search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடம்"

    குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    சின்னாளப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டால் லாரி தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பேரூராட்சி பகுதிக்கு மட்டும் பேரணை மற்றும் காமராஜர் அணை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் சின்னாளபட்டி பகுதி மக்களுக்கு வாரம் 1 முறை நல்ல தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    ஆனால், சின்னாளபட்டியை சுற்றியுள்ள காந்திகிராமம், கலிக்கம்பட்டி, செட்டியப்பட்டி, அம்பாத்துரை, பஞ்சம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தொப்பம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளோடு ஆகிய ஊராட்சிகளுக்கும், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் நீடித்த குடிநீர் திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

    கடந்த 3 மாதமாக கிராம பகுதிகளில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் வற்றி விட்ட நிலையில் கிராம ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் தவிக்கிறது. கிடைக்கும் கொஞ்ச நீரை மாதம் ஒரு முறை அல்லது 2 மாதத்தற்கு ஒருமறை என சப்ளை செய்கிறது. இதனால் தினசரி தேவைகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் குடம் ஒன்றுக்கு ரூ. 5 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தண்ணீரை விற்பதற்காகவே இக்கிராமங்களில் தண்ணீர் லாரிகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. குடிப்பதற்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ. 10 ம், மற்ற தேவைகளுக்கான தண்ணீர் குடம் ஒன்றுக்கு ரூ. 5 என விற்பனை நடக்கிறது.

    எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாடுக்கு வரும் வரையில் இப்பகுதி மக்களுக்கு கிராமத்திற்கு தினமும் 5 லாரிகள் வீதம் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×