என் மலர்
முகப்பு » slug 132338
நீங்கள் தேடியது "மணலி"
மணலி அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் முகம்மது ஆலம் (வயது32), சத்யபிரகாஷ் (44).
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவரும் கொடுங்கையூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.
நேற்று இரவு முகம்மது ஆலமும், சத்யபிரகாசம் ஒரே மோட்டார் சைக்கிளில் மணலி அருகே சென்று கொண்டு இருந்தனர். ஆண்டார்குப்பம் அருகே வந்த போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முகமது ஆலம், சத்திய பிரகாஷ் ஆகிய 2 பேரும் பரிதாபமாக பலியானார்கள்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவர், விருதுநகரை சேர்ந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
×
X