என் மலர்
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் தாக்குதல்"
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
- கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டி காஸில் வசித்து வந்த சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரசூலைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
- நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர்.
- ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதல் முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் சிவசேனா (UBT) எம்பி சஞ்சய் ராவத் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் அமித் ஷா ஒரு தோல்வியடைந்த உள்துறை அமைச்சர், அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
அவர் கூறியதாவது, பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதிலுமிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்களில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆறு பேர் அடங்குவர்.
பயங்கரவாதிகள் சுடுவதற்கு முன்பு தங்கள் மதத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதற்கு முன்பு மதத்தைக் கேட்டால் அதற்கு பாஜகவின் வெறுப்பு அரசியலே காரணம்.
வெறுப்பு அரசியல் ஒருநாள் பெரிய பூமரங் போன்று வெடிக்கும். வேறு யாரும் அதற்குப் பொறுப்பல்ல. மேலும் இது மேற்கு வங்காளத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்குப் பரவிவரும் வெறுப்பின் விளைவு. ஆளும் கூட்டணியினர் அரசை அமைப்பதிலும், கவிழ்ப்பதிலும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பதிலுமே 24 மணி நேரமும் மும்முரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அதன்பின்பு மக்களை எவ்வாறு பாதுகாப்பார்கள்? நாட்டின் வரலாற்றில் அமித் ஷா ஒரு தோல்வியுற்ற உள்துறை அமைச்சர். முழு நாடும் அவரது ராஜிநாமாவை எதிர்பார்க்கிறது. ஒருநாள் கூட அந்தப் பதவியை வகிக்க அவருக்கு உரிமை இல்லை.
பஹல்காமில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். ஆனால் அங்கு ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை.
இருப்பினும், அமித் ஷா ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது, அவரது பாதுகாப்புக்காக 75 வாகனங்கள் கொண்ட ஒரு கான்வாய் இருந்தது. 500க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இருந்தனர். அவருடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவும் இருந்தது. ஒருவருக்கு இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஒரு பாதுகாப்புக் காவலர் கூட இல்லை. இதெல்லாம் ஏன் நடந்தது? ஏனென்றால், இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள இரண்டு லட்சம் பணியிடங்களை மோடி அரசு நிரப்பவில்லை. பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டை அவர்கள் குறைத்துள்ளனர்.
காஷ்மீரின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மோடி அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியது. எனவே, நேற்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு முழுப் பொறுப்பாகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. மோடி-அமித் ஷா நாடாளுமன்றத்தில் நம் அனைவரிடமும் (பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக) பொய் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
- டெல்லியில் உள்ள ஏஐசிசி அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடும் என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இது நம் அனைவரையும் மிகவும் காயப்படுத்தி அதிர்ச்சியடையச் செய்தது. இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த தாக்குதல் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதல். 2000 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான சிட்டிசிங்புரா படுகொலைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மேற்கொண்ட மிகவும் வெட்கக்கேடான மற்றும் மூர்க்கத்தனமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நிராயுதபாணியான மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொன்றவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நேற்று மாலையில் காஷ்மீரில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேசினேன். பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஏஐசிசி அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடும் என்று தெரிவித்தார்.
இது கட்சி அரசியலுக்கான நேரம் அல்ல என்று கூறிய கார்கே, "இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் துக்கமடைந்த குடும்பத்தினருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான கூட்டுத் தீர்மானத்திற்கான தருணம் இது" என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
"இந்த நேரத்தில் நாம் அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டுள்ளோம், இதுபோன்ற சம்பவங்கள், பயங்கரவாதிகள் மற்றும் நமக்கு எதிராகப் போராடுபவர்களை ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும். நாட்டைக் காப்பாற்றவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும் நாம் ஒன்றாக இருப்போம்" என்று கூறினார்.
மேலும் "பயங்கரவாதியை வேட்டையாடுவதற்கு அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம், கிட்டத்தட்ட 22 மணி நேரம் ஆகிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைப் பேண அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
- ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர்.
- உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர். தங்கள் கண்முன்னே குடும்பத்தினர் கொல்லப்பட்டது அவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவத்தின் பின் தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பயந்துபோன சுற்றுலாப் பயணிகளை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றபோது, உயிர் பிழைத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர், வீரர்களை பயங்கரவாதிகள் என்று தவறாக நினைத்து அலறி அடித்து பின்வாங்கும் காணொளி வெளியாகி உள்ளது.
அதிர்ச்சி மற்றும் பயத்தில் அழுது அலறிய அவர்களிடம், "நாங்கள் இந்திய ராணுவம், உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்று கூறி சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
- அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
- பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில், "நேற்று பஹல்காமில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதலால் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன்.
அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் அர்த்தமற்ற மிருகத்தனமான செயல்களுக்கு நமது சமூகத்தில் எந்த இடமும் இல்லை.
அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இழந்த விலைமதிப்பற்ற உயிர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். பயங்கரவாதம் எங்கள் உறுதியை ஒருபோதும் உடைக்காது. இந்த காட்டுமிராண்டித்தனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று தெரிவித்தார்.
- தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பாதுகாப்புப் படையினர் இன்று வெளியிட்டனர்.
இவர்கள் ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பை சேர்நதவர்கள் என்று தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களையும் பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர்.

அதிகாலையில், பயங்கரவாதிகளில் ஒருவரின் முதல் படமும் ஆன்லைனில் வெளியானது. அந்தப் படத்தில் பயங்கரவாதி ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டுகிறது.

- 3 ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
- பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களில் அவர்கள் சுற்றி பார்த்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்
இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில் நரேந்திரன், அஜித்குமார், கிரிஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் பஹல்காம் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றிப்பார்த்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் தான் அப்பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் நீதிபதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர்.
- இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்பு
- வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த போட்டியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
- தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் இன்று காலை ஊடுருவ முயன்றனர்.
அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
அந்த பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.
- பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
பெஹல்காமில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் மனைவி, மகன் கண்முன்னே கர்நாடகாவின் சிவ்மொஹாவை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மனைவி பல்லவி, மகன் கண்முன்னே மஞ்சுநாத் உயிரிழந்தார்.
இதுகுறித்து பல்லவி கூறுகையில், நான், என் கணவர் மற்றும் மகன் மூவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே அவரை கொன்றனர். கெட்ட கனவுபோல் இருக்கிறது.
நான்கு பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல் என்னையும் கொன்றுவிடுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி கூறினார்" என்றார்.
பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சில பெண்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது.
- நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.
- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
லைவ் 93 செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.
ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
- அரியானாவை சேர்ந்த கடற்படை அதிகாரி வினய் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.
- தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் உயிரிழந்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.