search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121455"

    • இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை.
    • மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி.

    இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சிறிய தலைவலி முதல் பெரிய நோய்கள் வரை, கிட்டத்தட்ட அனைவரும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் ஒரு கைப்பிடி மாத்திரைகளை எடுத்துக்கொள்றார்கள்.

    மற்றவர்கள் சிறிய நோய்களுக்குக் கூட தேவையில்லாமல் மாத்திரைகளை உட்கொண்டு, தேவையற்ற நோயை ஏற்படுத்துகிறார்கள். மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை மற்றும் எடுத்துக்கொள்ளக்கூடாதவை சில உள்ளன. எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


    தவிர்க்க வேண்டியவை:

    மது:

    மது மாத்திரைகளின் செயல்திறனில் தலையிடுகிறது மற்றும் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். எனவே மதுவை தவிர்ப்பது நல்லது. இது பல சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


    திராட்சைப்பழ ஜூஸ்:

    திராட்சைப்பழச்சாற்றில் உள்ள சில பொருட்கள் சில வகையான மாத்திரைகளின் செயல்திறனைப் பாதித்து, அவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனுள்ளதாக மாற்றும். உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


    பால்:

    பால் சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைத்து, அவற்றின் செயல்திறனைக் குறைக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைக்கும்.


    மற்ற மாத்திரைகள்:

    டாக்டர் மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, அவர்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பற்றி டாக்டரிடம் சொல்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சேர்க்கைகள் ஆபத்தானவை. மருந்துகளை எடுத்துக்கொள்வது குறித்து டாக்டரிடம் நிச்சயமாக ஆலோசனை கேட்க வேண்டும்.


    எதை எடுத்துக்கொள்ளலாம்:

    தண்ணீர்:

    மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. இது மாத்திரைகளை விழுங்குவதை எளிதாக்கி வயிற்றில் கரைய உதவுகிறது.


    உணவு:

    டாக்டர் உணவுடன் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். இது வயிற்று எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.

    பானங்கள்:

    சில வகையான மாத்திரைகளை சாறு அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் பேசிய பிறகு இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.

    சில மாத்திரைகளை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்று எரிச்சலைத் தடுக்கவும், மாத்திரையை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது.

    சில மாத்திரைகளை உணவுக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரோ எடுக்க வேண்டும். இது மாத்திரையின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    மாத்திரைகளை சுடுநீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? மாத்திரை சாப்பிட எந்த முறை சரியானது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை நாம் தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

    வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.

    சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.

    பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.

    பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

    சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

    ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.

    வில்லியனூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பைபாஸ்ரோட்டில் வசித்து வருபவர் கமலரசன். இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூங்குழலி(வயது32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூங்குழழி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே பூங்குழலி கால் வலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தும் கால்வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூங்குழலிக்கு கால்வலி அதிகமானதாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த பூங்குழலி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று விட்டார். அதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்குழழி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். #MinisterVijayaBhaskar #SwineFlu
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுகுமாறும், மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.



    மேலும், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது பொது மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் அரசர் சீராளர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். #MinisterVijayaBhaskar #SwineFlu #TamifluTablets
    மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.
    நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. மருந்தின் தன்மையை பொறுத்தே டாக்டர்கள் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன்பும், சில மாத்திரைகளை சாப்பிட்டிற்கு பின்பு சாப்பிடவும் அறிவுறுத்துகின்றனர்.

    சில மருந்துகளை நாம் உண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச்செய்து வயிற்றில் பிரச்னை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடவே டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

    இதுபோல மாத்திரைகளை பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ரசாயன மாற்றம் அடைத்து உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளை தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
    உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை என மாத்திரைகள் பலவகைகளில் உள்ளன.
    நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன.

    இந்த மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா… மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன? பார்க்கலாம்.

    மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    உணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.

    நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.

    வாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் மாத்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.

    மாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், ‘குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்’ என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.

    பாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.



    மாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.

    தவறான முறைகள்

    ஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.

    நீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.

    காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.

    மாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்.
    ×