என் மலர்
நீங்கள் தேடியது "சினிமா"
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
- வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இந்தி வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் நடித்திருக்கின்றனர்.
அவர் போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இந்நிலையில் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே இயக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற இணையத் தொடரை இயக்கி உள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடிகராக அறிமுகமாகிறார். இந்த தொடர் வரும் 20-ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
- ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை.
- கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகன். வக்கீல். இவரது மனைவி ராஜாத்தி. கடந்த 6-ந் தேதி வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர், ராஜாத்தியை கத்திமுனையில் மிரட்டி வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1½ பவுன் நகைகளை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆனந்தன் என்கிற ஆனந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் தங்கி சினிமாவில் மேக்கப்மேனாக வேலை பார்த்து வந்த அவர் போலீசில் சிக்காமல் இருக்க மொட்டை அடித்து சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்.
- செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
செஞ்சிக்கோட்டையில் சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு நடிக்க உள்ளார். நடிகர் மோகன்லால் கதாநாயகனாகவும் நடிகை சோனாலி குல்கர்னி கதாநாயகியாகவும் நடிக்கும் மலைக் கோட்டை வாலிபன் படப்பிடிப்பு செஞ்சி கோட்டையில் நாளை 29-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கோட்டையில் பொம்மைகளை கொண்டு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் உலகப்போர் நடிகரின் கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். இவர் பொதுவாக பொது விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் சமீபத்தில் ஒரு நடிகரின் திருமண விழாவிற்கு சென்றாராம். அப்போது அவருடன் ஒரு இளம் பெண் சென்றிருக்கிறாராம்.
இதைப்பார்த்த பலரும் நடிகரின் காதலி அவர் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதைக்கேட்ட நடிகரும் கண்டுக்கொள்ளாமல் சென்று விட்டாராம். நடிகரின் இந்த மௌனம், அவருடன் வந்த பெண் காதலிதான் என்று பலரும் உறுதி செய்து விட்டார்களாம்.
- நீர் தேர்வு அனிதா இறப்பின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் சினிமா இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறபபிக்கப்பட்டு உள்ளது
- பலமுறை வழக்கில் ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் குழுமூர் கிராமத்திற்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அனிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இதனால் இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் எதிரொளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கவுதமன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெப கிருபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதிகளான குரால் வீர பயங்கரம் கூகையூர் பாக்கம் பாடி, காளசமுத்திரம், நயினார் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜி3 ஆலைய மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு ஐயப்பன் துணை இருப்பான் என வைக்கப்பட்டுள்ளது.படத்தை தனலட்சுமி கணேசன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, பாடல், இயக்கம் மகாகணேஷ், இணை தயாரிப்பு சரஸ்வதி செல்வராஜ், அசோசியட் விஜயராஜ், உதவி இயக்குனர் திருமலை மாயக்கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை ராஜமுத்து, தயாரிப்பு நிர்வாகம் சந்திரசேகரன், இசை சதாசிவம் ஜெயராமன், ஒளிப்பதிவு துருகம் சதா, எடிட்டிங் ஆனந்த் செய்து வருகிறார். படப்பிடிப்பு சின்னசேலம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சினிமா படபிடிப்பை அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
- 1978 -ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
- வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
மனதில் என்ன தோன்றுகிறதோ?
யாராக இருந்தாலும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் துணிந்து சொல்லக்கூடியவர் விஜயகாந்த். இதனால் அவர் இழந்தது அதிகம்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நியாயத்தின் பக்கம் இருந்து கொண்டு ஓங்கி குரல் கொடுத்து வந்தார் விஜயகாந்த்.
அவரது சுபாவத்தை தான் நடிக்கும் படங்களிலும் வெளிப்படுத்தினார்.
நாராயணன் விஜயராஜாக மதுரை திருமங்கலத்தில் பிறந்து சினிமா மீது கொண்டிருந்த ஆர்வத்தால் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையுடன் சேர்ந்து அவரது ரைஸ் மில் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து 1978 -ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அப்போது படத்தின் இயக்குனர் காஜா அவருக்கு விஜய காந்த் என்ற பெயரை சூட்டினார். 1979-ம் ஆண்டு அகல் விளக்கு என்ற படத்தில் நடித்தார்.
அடுத்ததாக 1980-ம் ஆண்டு இவர் நடித்த தூரத்து இடி முழக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 1981-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குனராக அறிமுகமாகி அவர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை விஜய காந்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

இந்தப் படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி பதிப்பில் ரஜினியும், தெலுங்கு பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்திருந்தனர். அங்கும் படம் வெளியாகி வெற்றியை பெற்றது. எஸ்.ஏ.சந்திர சேகருடன் 17 படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார்.
அடுத்ததாக அவர் நடித்து வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் விஜயகாந்த் திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், என் புருஷன் எனக்கு மட்டும்தான் போன்ற குடும்ப பாங்கான படங்களின் மூலம் பெண்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து ரஜினி, கமல் ஆகியோருக்கு இடையே தனக்கென ஒரு தனி இடத்தை சினிமா துறையில் உருவாக்கினார்.
விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி சண்டை படம் தான் என்று திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே திருப்தி செய்தார்.
சண்டை காட்சிகளில் சுவரில் காலை ஊன்றி கொண்டு சுற்றி சுற்றி எதிரிகளை பந்தாடும் காட்சிகளில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தார்.
அந்தக் காட்சிகள் விஜயகாந்தின் அடையாளச் சின்னமாகவே இதுவரை இருந்து வருகிறது. பல படங்களில் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்களை பயன்படுத்தாமல் அவரே துணிச்சலாக நடித்தார்.
1984-ல் பதினெட்டு படங்களும், 1985-ல் பதினேழு படங்களும் நடித்து சாதனை செய்தார்.
புரட்சிகரமான பல படங்களில் நடித்ததால் ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்ற பட்டம் விஜயகாந்துக்கு சூட்டப்பட்டது.

தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மற்ற மொழி படங்களில் நடிப்பதை திட்டவட்டமாக மறுத்து வந்தார். பல புதுமுக இயக்குனர்களை உருவாக்கிய பெருமை விஜயகாந்தை சேரும். அரவிந்தராஜ் இயக்கிய ஊமை விழிகள், ஆர்.கே.செல்வமணியின் புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அவரால் அறி முகப்படுத்தப்பட்ட இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
அவரது நடிப்பில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் படம் நூறு நாட்கள் தாண்டி சாதனை படைத்தது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் என்று அனைத்து தரப்பினராலும் அழைக்கப்பட்டார்.
ஊமை விழிகள், செந்தூரப்பூவே, புலன் விசாரணை போன்ற படங்களில் தன் வயதுக்கு அதிகமான கதாபாத்திரங்களில் தயங்காமல் நடித்துள்ளார்.
விஜயகாந்த் 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்துள்ளார். இந்த 36 ஆண்டுகளில் அவர் 156 படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டு அவரது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த சகாப்தம் படமே அவரது கடைசி படம். அதில் விஜயகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தார்.
1979-ம் ஆண்டு முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு கதாநாயகன் ஆகி சினிமாவில் உச்சம் தொட்டார். சினிமா உலகம் உள்ள வரை விஜயகாந்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
- முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார்.
- விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.
'இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகமான விஜயகாந்த், மதிய உணவு இடைவேளையில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது தானும் சாப்பிடுவதற்காக மேஜையில் அமர்ந்தார். அப்போது படக் குழுவை சேர்ந்த ஒருவர், படத்தின் ஹீரோவே இன்னும் சாப்பிடவில்லை. அதற்குள் முதல் ஆளாக வந்து சாப்பிடுகிறாயே என்று விஜயகாந்தை சாப்பிட விடாமல் எழுப்பிவிட்டார். அரிசி ஆலை வைத்திருந்த விஜயகாந்துக்கு அன்று உணவுக்கு ஏற்பட்ட நிலைமை அவரை மிகவும் பாதித்தது. அன்றிலிருந்து சினிமா துறையில் நாம் உயரத்தை எட்டியதும் அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதை முதல் கடமையாக செய்ய வேண்டும் என்று அவருக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.
அதன்படி சினிமா துறையில் அவர் சாதித்ததும் சாப்பாடு விஷயத்தில் அனைவருக்கும் உணவு கொடுப்பதில் மிகவும் முன்னுரிமை கொடுத்து வந்தார். படப்பிடிப்பில் சினிமா தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு கொடுப்பதை விஜயகாந்த் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு தான் மற்றவர்களும் 3 வேளை உணவு கொடுக்க தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்த் தான் என்று திரையுலகமே அவரை பாராட்டி மகிழ்ந்தது.
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் 'G.O.A.T' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- விஜய், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்ற புதிய போஸ்டர் இணையத்தில் வைரல்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Goat). லியோ திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கவச உடை மற்றூம் கையில் துப்பாக்கியுடன் இடம்பெற்றுள்ளனர். இதற்கு முன்பு வெளியான முதல் போஸ்டரில் வயதான மற்றும் இளம் தோற்றங்களில் விஜய் விமானப் படை வீரர் உடையுடன் தோன்றியிருந்தார். இதன் அடிப்படையில் இப்படம் ராணுவ பின்னணி கொண்ட படமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது. மேலும் இது காலப் பயணம் சார்ந்த திரைப்படமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
- விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது.
- விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார்.
பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 69-வது படத்தின் இயக்குநர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
விஜய் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அண்மையில் அறிவித்தார். இதனால் அவர் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. டிவிவி தனய்யா தனது தயாரிப்பு பேனரான டிவிவி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை இயக்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளனர். இதில் இயக்குநர்கள் எச்.வினோத், காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ளது.
- லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
- மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ்வர் திரைப்படம்.
இந்த வார ஓடிடி ரிலீஸ் - 4 படங்கள்
1. லால் சலாம் {lal salaam} - Netflix
பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் படம். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தான் இத்திரைப்படத்தின் இயக்குனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

2. லவ்வர் {lover} - Hot star
பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான படம் தான் "லவ்வர்".இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.
படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் இடையே நல்ல பெயரையும், நம்பிக்கையையும் இப்படம் பெற்றது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்து. தற்போது வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3. மெரி கிறிஸ்துமஸ் {merry christmas} - Netflix
விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது மெரி கிறிஸ்துமஸ் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை "அந்தாதுன்" படத்தின் இயகுனரான ஸ்ரீராம் ராஹவன் இயக்கியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் வரும் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

4. ஹனுமான் {Hanu-man} - zee 5
ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மற்றொரு படம் ஹனுமன். தெலுங்கு மொழியில் திரையரங்கில் வெளியானது. தேஜா சஜ்ஜா முன்னணி ஹீராவாக நடித்திருந்தார். வரலக்ஷ்மி சரத்குமார், அமிர்தா ஐயர், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ப்ரசாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஹனுமன் திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது

- மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது.
- அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. - இயக்குனர் சிதம்பரம்
தமிழ் மக்களின் அன்புக்கு நன்றி: மஞ்சும்மல் இயக்குநர் நெகிழ்ச்சி
கடந்த சில நாட்களாகவே தமிழ் நாட்டில் எந்த சமூக ஊடகங்களை திறந்தாலும் "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
மஞ்சும்மல் பாய்ஸ் என்ற திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் ஆகியுள்ளது. இதுவரை மொத்த பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மஞ்சும்மல் பாய்ஸ் 100 கோடியை தாண்டியுள்ளது. மலையாள சினிமாவில் வேகமாக 100 கோடி வசூல் செய்த படங்களில் மஞ்சும்மல் பாய்ஸ் முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டு நாட்கள் முன்பு மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினர் சென்னை வந்திருந்தனர். தமிழ் திரையுலக பிரபலங்களான கமல், விக்ரம், தனுஷ், சித்தார்த் போன்றவர்களிடம் படம் தொடர்பாக பாராட்டுப் பெற்று இருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக "அளவு கடந்த அன்பை பொழிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இத்திரைப்படம் வெற்றி பெறக் காரணமான தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி" என்று அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.