என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "தண்டராம்பட்டு"
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அடுத்த சு.வாழாவெட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜீ இவரது மனைவி தீபா (வயது 27). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ராஜீவிற்கு மது குடிபழக்கம் இருந்தது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தீபாவிடம் சண்டை போட்டுள்ளார். சம்பவத்தன்றும் ராஜீ மது குடித்துவிட்டு தீபாவிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த தீபா வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிகொண்டு தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீபா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60) விவசாயி. இவரது மனைவி விருதாம்பாள் (55). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
நிலத்தில் பயிரிடபட்டுள்ள கரும்பிற்கு நீர் பாசனம் செய்வதற்காக தம்பதியினர் நேற்றிரவு நிலத்திற்கு சென்றனர்.
அப்போது நிலத்தில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் அழத்த மின்சார கம்பி விருதாம்பாள் தலை மீது உரசியது இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தார்.
அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தம்பதியினர் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.