என் மலர்
நீங்கள் தேடியது "காரமடை"
- சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெற்றது
- போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா, காரமடை மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் விவேகானந்தர் பசுமை இயக்கம் சார்பில் தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இதற்கு காரமடை மேற்கு ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார்.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாவட்ட பொதுக்குழு செயலா ளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ், மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக காரமடை ஸ்ரீ விநாயக வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். மாரத்தான் போட்டி மருதூர் பெட்ரோல் பங்கில் தொடங்கி வெள்ளியங்காடு பகுதியில் உள்ள போரேகவுடர் திருமண மண்டபத்தில் முடிவுற்றது.
இதில் காரமடை நகர தலைவர் ஆனந்தகுமார், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கதிர்வேல், மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட தலைவர் ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.போட்டியில் மொத்தம் 480 பேர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- அரங்கநாதர் கோவில் தேர் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
- கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோ ட்டம் நாளை மறுநா ள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.இதில் பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் பெட்டத்தாபுரம், திம்ம ம்பாளையம், மங்களக்கரை புதூர், டீச்சர்ஸ் காலனி வழியாக காந்திநகர் செல்ல வேண்டும்.
அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் காந்திநகர் வழியாக தொட்டிபாளையம் பெள்ளாதி, கண்ணார்பா ளையம் வழியாக மத்தம்பா ளையம் செல்லும்.
தேர் திருவிழா நடைபெறும் 6 மற்றும் பந்த சேவை நிகழ்வு நடைபெறும் 7-ந் தேதி ஆகிய இரு தினங்களிலம் இந்த போக்குவரத்து மாற்றமானது இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கோவை-மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்-கோவை செல்லும் வாக னங்கள் இதனை பின்பற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்
- முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை நகராட்சி க்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. திமுக துணைப்பொது செயலாளரும், நீலகிரி எம்.பி. யுமான ஆ.ராசா கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ், நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவு.
- தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸ் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கேரளாவையொட்டி தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் மருத்துவக்குழுவினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள எல்லையையொட்டி அமைந்து உள்ள கோபனாரி, முள்ளி ஆகிய சோதனைச்சாவடிகளில் வட்டார மருத்துவ அதிகாரி சுதாகர் மேற்பார்வையில் டாக்டர் பிரவீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹேமலதா மற்றும் 2 நர்சுகள், ஒரு மருந்தாளுர் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர காய்ச்சல் பரிசோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதியாகி உள்ளது. இதனால் சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால்கள் மூலம் நேரடியாக மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது. அவற்றின் சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் மற்றும் அவை விட்டு செல்லும் பழங்களை தின்பதாலும் பாதிப்பு உருவாகும்.
மேலும் வவ்வால்கள் மூலம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நோய் பரவி மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு அதிகம். இந்த வகை காய்ச்சல் பாதித்தவருடன் தொடர்பில் இருந்தால் அவருக்கும் நோய் பரவ வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் தற்போது வரை நிபா வைரசால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவையொட்டி அமைந்து உள்ள காரமடை முள்ளி, கோபனாரி சோதனைச்சாவடிகளில் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மேலும் காய்ச்சல் பாதித்தவரின் பெயர், தொடர்பு எண் பெறப்பட்டு அவர்களை தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் உள்ளதா, அல்லது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரா என்ற விவரங்கள் பெறப்படுகிறது. இதுவும் தவிர அவர்கள் சென்ற பகுதிகளிலும் சுகாதார மேற்பார்வையாளர் மூலம் ஆய்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
- செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர்.
- கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுமதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுவதில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தினால் எப்படி மக்கள் பிரச்சனையை பேசுவது. எங்களது வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டும் இதுவரை நிறைவேற்றி தரவில்லை என பேசினர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் சாந்தி, மலர்க்கொடி, வனிதா சஞ்சீவ் காந்தி, காந்தி ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சி அலுவலகத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால் கூட்ட அரங்கு இருட்டாக காணப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர். இதனால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை காரமடை சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).
இன்று காலை காரமடை- மேட்டுப்பாளையம் இடையே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜேஷ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், ஏட்டு பரமேஷ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை காரமடை அருகே உள்ள அம்சாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நித்யா (வயது 22). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த வாலிபர் திருமண செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த நித்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து நித்யாவின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.