என் மலர்
நீங்கள் தேடியது "வர்த்தக போர்"
- சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
- பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல்.
வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா மறுத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். சீனா இதற்கு பதிலடியாக எதிர் வரிவிதிப்பை அறிவித்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்துக்கொண்ட நிலையில் சீன இறக்குமதிகளுக்கான வரி 245 ஆக அதிகரிக்கப்பட்டது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இரு நாடுகளுக்கிடையேயும் வர்த்தக போர் வலுவடைந்து வரும் சூழ்நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் தன்னை போனில் அழைத்தார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்.
அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
- 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்திய ஏற்றுமதிகள் மீதான 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் பேசியதாவது, "இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்ட உள்ளன.
இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாகவே உள்ளது. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் என்று விரும்புகிறாா்" என்று தெரிவித்தார்.
- சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அமெரிக்கா அறிவித்தது.
- சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது.
பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இந்நிலையில் வரிச் சுமையை குறைப்பதாக கூறி சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் 'சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் (வர்த்தக) ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.
- சீன வியாபாரிகள் டிக்டாக்கில் களமிறங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
- அமெரிக்காவில் 100 டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் அதை வெறும் 5-6 டாலருக்கு வழங்குவதாக கூறுகிறார்.
அமெரிக்கா சீனா மாறி மாறி இறக்குமதிகளுக்கு வரி விதித்து வருகின்றன. இதனால் விலைவாசியில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர்களுக்கு தங்கள் பொருட்களைக் குறைந்த விலையில் விற்க டிக் டாக்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவில் வரியுடன் விற்கப்படும் ஹேண்ட்பேக் போன்ற ஆடம்பர சீன பிராண்டட் பொருட்களை நேரடியாக தாங்களே தருகிறோம் என்றும், இவ்வாறு சீன உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதன் மூலம் சில்லறை விலைகள் மற்றும் கட்டணங்களைத் தவிர்த்து விலை பன்மடங்கு குறையும் என்றும் சீன வியாபாரிகள் டிக்டாக்கில் களமிறங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
உதாரணமாக ஒரு வீடியோவில், லுலுலெமன் லெகிங்ஸ், லூயிஸ் உய்ட்டன் கைப்பைகள் மற்றும் பிர்கின் பைகள் போன்ற உயர் ரகப் பொருட்களை அவற்றின் சில்லறை விலையின் ஒரு பகுதிக்கு விற்பனை செய்வதாகக் கூறும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வீடியோ ஒன்றில் கையில் பொருளுடன் பேசும் வியாபாரி, தொழிற்சாலை இயந்திரங்களுக்கு முன்னால் நின்று, லுலுலெமன்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட யோகா பேன்ட்கள் அமெரிக்காவில் 100 டாலர்களுக்கு விற்கப்படுகின்றன என்றும் அதை வெறும் 5-6 டாலருக்கு வழங்குவதாக கூறுகிறார். இந்த வீடியோ TikTok இல் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இதுபோன்ற எண்ணற்ற வீடியோக்கள் TikTok ஐ ஆக்கிரமித்து வருகின்றன. மேலும் பிர்கின் பிராண்டட் ஹேண்ட்பேக் அமெரிக்காவில் 38,000 டாலர்கள்(ரூ.32 லட்சம்) என்றும் அதே பொருளை 1,400 டாலர்களுக்கு (சுமார் ரூ. 1 லட்சத்துக்கு) தருவதாகவும் அவர் விளம்பரப்படுத்துகிறார்.
இருப்பினும் இந்த பொருட்களில் பெரும்பாலானவை ஆடம்பர பிராண்ட்களின் தயாரிப்பை ஒத்த போலியான தயாரிப்புகள் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது.
- சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
- இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது
அமெரிக்காவுடன் மோதலுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது
சீன அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 9-ந்தேதி வரை 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சீன தூதர் சூ பீஹோங்கின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ஏப்ரல் 9-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள சீன தூதரகங்கள் இந்த ஆண்டு சீனாவுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு 85,000-க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கி உள்ளன.
சீனாவைப் பார்வையிடவும், பாதுகாப்பான, துடிப்பான, நேர்மையான மற்றும் நட்பு சீனாவை அனுபவிக்கவும் அதிகமான இந்திய நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.
இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
மேலும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை சீனா தளர்த்தியுள்ளது. இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.
அதன்படி எந்த ஆன்லைன் முன்பதிவுகளும் இல்லாமல் வேலை நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். இந்தியர்களுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் விண்ணப்பிக்கும் விசாக்கள் தற்போது மிக விரைவாக அங்கீகரிக்கப்படுகின்றன.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரி விலக்கு அறிவித்தார். அதேவேளையில் சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.
இதனால் இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சீனா விசா சலுகைகளை அறிவித்துள்ளது. இது இந்தியா-சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.
இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவியான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும்
இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா எதிர் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா வரியை 145 சதவீதமாக கூட்டியது. மாறி மாறி வரிகளை விதித்து வருவதால் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் வலுத்துள்ளது.
மற்ற நாடுகளிடம் அமெரிக்காவின் வல்லாண்மைக்கு எதிராக ஒன்று சேர சீனா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் மார்க்கெட் கொண்ட அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்கள் ரிலீசுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
அதன் அறிவிப்பில், "சீனா மீதான வரிகளை துஷ்பிரயோகம் செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை, அமெரிக்க திரைப்படங்கள் மீதான உள்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவு குறைய வழிவகுக்கும்.
நாங்கள் சந்தை விதிகளைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம். ஆனால் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம்" என்று கூறியது. இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- இன்று முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
- 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதித்தார்.
அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
34 சதவீத வரி விதிப்புக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கவுக்கு 34 சதவீத வரியை விதித்தது. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார். ஆனால் டிரம்ப்புக்கு அடிபணிய மறுத்த நிலையில் சீனா மீது 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதுவும் உடனே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே விதித்த 34 சதவீத வரியை 84 சதவீதமாக சீனா தற்போது உயர்த்தி உள்ளது. இந்த 84 சதவீத வரிவிதிப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இவ்வாறு போட்டி போட்டு இரண்டு வல்லரசுகளும் வரி விதித்துக்கொள்வதால் டிரம்ப் தொடங்கிய சர்வதேச வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
- அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த 2-ந்தேதி அவர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்படும் என கூறினார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா அமெரிக்க பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீதம் வரி விதிக்கும் என அதிரடியாக அறிவித்தது. இந்த கூடுதல் வரி 10-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என சீனா தெரிவித்துள்ளது.
50 சதவீதம் கூடுதல் வரி
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சீனா பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
சினா ஏற்கனவே நிர்ணயித்துள்ள சட்டவிரோத வரிகளுடன் கூடுதலாக 34 சதவீத பழிவாங்கும் வரிகளை விதித்து உள்ளது. இன்று சீனா தனது 34 சதவீத வரி அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் 9-ந் தேதி முதல் சீனா மீது 50 சதவீதம் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தையும் நிறுத்தப்படும். வரி விதிப்பு தொடர்பாக மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்
சீனாவும், அமெரிக்காவும் இப்படி போட்டி போட்டுக் கொண்டு வரி விதிப்பை அறிவித்து வருவது வர்த்தக போரை மேலும் தீவிரமாக்கி உள்ளது.
- பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
- உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டிரம்ப் தனது பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் போலியானது என்று என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
- சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
- வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. டிரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987 க்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.
ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நேரங்களில் எதையாவது சரிசெய்ய மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறினார்.
இதற்கிடையே தனது சொந்த சமூக ஊடகமாக ட்ரூத் சோசியலில் இன்று அவர் வெளியிட்ட பதிவில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புகள் மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.
மேலும் பார்ப்பதற்கு ஒரு அழகான விஷயம். தூங்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் காலத்தில் இந்த நாடுகளுடனான உபரி வளர்ந்துள்ளது. நாம் அதை மாற்றப் போகிறோம், விரைவில் மாற்றப் போகிறோம். அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்கா வுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்ப தாக டிரம்பின் ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளனர்.
- வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
- நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியுள்ளது.
அதன்படி ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கும் 34 சதவீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
கணினி பாகங்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய மண் தாதுக்கள் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகக் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வர்த்தகத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்கா மீது சீனா வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.