என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "காட்டுப்பாக்கம்"
- கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி 116.1 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடி செலவில் 3 வழித் தடங்களில் அமைக்கப்பட உள்ளது. இதில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரி வரை 45.4 கி.மீட்டர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்க நல்லூர் வரை 44.6 கி.மீட்டர் தூரத்திற்கு பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகின்றன. இந்த 2-ம் கட்ட திட்டத்தில் முதல் பாதை பூந்தமல்லி -போரூர் வழித்தடம் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
9 கி.மீட்டர் நீளத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் போரூர் புறவழிச்சாலை, தெள்ளியகரம், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன் சாவடி, கரையான் சாவடி, முல்லைத்தோட்டம், பூந்தமல்லி, பூந்தமல்லி புறவழிச்சாலை என மொத்தம் 9 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகிறது.
இதில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கரையான்சாவடி மற்றும் குமண்னசாவடியில் மெட்ரோ பணிகளில் பல்வேறு தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலாக மாறி உள்ளது.
குறிப்பாக காட்டுப்பாக்கம் பகுதியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதே போல் கரையா்னசாவடி, குமணன்சாவடியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணி சவாலாக மாறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, கரையான்சாவடி, குமணன்சாவடியில் மெட்ரோ ரெயில் பணிகள் சவாலாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும். கடந்த ஆண்டுமுதல் கூடுதல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
போரூர்:
காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகீம். இவரது மனைவி சஜிதா. இன்று காலை கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
வானகரம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த தண்ணீர் லாரி திடீரென அப்துல்ரகீம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி சஜிதா சம்பவ இடத்திலேயே பலியானார். அப்துல்ரகீம் லேசான காயத்துடன் தப்பினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.