என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    • மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
    • பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் துவங்கி அன்னூர், அவிநாசி, திருமுருகன் பூண்டி, திருப்பூர் மாநகராட்சி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு எஸ்.எம்.நகர் செல்லும் வழியில் உள்ள ெரயில்வே கேட் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்க 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழியை மூடாமல் விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் எந்தவித பாதுகாப்பும் இன்றி அந்த குழி இருந்து வருகிறது. வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையான இந்த சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். குழியால் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதாவது ஏற்படுவதற்கு முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
    • நடுவில் ராட்சத எந்திரங்களை கொண்டு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை-அவினாசி ரோட்டில் ஏராளமான கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளது.

    இதனால் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை யில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை குறைப்பதற்காக கோவை உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து சின்னியம்பாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1.621 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. சின்னியம்பாளையத்தில் இருந்து தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது தூண் அமைக்கும் பணி முக்கிய சிக்னலான அண்ணா சிலை சிக்னல் அருகே நடந்து வருகிறது. தூண்கள் அமைக்கும் பணிக்காக சிக்னலின் நடுவில் ராட்சத எந்திரங்களை கொண்டு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த பணிகள் நடைபெறுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

    • பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
    • அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் திருப்பூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேட்டுப்பாளையம் நகரில், திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய், பதிக்கும் பணிகள் நடக்கின்றன. புதிய குடிநீர் திட்ட பம்பிங் மெயின் குழாய் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக வருகிற 29, 30, 31- ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது. மேலும் அனைத்து வார்டுகளுக்கும் அவசர தேவைகளுக்காக லாரி மூலம் அந்தந்த பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் குடிநீர் வரும்பொழுது சேமித்து வைப்பதுடன் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டுமென நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் வினோத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது
    • கோவில் வாகனங்களில் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    வடவள்ளி,

    கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. 4-ம் நாளான இன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணியருக்கு மூல மந்திரம் யாகம் வளர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தங்க யானை வாகனத்திலும் காட்சியளித்தார்.

    இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் 30-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும் 31-ந் தேதி(திங்கட்கிழமை) காலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில் வாகனத்தில் மட்டும் மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என்று பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மட்டும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கபப்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாகவும், வடவள்ளி காவல்துறை சார்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    • எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார்.
    • 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் கொள்ளை ேபானது.

    கோவை,

    கோவை கணபதி வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (44). இவர் எல்.ஐ.சி. கணபதி கிளையில் வீட்டு லோன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ளார். ரபீனா கடந்த 21-ந் தேதி குடும்பத்துடன் நெல்லைக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 22 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ரபீனா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரபீனா கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை மாநகரத்தில் வருகிற 31-ந் தேதி கடைகள் அடைப்பு என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
    • நாங்கள் பந்த் அறிவித்தவர்களிடம் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம்.

    கோவை,

    கோவை மாநகரில் வருகிற 31-ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அன்றைய தினம் வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரத்தில் வருகிற 31-ந் தேதி கடைகள் அடைப்பு என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

    கார்-சிலிண்டர் வெடிப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி சமூக விரோதிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.

    அதே சமயம் பந்த் என்றால் அது பொது பந்த் தேவைப்படும் போது வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பு நல்க உள்ளது. வணிகர் அமைப்புகளையும் கலந்து பேசி முடிவு செய்து தேதி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக இருக்கிறது.

    எனவே நாங்கள் பந்த் அறிவித்தவர்களிடம் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம். எங்களுடைய இந்த அறிவிப்புக்கு எதிராக வணிகர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும், இணைந்த வணிக சங்கங்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர்
    • கார் வெடி விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையை தொடங்கி விட்டது.

    கோவை,

    திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோவை உக்கடத்தில் காரில் உள்ள சிலிண்டர் வெடித்து காரில் பயணித்த நபர் பலியானார். மேலும் காரும் வெடித்து சிதறியது. இது தொடர்பாக தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். கோவையில் எவ்வித பதற்றமும் இல்லாமல் இயல்பாக மாறிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது.

    கார் வெடி விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை ஆரம்ப நிலையில் இருந்த போதே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ் துறைக்கே தெரியாத பல விபரங்களை கூறியுள்ளார்.

    எனவே இது பா.ஜ.கவின் சதித்திட்டமா அல்லது வெடிவிபத்து ஏற்படும் என்று அவருக்கு முன்பே தெரியுமா? அல்லது பொய்யான தகவல்களை மக்களிடையே பேசி விசம பிரசாரம் பரப்பி மதக்கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனர் இதுபோன்ற நிகழ்வுகளில் பொது மக்களை எவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தினீர்களோ அதுபோன்று பொது அமைதியை கெடுக்கும் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கோவை,

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் சந்தேகமும் வலுத்து கொண்டே போகிறது. எனவே என்.ஐ.ஏ. விசாரணை இதன் உண்மை நிலையை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.

    இது போன்ற தவறான நிகழ்வுகளுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்னென்ன தொடர்பு இருக்கிறது. அவர்களின் பின்னணி நோக்கம் என்ன? ஏன் இது போன்ற தேசிய விரோத செயல்களில் ஈடுபட துணிந்தார்கள் என்பதெற்கெல்லாம் இன்னும் பதில் இல்லை.

    பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும்போது உண்மையை வெளிக்கொண்டு வந்து தவறானவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மக்களுடைய அச்சத்தை போக்கக்கூடிய நிலையை அரசு உறுதியுடன் எடுத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மேலும் 31-ந் தேதி பந்த் என்று அறிவித்துள்ள பா.ஜ.க அறிவிப்பானது கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.
    • 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோவை,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்ப டுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    பொதுவாக மாதம் தோறும் பறவைகளின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டு 200 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது வரை மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு சென்றார்.
    • பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    கோவை,

    கோவை காரமடையை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜோதிமணி (36). இவர்களது மகள் ரித்திகா (11).

    சம்பவத்தன்று பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி, மகளை அைழத்து கொண்டு காரனூரில் இருந்து அக்கரை செங்கப்பள்ளி ரோட்டில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்தனர்.

    இதில் பிரகாஷ் சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் பிரகாசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி-மகள் கண்முன்னே தொழில் அதிபர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (73). இவரது மனைவி சாந்தி (64). சம்பவத்தன்று இவர்கள் காரில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி ரோட்டில் வந்தனர். காரை சாந்தி ஓட்டினார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது.இதில் ஆனந்த்ராஜ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருண் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் அருண் (வயது 22). இவர் சரவணம்பட்டியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவைப்புதூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கடைக்கு புரோட்டா வாங்குவதற்காக சென்றார். ஓட்டல் உரிமையாளரிடம் 8 புரோட்டா கேட்டார். பின்னர் வீட்டிக்கு சென்று திறந்து பார்த்த போது புரோட்டா குறைவாக இருந்தது. இதனையடுத்து அருண் ஓட்டலுக்கு சென்று உரிமையாளரிடம் இது குறித்து கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளார் சத்திரக் (22) மற்றும் அவரது நண்பர் ராஜா சந்திரன் (32) ஆகியோர் சேர்ந்து இரும்பு நாற்காலியால் அருணை தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • ஷாஜகான் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார்

    கோவை,

    கோவை மரக்கடையை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அந்த பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் அங்கு இருந்த மேலாளரிடம் மரம் வேண்டும் என கேட்டார். மரத்தை காண்பித்த மேலாளர் சாப்பிடுவதற்காக சென்றார்.

    அப்போது அந்த இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார். இது குறித்து அவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்த சமீரா (வயது 32) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2020 -ம் ஆண்டு போத்தனூரை சேர்ந்த அப்துல் மஜித் என்பவரிடம் 5 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.

    இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×