என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் தாக்குதல்"

    • என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா...
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நமது நாட்டில் காலங்காலமாக வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. என்னதான் நாம் அறிவியல், தொழில்நுட்பம் ரீதியாக உயர்ந்தாலும் வரதட்சணை கொடுமையால் ஆங்காங்கே பெண்கள் பாதிக்கத்தான் செய்கின்றனர்.

    இதனிடையே, கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றும் கணவரை பொறிவைத்து பிடித்தும் மனைவிகள் கணவரை தாக்கும் செயல்களும் நடக்கத்தான் செய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரதட்சணை மற்றும் விவகாரத்து கேட்ட கபடி வீரரை குத்துச்சண்டை வீரரான மனைவி அடித்து வெளுத்து வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த நிலையில், தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், மேலும் பணம் கேட்டும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என கூறி சித்ரவதை செய்வதாக ஒருவர் காவல்நிலையத்தில் வீடியோவுடன் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பார்ப்போம்:-

    மத்திய பிரதேச மாநிலம் பன்னாவை சேர்ந்தவர் லோகேஷ் மஞ்சி. 30 வயதான இவர் லோகோ பைலட்டாக பணியாற்றி வருகிறார். ஹர்ஷிதா ராய்க்வார் என்பவரை வரதட்சணை எதுவும் வாங்காமல் 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே லோகேஷ் கடந்த 20-ந்தேதி காவல்நிலையத்தில் வீடியோவுடன் அளித்த புகாரில்,

    என் மனைவி என்னை அடிக்கிறார், தயவுசெய்து எனக்கு உதவுங்கள், ஐயா... திருமணமானதில் இருந்து ஹர்ஷிதா, லோகேஷ் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவோ பார்க்கக்கூடாது என்றும் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி சித்ரவதை செய்வதாகவும், தனது மனைவியும், மாமியார் மற்றும் மைத்துனர் என்னிடம் பணம் மறறும் நகைகளை கேட்டு வருகின்றனர். போலீசாரிடம் தெரிவித்தால் குழந்தையை கொலை செய்து விடுவதாக மனைவி மிரட்டுவதாகவும், ஒரு முறை என் மனைவி கொசு மருந்தைக் கூட குடித்துள்ளார். இதனால் நான் மிகவும் பயந்து பதற்றத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

    மேலும், அவர் அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்தப் பெண் அவரை கொடூரமாகத் தாக்குவதை காண முடிகிறது. மேலும், மற்றொரு பெண்மணி அவளைத் தடுக்க முயன்றாலும், அவள் கேட்கவில்லை. வெறிபிடித்தது போல் அவள் லோகேஷின் முகத்தில் எட்டி உதைக்கிறாள்.

    இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு என்ன கொடுமை சரவணா... என்று தான் எண்ணத்தோன்றுகிறது.



    திண்டுக்கல் அருகே சாப்பாடு பரிமாறாததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொன்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி (வயது 64). இவரது மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகளுக்கு வளைகாப்பு முடித்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நேற்று இரவு இன்னாசி சாப்பிட வந்துள்ளார். அப்போது எலிசி அவருக்கு தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்துள்ளார். காய்கறி, குழம்பு இல்லாததால் இன்னாசி எலிசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த இன்னாசி அருகில் இருந்த பருப்பு கடையும் மத்தால் எலிசியின் தலையில் கடுமையாக தாக்கினார். வலியால் அலறி துடித்த எலிசி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலிசியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இன்னாசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாப்பாடு பிரச்சினையில் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×