தண்ணீரில் கரைத்தும் அருந்தினால் நோய்கள் நீங்குகின்றன.
- ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது.
- செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை சிறப்பானது.
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.
ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.
மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டி னால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
- பீங்கான் சிலை கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைப்பு
- சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தில் சில வாலிபர்கள் அய்யன்குளத்தில் நீராட சென்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் குளித்தனர். அப்போது திடீரென ஒருவர் காலில் ஏதோ பொருள் இடறி விட்டது அதனை மூழ்கி எடுத்தபோது அது ஒரு பெண் தெய்வம் சிலை என்று தெரிய வந்தது.
இதனையடுத்து குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலருக்கும், இரணியல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து பீங்கான் சிலையினை கைப்பற்றி கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பூட்டு மர்ம வேதிப் பொருள் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது
- போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் ஆசிரமம் அருகே 18-ம் படி பழவூர் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 தினங்களக்கு முன்பாக திருவிழா நடைபெற்றது.
நேற்று பூசாரி இசக்கிவேல் பூஜை வைப்பதற்காக கோவில் நடையை திறக்க வந்தார். அப்போது கோவிலின்கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர்.
உடைக்கப்பட்ட பூட்டு இரும்பு தகவுகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது உடைக்கப்பட்ட பூட்டு மர்ம வேதிப் பொருள் கொண்டு உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அந்த இடத்தில் கெமிக்கல் பொருட்கள் கீழே சிதறி கிடந்தது. அம்மனின் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பூஜைப் பொருட்கள், ரேடியோ, மின் அடுப்பு போன்ற பொருட்கள் திருட்டு போய் உள்ளது. இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த பகுதியில் ரோந்து போலீசார் ரோந்து பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருக்கும் போது திருட்டு நடந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வருடமும் கோவில் திருவிழா நடந்து முடிந்து 15-நாளில் இதே போல் 2 பவுன் நகை உள்பட பல பொருட்கள் திருட்டு போய் இருந்தன. ஆகையால் முதலில் செய்து குற்றவாளிகள் தான் இதையும் செய்து இருக்கலாம் என போலீசார் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது.
- நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மா விளக்கு போடுங்கள்.
இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகும். இன்று அம்பாளை ஆராதிக்க வேண்டும். காலையில் ஆலயத்துக்கு சென்று ஐந்துமுக திரி வைத்து விளக்கு ஏற்றுங்கள். நெய்விளக்கேற்றுவது மிக, மிக நல்லது. அம்மனுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அல்லது நினைத்தது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்று மா விளக்கு போடுங்கள்.
அம்பாளுக்கு மிகவும் பிடித்தது செந்நிற மலர்கள்தான். எனவே சிவப்பு நிறத்தில் மலர்களை வாங்கி சாத்துங்கள். குடும்பமாக எல்லோரும் அமர்ந்து, பூஜித்து வணங்குங்கள். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்களப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது நல்லது.
கணவரின் ஆயுள் பெருகும். தடைப்பட்ட மங்கள சுபகாரியங்கள் அனைத்தும் தங்கு தடை இல்லாமல் விரைவில் கை கூடி வரும். வீட்டில் வறுமை நிலை மாறி, சகல செல்வங்களும் பெருகும்.
லலிதா சகஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். பால் பாயாசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இன்று கடைசி வெள்ளிக்கிழமை இவற்றையெல்லாம் கடை பிடித்தால் ஆன்மிக ஞானம் அதிகரிக்கும். ஆத்மார்த்தமான திருப்தி ஏற்படும்.
- ஆடி மாத வழிபாடு அம்மனுக்கு உகந்ததாகும்.
- இந்த வருடம் ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வருகிறது.
ஆடி 26 (12.8.2022)
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது சக்தியின் அம்சமான காமாட்சி அம்மனுக்கு உகந்தது. ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையில் காமாட்சி அம்மனை வணங்கினால் சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுக்கிரன் + ராகு-கேது சம்பந்தத்தால் உருவாகும் சுக்கிர தோஷம் அகலும். ஆண், பெண்களின் தவறான சகவாசங்கள் விலகும். பிரிந்த தம்பதிகள், விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் நேர்ந்து வாழும் அரிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
பொதுவாக ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை வரும். இந்த வருடம் நான்கு வெள்ளிக்கிழமை மட்டுமே வருகிறது. பெண்கள் ஆடி மாதத்தின் எல்லா வெள்ளிக்கிழமையும் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி படித்து மகாலட்சுமிக்கு விரதமிருந்து பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்க சுமங்கலி பாக்கியம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜை, வழிபாடு செய்வதால் பொன், பொருள், செல்வம், தனம், பணம் சேர்க்கை கிடைக்கும். வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினால் சுபகாரியம் நடக்கும்.
- ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது.
- துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது.
சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்து நாலு மணி நேரத்தில் 1 மணி நேரம் ராகுவும், 1 மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுபகாரியங்களைத் தவிர்க்க சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை விரதம் இருந்து வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.
ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1 மணி நேரமாகும். ராகு காலத்தில் விரதம் இருந்து செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்பு மிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குவதே காரணம்.
மங்களன் என்ற பெயர், அங்காரகனாகிய செவ்வாய்க்கு உரியது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற்பலன் தரும். துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத்தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சனைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள்.
- அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று.
சீதளா என்றால் குளுமை என்று பொருள். வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் வெக்கை நோய்களான காலரா சின்னம்மை பெரியம்மை போன்றவற்றை தன்னுடைய குளீர்ச்சியினால் போக்கிவிடும் தெய்வமாக சீதளாதேவியை கொண்டாடுகிறார்கள்.
இவளுக்கு வாகனமாக கழுதையும் கையில் ஆயுதமாக துடப்பமும் தரப்பட்டிருக்கின்றன. உடலை பாதிக்கும் நோய்க்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தி பூரண ஆரோக்கியம் அளிப்பவள் என்பதற்கான குறியீடு துடைப்பம்.
கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. மற்றவர்களின் சுமையை தனதாகக் கருதி அதற்காக யார் மனமுவந்து உதவுகிறார்களோ அவர்களை விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனமே உணர்த்துகிறது.
ஆந்திரா தமிழ் நாடு கர்னாடகா கேரளா போன்ற தென்னிந்திய மானிலங்களில் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடே வட மானிலங்களில் சீதளாஷ்டமி என்ர பெயரில் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாத சப்தமி தினத்தை ஸ்ரீசீதளா சப்தமி என்று அழைப்பார்கள். இன்று (வியாழக்கிழமை) சீதளா சப்தமி தினமாகும். இந்த தினம் நோய்களை தீர்க்க செய்யும் அற்புதமான தினமாகும்.
அம்மனின் பல உருவங்களில் சீதளாதேவி என்னும் வடிவமும் ஒன்று. அதாவது ஒரு சமயம் தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுக்க முடிவு செய்தனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் உதவியால் தீய சக்தியை ஏவினர். இதனால் கடுமையான வெப்பம் காரணமாக உடலில் கொப்பளங்களுடனும், கடும் ஜூரத்துடனும், உடல் வலியுடனும் தேவர்கள் சிரமப்பட்டார்கள்.
தேவர்களின் துயர் துடைக்க சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடம் இருந்தும், கங்கையிடம் இருந்தும் பேரொளி ஒன்று அம்மனாக தோன்றியது. அந்த அம்மனே சீதளா தேவி என்று அழைக்கப்படுகிறாள். இன்று சீதளா தேவியை பூஜை செய்து மாம்பழமும், வெள்ளரிக்காயும், தயிர் சாதமும் நிவேதனம் செய்து அவற்றை தானம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் தானம் மட்டுமாவது செய்யலாம்.
இதனால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நோய்கள் உடனே விலகும். குறிப்பாக அதிக வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், அம்மை நோய் முதலான நோய்கள் விலகும் என்று கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
- மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் தொடக்கம்
- வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி நாளை (31-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி வடிவுடையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்படுகிறது. கோவில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வசந்த மண்டபத்தில் வடிவுடையம்மன் எழுந்தருள்வாள்.
அம்மனுக்கு முளை கட்டிய பயிர்கள், மற்றும் திண்பண்டங்களை வயிற்றில் கட்டி விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் நிகழ்ச்சிகள் இன்று காலை தொடங்கியது. காலை 8.30 மணிக்கு 1008 கலச ஸ்தாபிதத்துடன் விழா தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு யாகசாலை வளர்த்து முதல் கால பூஜை ஆரம்பமாகிறது. நாளை காலை 8.30 மணிக்கு 2-ம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடக்கிறது.
ஆடிப்பூரமான வருகிற 1-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4-ம் கால பூஜை, விசேஷ ஹோமம், மகா சங்கல்பம் நடைபெற உள்ளது. பின்னர் மகாபூர்ணா ஹுதியுடன் யாக சாலை பூஜை நிறைவு பெறும். அதன் பிறகு கலச புறப்பாடு நடைபெறும்.
பின்னர் காமாட்சி அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புஷ்ப அலங்கார பல்லக்கில் காமாட்சி அம்மன் மாட வீதி உலா நடைபெறும்.