என் மலர்
நீங்கள் தேடியது "சச்சின் தெண்டுல்கர்"
- 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக சிலை இருக்கும்.
- ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது.
இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தெண்டுல்கரின் முழு உருவசிலை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை வருகிற ஏப்ரல் 24-ந்தேதி கொண்டாட உள்ளார். அவருக்கு நினைவு பரிசாக இருக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டியின்போது (மார்ச் 31-ந்தேதி முதல் மே 28-ந்தேதி வரை நடக்கிறது) சிலையை திறக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏப்ரல் 24-ந்தேதிக்குள் முடியவில்லையென்றால் அக்டோபர், நவம்பரில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையின் போது சிலை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே கூறும் போது, 50 வயதை தொடவுள்ள சச்சின் தெண்டுல்கரை பாராட்டும் வகையில் அவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் செய்யும் சிறிய அடையாளமாக இந்த சிலை இருக்கும்.
இதுகுறித்து அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம் என்றார்.
இதுகுறித்து தெண்டுல்கர் கூறும்போது, இது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இங்கேதான் தொடங்கியது. நம்ப முடியாத நினைவுகளுடன் கூடிய பயணங்களை நினைக்கும் இடம் இது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது 2011-ம் ஆண்டு இந்த மைதானத்தில் உலக கோப்பையை வென்றதுதான். நான் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியும் இந்த மைதானத்தில்தான். இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்றார்.
ஏற்கனவே வான்கடே மைதானத்தில் தெண்டுல்கர் பெயரில் பெவிலியன் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+2
- இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முரளீதரன்
- மும்பையில் நடைபெற்ற சச்சின் தெண்டுல்கர், முரளீதரன், ஜெயசூர்யா பங்கேற்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் அழிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தவர் முத்தையா முரளீதரன். இவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு "800" என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரைலரை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய சச்சின் தெண்டுல்கர் ''அவர்களுடன் போதுமான நேரம் செலவழிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பான அம்சம் என்னவென்றால், பல வருடங்களுக்குப் பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத் தொடர்கிறோம், ஒருவரையொருவர் சகஜமாக ரசிக்கிறோம். நிச்சயம் அனைவரும் படத்தைப் பார்க்கப் போகிறார்கள்.'' என்றார்.
இந்த விழாவில் இலங்கை அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சனத் ஜெயசூர்யாவும் கலந்து கொண்டார்.
- ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை.
- ஒரே உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து சாதனை.
உலகக் கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 50 ரன்களை கடப்பது இது 8-வது முறையாகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக முறை 50 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003-ல் 7 முறை அடித்திருந்தது இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.
ஷாகில் அல் ஹசன் 2019-ல் 7 முறையும், ரோகிர் சர்மா மற்றும டேவிட் வார்னர் ஆகியோர் 2019-ல் தலா 6 முறையும் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
மேலும், 80 ரன்களை தொட்டபோது இந்த தொடரில் 674 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் இதற்கு முன் 2003-ல் 673 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது சச்சின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஹெய்டன் 2007-ல் 659 ரன்களும், ரோகித் சர்மா 2019-ல் 648 ரன்களும், டேவிட் வார்னர் 2019-ல் 647 ரன்களும் எடுத்துள்ளனர்.
- சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார்.
- ரோகித் சர்மா 31 சதங்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன் இலங்கை, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.
இன்று நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
- மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
- இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.
கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய சுற்றுலாத்தினத்தை கொண்டாடும் வகையில் சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில், மராட்டியத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
அங்கு 3 தலைமுறை புலிகள் நடந்து வரும் காட்சியை பார்த்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. தேசிய சுற்றுலாத்தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடுகிறோம்! தடோபாவில் நான் 3 தலைமுறை புலிகளை பார்த்தேன். ஜூனோபாய் என்ற புலியின் குட்டி வீரா, வீராவின் குட்டிகள் என அனைவரையும் பார்த்தேன். இந்தியாவில் ஆராய்வதற்கு பல இடங்கள் உள்ளன என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Celebrating National Tourism Day with a roar!
— Sachin Tendulkar (@sachin_rt) January 25, 2024
In Tadoba, I have seen 3 generations of tigers - Junabai, her cub Veera, and then recently Veera's cubs. It's a surreal experience! ?
With community participation and responsible tourism, there are many places to explore in India.… pic.twitter.com/OYqpnvU0p4
- 2007-ல் பிசிசிஐ தனக்கு கேப்டன் பதவியை வழங்க தயாராக இருந்தது.
- என்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். முகமது அசாருதீனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்த நிலையில், 1996-ல் இருந்து 1999 வரையிலான காலக்கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் கேப்டனாக பணியாற்றினார்.
ஆனால் அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவரது தனிப்பட்ட ஆட்டமும் சரிவை கண்டது. இதனால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு சவுரவ் கங்குலி கேப்டன் பதவியை ஏற்று, அணியில் பல மாற்றம் செய்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து எதிர்கால அணியை உருவாக்கினார்.
அப்போதுதான் எம்.எஸ். டோனி இந்திய அணியில் அறிமுகம் ஆனார். குறுகிய வருடத்திற்குள் கேப்டன் பதவியை ஏற்று ஜொலித்தார்.
எம்.எஸ். டோனியின் தலைமையின் கீழ் சச்சின் தெண்டுல்கர் நீண்ட காலம் விளையாடியுள்ளார். எம்.எஸ். டோனியை கேப்டனாக்க பரிந்துரை செய்தது சச்சின் தெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்குத் தெரியும். தற்போது அதற்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் "2007-ல் பிசிசிஐ கேப்டன் பதவி வாய்ப்பை எனக்கு வழங்கியது. ஆனால், என்னுடைய உடல் அப்போது மிகவும் மோசமாக இருந்தது.
டோனியுடன் மனநிலை மிகவும் நிலையானது. அமைதியானவர். சரியான முடிவை எடுப்பார் என்ற அவர் மீதான என்னுடைய அவதானிப்பு மிகவும் சிறந்த வகையில் இருந்தது. இதனால் அவரை கேப்டன் பதவிக்கு பரிந்துரை செய்தேன்" இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
- டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்து சாதனை.
- சச்சின் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும் அடித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு ஷார்ஜாவில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் 77 பந்தில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குர்பாஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 8 சதங்கள் அடித்துள்ளார்.
குர்பாஸ்க்கு நேற்றுடன் 22 வயது 357 நாட்கள் முடிவடைந்தது. இதன்மூலம் இளம் வயதில் 8 சதங்களை நிறைவு செய்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறினார்.
தென்ஆப்பிரிக்காவின் டி காக் 22 வயது 312 நாட்களில் 8 சதங்கள் அடித்திருந்தார். இதன்மூலம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
சச்சின் தெண்டுல்கர் 22 வயது 357 நாட்களிலும், விராட் கோலி 23 வயது 27 நாட்களிலும், பாபர் அசாம் 23 வயது 280 நாட்களிலும் 8 சதங்களை எட்டியிருந்தனர்.
அதிக சதங்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முகமது ஷேசாத் 6 சதங்கள் அடித்துள்ளார். குர்பாஸ் வங்கதேசத்திற்கு எதிராக 3 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஷார்ஜா மைதானத்தில் நேற்றைய சதம் அவரின் 3-வது சதம் ஆகும்.
- தெண்டுல்கரின் சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும்.
மெல்போர்ன்:
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோரூட் முதல் போட்டியில் சதம் அடித்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கிடைத்தது. அதோடு ஜோரூட் 10 ஆயிரம் ரன்னை தொட்டார். இந்த ரன்னை எடுத்த 14-வது வீரர் ஆவார்.
இந்த நிலையில் டெஸ்டில் அதிக ரன் எடுத்த தெண்டுல்கரின் (15,921) சாதனையை ஜோரூட் முறியடிப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜோரூட் மிகவும் பிரமாதமாக ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஜோரூட் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். இதனால் அவரால் தெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க இயலும். உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவரால் 15,000 ரன்னுக்கு மேல் எடுக்க இயலும்.
இவ்வாறு டெய்லர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா 179 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. மேலும், உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் பீதி அடைய தேவையில்லை என்று கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியை நான் மதிப்பீடு செய்யமாட்டேன். இது ஒரு நீண்ட தொடர். இதுபோன்று சம்பவம் கிரிக்கெட்டில் நடைபெறலாம்.
முக்கியமான போட்டிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இது வெறும் பயிற்சி ஆட்டம்தான். என்ன மாதிரியான ஆடுகளம் என்பதை புரிந்து கொள்வதற்கு பயிற்சி ஆட்டங்கள் பயன்படும். அதற்குள் பீதி அடைய தேவையில்லை.
பெரும்பாலான அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் லெவனை (11 வீரர்களை) முடிவு செய்ய விரும்பாது. பந்து வீச்சையும், பேட்டிங்கையும் மேம்படுத்திக் கொள்ள பயிற்சி ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கும வகையில் விளையாடும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஏனென்றால் அந்த அணியின் சுழற்பந்து வீச்சு அபாரமாக உள்ளது. மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய திறமை உள்ளது. அந்த அணி வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெண்டுல்கர் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். டோனியை பொருத்தமான அந்த இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஆடும் லெவன் அணியின் கலவை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவானும், 3-வது வீரராக விராட்கோலியும் களம் இறங்க வேண்டும். 4-வது வீரராக யாரையும் இறக்கலாம், 5-வது வீரராக டோனியை களம் இறக்க வேண்டும். அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவை களம் காண வைக்கலாம். தரமான பேட்ஸ்மேன் எந்த வரிசைக்கு தகுந்தபடியும் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
ஐ.பி.எல்.போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்தை நன்கு கணித்து அடித்து ஆடினார். அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறார். அவர் நல்ல நம்பிக்கையுடன் உலக கோப்பை போட்டிக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கை களத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், வலது கை பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுகையில் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். அவர் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் நிலைத்து நின்றால் எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளிக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 4-வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழையும்.
இவ்வாறு அவர் கூறினார்.