என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து இலங்கை கிரிக்கெட்"

    • ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
    • நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.

    இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.

    இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

    அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இலங்கைக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தபின் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 தொடர் நடக்கிறது.

    இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டிம் சவுத்தி (துணைக்கேப்டன்), 2. பெர்குசன், 3. மார்ட்டின் கப்தில், 4. ஸ்காட் குகேலெஜின், 5. கொலின் முன்றோ, 6. ஜிம்மி நீசம், 7. ஹென்ரி நிக்கோல்ஸ், 8. கிளென் பிலிப்ஸ், 9. சேத் ரேன்ஸ், 10. மிட்செல் சான்ட்னெர், 11. டிம் செய்பெர்ட், 12. இஷ் சோதி, 13. ராஸ் டெய்லர்.
    ×