என் மலர்
நீங்கள் தேடியது "நாசா"
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.
நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவது தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்த நிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- நேற்று அதிகாலை பால்கன்-9 ராக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.
- விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சென்றனர். அவர்கள் 10 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இதையடுத்து இருவரையும் மீட்டு கொண்டு வர ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை பால்கன்-9 ராக்கெட்டில் டிராகன் விண்கலம் ஏவப்பட்டது.
இதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆனி மெக்கிளைன், நிக்கோலி அயர்ஸ், ஜப்பான் விண்வெளி வீரர் டகுயா ஒனிஸி, ரஷிய விண்வெளி வீரர் கிரிஸ் பெஸ்கோவ் ஆகியோர் சென்றனர். இந்த விண்கலம் இன்று காலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அதில் இருந்து விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர். அவர்களை அங்கிருக்கும் வீரர்கள் வரவேற்றனர். வருகிற 19-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்ப உள்ளனர். அதேவேளையில் வானிலை இடையூறு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
- ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலக புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். நாசாவில் வானிலை மாறுபாடு என்றும் துறை தேவையில்லாதது என டிரம்ப் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
- ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
- 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.
நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.
முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது.
ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16ம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.
பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் புமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவை அடைந்துள்ளது. அதன் சுற்றுவட்டப்பாதை அருகே விண்கலம் சென்றடைந்து இருக்கிறது. நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது.
சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 25ம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். அதன்பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். அதன்பின் ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.
- சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
- ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதில் சோதனை முயற்சியாக ராக்கெட் மூலம் ஒரியன் விண்கலம் கடந்த மாதம் 16-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஓரியன் விண்கலம் நிலவின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு சுற்றியது.
இந்த நிலையில் நிலவின் மேலே ஆய்வை முடித்துக் கொண்டு ஓரியன் விண்கலம் பூமிக்கு புறப்பட்டுள்ளது. வருகிற 11-ந்தேதி உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு ஓரியன் விண்கலத்தை சான்டியாகோவில் பசிபிக் பெருங்கடலில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்கலம், அமெரிக்க கடற்படை கப்பலில் ஏற்றப்படும். ஓரியன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு அதன் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆர்டெமிஸ்-2 திட்டம் தொடங்கப்படும்.
- மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
- சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்தது.
வாஷிங்டன்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் தேதி 'ஆர்டெமிஸ்-1' ராக்கெட் மூலம் 'ஓரியன்' விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த 'ஓரியன்' விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் 'ஓரியன்' விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த 'ஓரியன்' விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
- விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
- ஏசி சரனியா விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.
வாஷிங்டன் :
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
- செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
- செவ்வாய் கிரகத்தை சுற்றி 5 பயணங்களின் போது மேவன் விண்கலத்தால் கவனிக்கப்பட்ட 450 தனி அலை துடிப்புகளின் பகுப்பாய்வை கூறுகிறது.
புதுடெல்லி:
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம் (மேவன்) விண்கலத்தில் லாங்முயர் ஆய்வு மற்றும் அலைகள் கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட மின்சார புல தரவுகளின் உதவியுடன் செவ்வாய் காந்த மண்டலத்தின் உள்ள தனி அலைகளை நவி மும்பையை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோ மேக்னடிசம் (ஐ.ஐ.ஜி) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த தனி அலைகள் செவ்வாய் காந்த மண்டலத்தில் உள்ள தனித்த மின்புல ஏற்ற இறக்கங்கள் ஆகும். அவை துகள் ஆற்றல், பிளாஸ்மா இழப்பு மற்றும் அலைத்துகள் இடைவினைகள் மூலம் போக்குவரத்தை கட்டுப்படுத்துகின்றன.
இதுகுறித்து அந்த ஐ.ஐ.ஜி.நிறுவனத்தின் விஞ்ஞானி பாரதி காகட் கூறுகையில், பொதுவாக எந்த விண்வெளி நிறுவனமும் தனது பேலோடில் இருந்து தரவை 6 மாதங்களுக்கு தக்க வைத்து ஆய்வு செய்யும். அதன் பிறகு கொள்கையின்படி பொது களத்தில் தரவுகளை வைக்க வேண்டும். நாசா அந்த மேவன் தரவை பொது டொமைனில் வைத்த போது எங்களது குழு அதனை படித்தது. 3 மாத பகுப்பாய்வுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தில் தனி அலைகளை கண்டுபிடித்தோம் என்றார்.
இந்த கண்டுபிடிப்புகள் தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தை சுற்றி 5 பயணங்களின் போது மேவன் விண்கலத்தால் கவனிக்கப்பட்ட 450 தனி அலை துடிப்புகளின் பகுப்பாய்வை கூறுகிறது.
- செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.
- செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன.
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா பல்வேறு செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் பாறையில் கரடி முகம் அமைப்பு இருப்பது போன்ற படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள குழிகளின் புகைப்படம் இதுவாகும்.
இதில் மேலே இரண்டு சிறிய குழிகள் காணப்படுகின்றன. அவை ஒரே நேர்கோட்டில் சரியாக உள்ளன. அவைகள் கண்கள் போல் உள்ளது.
அதன் கீழ் பகுதியில் பெரிய குழி உள்ளது. இது அழகாகவும், நீளமாகவும் உள்ளது. அது வாய் மற்றும் மூக்கு பகுதி போல் உள்ளது. இந்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இது இயற்கையாக ஏற்பட்ட குழி ஆகும். அது கரடியின் முகத்தை போல் தோன்றுகிறது. மொத்தம் 2 ஆயிரம் மீட்டர் அகலத்திற்கு இந்த உருவம் உள்ளது.
இது அதிநவீன கேமரா மூலம் படம் எடுக்கப்பட்டது. மூக்கு பகுதியை போன்று இருப்பது ஒரு எரிமலையாக இருக்கலம் அல்லது மண் துவாரமாக இருக்கலாம் என்றும் சுற்றி தெரியும் வட்ட வடிவமானது எரிமலை குழம்பு அல்லது மண் சரிவாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை எடுத்த புகைப்படங்களில் பல ஆச்சரிய விஷயங்கள் இருந்தன. பெண் ஒருவர் பாறை மீது அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
- சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும்.
- கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.
புதுடெல்லி:
சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது 'கொரோனல் ஓட்டை' என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது.
இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23-ந்தேதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது.
கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இருந்து புறப்படக்கூடிய மணிக்கு 2.9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பூமியின் காந்த புலம், செயற்கைகோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பார்க்க விஞ்ஞானிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் ஒருவாரத்தில் தோன்றிய 2-வது துளை இது ஆகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 23-ந்தேதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது.
இதுகுறித்து நாசா அதிகாரிகள் கூறுகையில், கொரோனல் துளைகள் என்பது அதிவேக சூரிய காற்றின் ஒரு ஆதாரமான காந்த பகுதிகளாகும். தீவிர புறஊதா ஒளியின் பல அலை நீளங்களில் பார்க்கும்போது அவை இருட்டாக தெரியும் என்றனர்.
- அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
- அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர்.
வாஷிங்டன்:
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி அமெரிக்காவின் அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் மனிதராக நிலவில் கால் பதித்தார்.
வருகிற 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரியன் விண்கலத்தை நாசா உருவாக்கியது.
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் ஆர்ட்டெ மிங்-1 ஓரியன் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஆளில்லாமல் அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம், நிலவுக்கு 130 கி.மீ. தொலைவில் இருந்து துல்லியமாக படமெடுத்து அனுப்பியுள்ளது. அதன்பின் அந்த விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
இதையடுத்து ஆர்ட்டெ மிஸ்-2 திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் தொடங்கினார்கள். இதில் நிலவுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆர்ட்டெமிஸ்-2 விண்கலத்தை மனிதர்களுடன் நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் நிலவுக்கு அனுப்ப நான்கு விண்வெளி வீரர்களை நாசா தேர்வு செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், பெண் வீராங்கனையான கிறிஸ்டினா கோச், கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் 3 பேரும் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்துள்ளனர். ஜெர்மி ஹேன்சன் தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார். இவர்கள் 4 பேரும், நீல நிற விண்வெளி உடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
கிறிஸ்டினா கோச், நிலவு பயணத்துக்கு அனுப்பப்படும் முதல் பெண் என்ற சிறப்பை பெறுகிறார். அவர் எலக்ட்ரிகல் என்ஜினீயர் ஆவார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது விண்வெளி நடைபயணத்தில் பங்கேற்ற முதல் முழு பெண் என்ற பெருமையை பெற்றார்.
ஆர்ட்டெமிஸ்-2 விண்கலம் நிலவை வட்டமிடும். ஆனால் அதன் மீது தரையிறங்காது.
- அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
- புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் வியப்பூட்டும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
தற்போது நியூ ஹரிசான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் சூரியனை சுற்றி வரும் 9-வது பெரிய கோளான புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு, பள்ளங்கள் மற்றும் சமவெளி பகுதிகள் அமைந்து இருப்பது போன்று உள்ளது. புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது அற்புதமான புகைப்படம். இதை படம் எடுத்த நியூ ஹரிசான்ஸ் விண்கலத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.