என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியாமி ஓபன்"

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.
    • இந்த மோதலில் ஜாகுப் மென்சிக் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மியாமி:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் (செர்பியா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு) ஆகியோர் முன்னேறினர்.

    பரபரப்பான இந்த இறுதிப்போட்டியில் ஜாகுப் மென்சிக் 7-6 (7-4) மற்றும் 7-6 (7-4 ) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல் முறையாக மென்சிங் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    • மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார்.
    • சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் கின்வென் ஜெங் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி மற்றும் போலந்து வீராங்கனை மாக்டா லினெட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பயோலினி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற சாதனையை ஜாஸ்மின் பயோலினி படைத்துள்ளார்.


    • ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
    • 4-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனையிடம் கோகோ காப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    மியாமி:

    முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து) எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதினார்.இதில் ஸ்வியாடெக் 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) மற்றும் மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் (உக்ரைன்) ஆகியோர் மோதினர். இதில் பெகுலா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மாக்டா லினெட்டுடன் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் மோதினார். இதில் கோகோ காப் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், மியாமி ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஜோகோவிச் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வணக்கம் மியாமி. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு நான் மியாமி ஓப்பனில் விளையாட மாட்டேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன். உலகில் உள்ள சில சிறந்த மற்றும் மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்களை நான் அனுபவிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.
    • தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகலை ஹாங்காங் வீரர் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நேற்று தொடங்கியது.

    நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஹாங்காங்கின் சாக் லாம் கோல்மேன் வாங்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்த வாங் அடுத்த இரு செட்களை 6-1, 7-5 என கைப்பற்றி அசத்தினார்.

    இதன்மூலம் சுமித் நாகல் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினார்.

    • அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் தோல்வி அடைந்தார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் மோதினார்.

    முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-1 என எளிதில் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களை படோசா 6-4, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 2 ஆண்டுக்கு பின் சிமோனா ஹாலெப் களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, இத்தாலியின் மேட்டியோ பிரெட்டெனியுடன் மோதினார்.

    இதில் ஆண்டி முர்ரே முதல் செட்டை 4-6 என இழந்தார். இதனால் சுதாரித்த முர்ரே அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் ரிபாகினா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, டென்மார்க்கின் கிளாரா டாசனுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 7-5, 6-4 என செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சுடன் மோதினார். இதில் அசரென்கா 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
    • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

    இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

    முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

    முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

    3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • மெட்வதேவ் காலிறுதியில் 6-2, 7(9)-6(7) என நேர்செட் கணக்கில் நிக்கோலஸ் ஜார்ரியை வீழ்த்தினார்.
    • சின்னர் தாமஸ் மக்காச்-ஐ 6-4, 6-2 என எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3 நிலை வீரரான டேனில் மெட்வதேவ், நிக்கோலஸ் ஜார்ரி-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மெட்வதேவ் 6-2 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கைப்பற்ற கடுமையான போராட வேண்டியிருந்தது. டை-பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை மெட்வதேவ் 7(9)-6(7) எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 2-0 (6-2, 7(9)-6(7)) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜென்னிக் சின்னர்- தாமஸ் மக்காச்-ஐ எதிர்கொண்டார். இதில் 2-ம் நிலை வீரரான சின்னர் 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் மெட்வதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- மரோஸ்சன் ஆகியோர் விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதியில் மோதுவார்கள்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் எகடரின் அலெக்சாண்ட்ரோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் அலெக்சாண்ட்ரொவா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 6-4, 6-4 என செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×