என் மலர்
நீங்கள் தேடியது "ஜேபிசி விசாரணை"
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு.
- உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
மகா கும்பமேளா திருவிழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 29-ந்தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஒரே நேரத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பட்ஜெட் கூட்ட விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி பேசுகையில் "45 நாட்கள் கும்பமேளா திருவிழாவிற்கான 2500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய மற்றும் துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தவர்களின் எணணிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்குதல் குறித்து எந்த தெளிவும் இல்லை.
மாநில அரசின் குறைபாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணை மத்திய அரசால் ஏன் எடுக்கப்படவில்லை?, நீங்கள் அதை ஒரு உள்நாட்டு பிரச்சனையாக ஆக்கிவிட்டீர்கள். அது இனி ஒரு மாநில பிரச்சினை அல்ல. மகா கும்பமேளா தொடர்பான புகார்களை விசாரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதுஒருபுறமிருக்க ஆளும் பாஜக எம்பிக்கள் சிலர், தங்கள் இருக்கைகளில் இருந்தபடியே சில பிரச்சினைகளை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.
கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் அங்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. #WinterSession #CongDemandsJPC