என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேஷன்"

    • இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.
    • இதையொட்டி இன்று மாலையில் மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் காரில் ஏறி புறப்பட்டார்

    கோவை 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் கடும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்த கசிவு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கடந்த 17- ந்தேதி மூளை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பு சிகிச்சையில் இருந்தார். ஜக்கி வாசுதேவ் நலமுடன் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா அறக்கட்டளை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றும் வெளியானது.அதில் சத்குருவின் உடல்நிலை முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.




    இந்நிலையில்,ஜக்கி வாசுதேவ் தற்போது பூரண குணமடைந்து உள்ளார்.இதையொட்டி இன்று மாலையில் புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார்.அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார்

    அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதாரெட்டி சத்குருவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் 'சத்குருவிற்கு சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர் வினித் சூரி, டாக்டர் பிரணவ் குமார், டாக்டர் சுதீர், டாக்டர் எஸ். சாட்டர்ஜீ மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஒட்டு மொத்த குழுவிற்கும் ஈஷா அறக்கட்டளை மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது". என்று  கூறி உள்ளது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
    • வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வீட்டில் அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

    உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்தனர். அப்போது வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவருக்கு ஆபரேஷன் செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் ஒரு அடி நீளத்திற்கு சுரைக்காய் இருந்தது தெரிய வந்தது. அதனை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். மேலும் சுரைக்காய் வயிற்றில் இருந்ததால் வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாலிபரின் ஆசனவாய் வழியாக அவருடைய உடலுக்குள் சுரைக்காய் செலுத்தப்பட்டுள்ளது. வாலிபர் சுயநினைவு இல்லாமல் தற்போது உள்ளார்.

    அவருடைய வயிற்றில் யாராவது வலுக்கட்டாயமாக சுரைக்காய் செருகினார்களா?. அல்லது அவரே வைத்தாரா என்பது தெரியவில்லை.

    வாலிபருக்கு சுயநினைவு வந்தால் மட்டுமே இது குறித்து தகவல் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஆபரேஷன் செய்ய வந்த பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் கத்தரிக்கோலை வைத்து தைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #NIMS #scissorsinabdomen
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி சவுத்ரி (32), குடலிறக்க நோயால் கடும் பாதிப்பு அடைந்தார்.

    இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (NIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவானது.

    கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டாக்டர்கள் அவருக்கு ஆபரேஷன் செய்தனர். உடல்நலம் தேறி வந்தவருக்கு மீண்டும் கடும் வயிற்று வலி ஏற்பட்டது.



    இதைத்தொடர்ந்து, ஆபரேஷன் செய்த மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். வயிற்றில் நீளமான கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், ஏற்கனவே நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனில் தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்துள்ளது தெரிய வந்தது. நிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுதொடர்பாக, மகேஸ்வரியின் கணவர் மருத்துவமனை மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். #NIMS #scissorsinabdomen
    ×