என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம நபர் கைவரிசை"
மதுரை:
ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பாவடித் தெருவைச் சேர்ந்தவர் வெஸ்லின். இவரது மனைவி சாந்திமணி. இவர், சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவர் கைப்பையில் 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்தார்.
மதுரை அருகே பஸ் வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் சாந்திமணியின் கைப் பையை திருடிக்கொண்டு நைசாக தப்பினார்.
மதுரை வந்திறங்கிய சாந்திமணி, கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
தக்கலையை அடுத்த வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண பிள்ளை. இவரது மனைவி ராதா (வயது 63).
ராதா தக்கலை செல்வதற்காக பஸ் ஏற வில்லுக்குறி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கிருந்து மார்த்தாண்டம் செல்லும் பஸ்சில் ஏறினார்.
தக்கலை பஸ் நிலையம் வந்ததும், பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது ராதா அணிந்திருந்த 5¼ பவுன் தாலி செயினை காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த ராதா, இது பற்றி கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி அழுதார். அவர்கள் சம்பவம் பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தனர். அதில் ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர்கள் ராதாவின் நகையை திருடிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நகையை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகிறார்.
இதுபோல செங்கோடி பகுதியை சேர்ந்த கங்காதரன் தம்பியின் மனைவி சுலோச்சனாம்மா (68) என்பவர் மண்டைக்காடு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அங்கு தரிசனம் முடிந்து திரும்பிய போது சுலோச்சனாம்மா அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.