search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளிதரராவ்"

    நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது என்று முரளிதரராவ் கூறியுள்ளார். #LokSabhaElectoins2019 #MuralidharRao

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.

    300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு.


    இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.

    தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

    தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.

    நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElectoins2019 #MuralidharRao

    கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP
    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்த பிறகும் அவர்களுடைய கூட்டணி கட்சி தலைவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முத்திரை வாசகத்தை பயன்படுத்தி எங்கள் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP

    பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறினார். #MuralidharRao #BJP
    புதுச்சேரி:

    பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

    கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP

    ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த பெண் 9 மணி நேரத்தில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #congress #PadminiReddy
    நகரி:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் தாமோதர ராஜ நரசிம்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் திட்ட கமிட்டி தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பத்மினி ரெட்டி. காங்கிரஸ் உறுப்பினர்.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்தார். இதற்கான விழா நேற்று மதியம் 12 மணியளவில் பா.ஜனதா தலைவர் லஷ்மன், தேசிய தலைவர் முரளிதரராவ் தலைமையில் ஐதராபாத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவில் சேர்ந்த பத்மினி ரெட்டி பேசுகையில், மோடியால் தான் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். எனவேதான் நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தேன்’’ என்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டி தலைவரின் மனைவி பா.ஜனதாவில் இணைந்தது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி பா.ஜனதாவில் இருந்து 9 மணி நேரத்தில் விலகினார். மதியம் 12 மணிக்கு பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் இரவு 9 மணியளவில் அதில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    இரவு 9 மணிக்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக கூறினார். தொண்டர்களின் மனநிலையை மதித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார். #BJP #congress #PadminiReddy
    ×