என் மலர்
நீங்கள் தேடியது "slug 112094"
- திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று மாலை அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது.
- இன்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலஸ்தானத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதே போல கோவிலின் தனி சன்னதியில் கோவர்த்தனாம்பிகை அம்மனும் அருள் பாலித்து வருகிறார்.
ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் கோவிலில் நவராத்திரி விழா 9 நாட்களும், 10-வது நாளில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருளி பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் அம்பு விடும் விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த
26-ந்் தேதி நவராத்திரி விழா தொடங்கியது.
விழாவையொட்டி கோவிலின் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்மன், மகிஷாசு ரவர்த்தினி, திருக்கல்யாணம், சிவபூஜை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிறைவு நாளான இன்று மாலை 6 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்கள்.
திருப்பரங்குன்றத்தில் இருந்து பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளும் சுப்பிரமணியசுவாமி அங்கு 8 திக்கிலும் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானையுடன் வீதி உலா நடந்தது.
- இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை விமர்சையாக கொண்டாடப்படும். இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வா னைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளினார். அங்கு இருக்கும் சுவாமி மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.
தொடர்ந்து இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
- திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
- மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது.
திருப்பரங்குன்றம்
மதுரை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெருமுனை பிரசார கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது.
தனக்கன்குளம் மந்தை திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் தலைமை வகித்தார். காங்கிரஸ் நிர்வாகி பொன்.மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
தொகுதி பொறுப்பாளர் பழனிகுமார், மாநிலத்தலைவர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் வினோத்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மத்திய அரசு ஏழை மக்கள் பயன்படுத்தும் கியாஸ் விலையை உயர்த்தி உள்ளது. மேலும் இளை ஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வகையிலும், நாட்டின் பாது காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அக்னிபாத் திட்டம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், நாகேஸ்வரன், பசுமலை மகா, சீனிவாசன், கார்த்திக், வேல்முருகன், ஆனந்த், வித்யாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டு ள்ளது.
இதனைப் பாண்டி யநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதைக் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது' என்பது இக்கல்வெட்டின் பாடம். முன் இரண்டு வரிகளில் தொடக்கம் சேதம் அடைந்துள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை.
40 அல்லது 50 என்று நாட்கள் இருக்கலாம் முன்னெழுத்துக்கள் இல்லாமல் பது என்ற 2 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் 20 முதல் 80 வரையான நாட்களை குறிக்கலாம். நிசிதிகை என்ற சொல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
பாண்டியநாட்டில் இந்த சொல் கல்வெட்டுகளில் இதுவரை இடம் பெற்றதி ல்லை. தொண்டைமண்டலம் (திருநாதர்குன்று) கொங்குமண்டலம் (விசயமங்கலம்) ஆகிய ஊர்களில் இப்படிப்பட்ட நிசிதிகை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் இதுவே முதலாவதாக அறியப்பட்டு ள்ளது.
செஞ்சிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று மலையில் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சந்திரநந்தி எனும் துறவியின் நிசிதிகை உள்ளது. அதன் காலம் கி.பி. 6-ம் நூற்றாண்டாகும்.
திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணத்தளமாக விளங்கியுள்ளது. மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. முதல்நூற்றாண்டைச் சேர்ந்தவை இங்கு காணப்படுகின்றன. அதற்கு அடுத்து கி.பி. 8,9-ம் நூற்றாண்டில் தென்பரங்குன்றம் குடைவரைக்கோவில் சமணத்தீர்த்தங்கரர்க்காக எடுக்கப்பட்டது. பின்னர் கி.பி. 13ம் நூற்றாண்டில் அது சிவன்கோவிலாக மாற்றம் பெற்றது. மதுரைக்கு அருகில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றம் முதலாவதாகும். மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் மலைப்பாறையில் கி.பி. 9,–10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டு ள்ளன.
மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர் கோவிலின் பின்புறம் ஒர் இயற்கையான சுனைக்கு அருகில் இரண்டு பார்ச்சுவநாதர், மகாவீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கி யவர்களின் பெயர்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன.இவ்வளவு சமணத்தொடர்பு டைய திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக நோன்பிருந்து உயிர்நீத்த அரிட்டநேமிப்பெரியார் பற்றிய கல்வெட்டு கிடைத்திருப்பது முக்கி யத்துவம்வாய்ந்ததாகும். மதுரைக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி என்னும் சமணத்தலம் அரிட்டநேமிப் பெரியாரின் பெயரில் அமைந்தது என்பர். இவரே அப்பெயருக்குக் காரணமானவராக இருக்கலாம்.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே வடக்கிருந்து உயிர் போக்கும் வழக்கம் இருந்தது என்பதனை கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
மேற்கண்ட தகவலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
- 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நட்சத்திரத்தில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கோவில் விசாக கொறடு மண்டபத்தில் வெள்ளி குடம் மற்றும் கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
மாலையில் கடம் புறப்பாடாகி புனித தீர்த்தத்தை கோவில் ஸ்தானிக பட்டர்கள் கம்பத்தடி மண்டபத்தை சுற்றி வந்து மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு புனித நீர் கொண்டு முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு புனுகு தைலமும், மூலஸ்தானத்தில் உள்ள சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு சாம்பிராணித் தைலமும் சாத்தப்பட்டது. இதையடுத்து 5 சன்னதிகளிலும் சமகாலத்தில் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
திருவிழாவையொட்டி காலை 9.30 மணிக்கு கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகைகளாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளம் மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் தெப்பக்குளத்தில் தயாராக இருந்த தெப்பத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உடனே அங்கு கூடி இருந்த பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா“ என்று பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தெப்ப மிதவையில் இணைக்கப்பட்டிருந்த வடத்தினை பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர்.
தெப்பக்குளத்திற்குள் நிரம்பிய தண்ணீரில் 3 முறை தெப்ப மிதவை வலம் வந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் மின்னொளியில் தெப்ப திருவிழா நடைபெற்றது.
இந்தநிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அகல் விளக்கு விற்பனையை முழுமையாக தவிர்ப்பது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்து, அதன்படி சிறிது சிறிதாக அகல் விளக்கு விற்பனையை குறைத்து வந்தனர்.
இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவின்படி நடப்பு பசலி ஆண்டான வருகிற (ஜூலை) 1-ந்தேதி முதல் அகல் விளக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக பாதுகாப்பான முறையில் விளக்கேற்ற அணையா (வாடா) விளக்கு ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கண்ணாடி குவளையில் முக்கோண வடிவில் சுமார் 3 அடி உயரத்தில் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
அணையா விளக்கின் மேல் பகுதியில் நெய் ஊற்றுவதற்காக குவளை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விளக்கு 24 மணி நேரமும் (கோவில் நடை சாத்திய பின்பும்) அணையாமல் தீபம் பிரகாசிப்பதற்காக விளக்கின் மைய பகுதியில் 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
விளக்கின் அடிப்பகுதியில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட வடிக்கட்டிய நெய்யை சேமிக்க கூடிய பாத்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தாங்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் நெய்யை ஊற்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அணையா விளக்கு கோவிலுக்குள் 6 இடங்களில் வைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலிலும் ஒரு அணையா விளக்கும் வைக்கப்பட உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக அகல் விளக்குகள் விற்று கோவிலுக்கு வருமானத்தை பெற்று தந்த கோவில் நிர்வாகம், அணையா விளக்கில் தீபம் ஏற்றுவதற்காக, 50, 100 கிராம் நெய் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைய துறை கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.