என் மலர்
நீங்கள் தேடியது "சஜ்ஜன் குமார்"
- இந்திரா காந்தி படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
- டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிப்ரவரி 18 அன்று சஜ்ஜன் குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இவ்வழக்கை முதலில் பஞ்சாப் போலீசார் விசாரித்து வந்தாலும், பின்னர் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
- இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது.
- டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2,800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு சஜ்ஜன் குமாரை ஆஜர்படுத்தும்படி, திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவரை இன்று ஆஜர்படுத்தவில்லை. இதையடுத்து சஜ்ஜன் குமாரை, வரும் 28-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டு, ஒப்படைப்பு வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiots #SajjanKumar
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், தண்டிக்கப்பட்ட சஜ்ஜன் குமார், மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோர் இன்று டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
சஜ்ஜன் குமாரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு கருதி அவரை திகார் சிறையில் வைக்க வேண்டும் என்று கோரிய அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
உரிய பாதுகாப்புடன் அவரை தனி வாகனத்தில் கொண்டுசென்று மன்டோலி சிறையில் அடைக்குமாறு போலீசாரை நீதிபதி அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து சஜ்ஜன் குமார் சுமார் 3 மணியளவில் மன்டோலி சிறையில் அடைக்கப்பட்டார். #antiSikhriots #SajjanKumar #Mandolijail
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்ப விவகாரம் மற்றும் சொத்து விவகாரம் உள்ளிட்ட 15 காரணங்களை கூறி சஜ்ஜன் குமார் தரப்பில் அவகாம் கேட்கப்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட், சஜ்ஜன் குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது. #SajjanKumar #DelhiHighCourt #Surrender #AntiSikhRiotsCase
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 1984-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இதில் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் (வயது 73) மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 17-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தனது வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக வருகிற 31-ந்தேதிக்குள் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.
ஆனால் இந்த வழக்கில் சரணடைவதற்கு அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி வரை கால அவகாசம் தருமாறு சஜ்ஜன் குமார் தரப்பில் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும், தனது குடும்ப விவகாரங்கள் சிலவற்றை முடிப்பதற்கும் அவகாசம் தேவைப்படுவதாக அந்த மனுவில் சஜ்ஜன் குமார் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இதற்கிடையே சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் டெல்லியில் உள்ள கோர்ட்டு ஒன்றில் நேற்று சஜ்ஜன் குமார் ஆஜரானார். அந்த வழக்கு அடுத்த மாதம் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #SajjanKumar #DelhiHighCourt #Surrender #AntiSikhRiotsCase
இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக சஜ்ஜன் குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனது செல்போனை ஒப்படைத்தார். ஆனால் சஜ்ஜன் குமாரின் பிரதான வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகள் முன்னர் முடித்து வைக்கப்பட்டன. இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiotsCase #SajjanKumar
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

1947-ம் ஆண்டில் இந்தியா பிரிவினையின்போது பலர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து சீக்கியர்களுக்கு எதிரான கோரப் படுகொலைகள் நடந்துள்ளன. அரசியல் செல்வாக்கை வைத்து தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்பி விட்டனர் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி வரும் 31-12-2018 அன்றைய தினத்துக்குள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி சஜ்ஜன் குமார் சரணாகதி அடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.
இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.
இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்து உத்தரவிட்டதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence #SajjanKumar