என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்"

    • 100 யூட்டுகள் வரை பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிப்பு.
    • அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும், பாஜக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் 100 யூனிட்டுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசேக் கெலாட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், " பணவீக்க நிவாரண முகாம்களை பார்வையிட்டேன். பின்னர் பொதுமக்களிடம் பேசிய பிறகு, மின்கட்டணத்தில் சிலாப் வாரியான விலக்குகளில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 100 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூட்டுகள் பயன்படுத்துவோர் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை. 200 யூனிட்டுகள் வரை நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் மற்றும் தாமத கூடுதல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், அரசின் இந்த அறிவிப்பு தேர்தலை குறிவைத்தது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

    • அசோக் கெலாட் மக்களுக்காக உழைத்திருந்தால் விளம்பர போஸ்டர் எதற்கு
    • டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சிதான்

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார்.

    நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

    நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது.

    பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது
    • மோடிக்கு கிடைத்த மரியாதை, 130 கோடி மக்களுக்குமான மரியாதை

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

    நேற்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா மத்திய பிரதேச மற்றும் சத்தீஸ்கர் பேரணியில் பேச, உள்துறை அமைச்சர் அமத் ஷா ராஜஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பேசினார். அப்போது ஊழலில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பர் ஒன் என விமர்சனம் செய்தார்.

    மேலும் பேரணியில் அவர் பேசியதாவது:-

    ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு நம்பன் ஒன்-ஆக திகழ்கிறது. ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது. இங்கே (பேரணி நடைபெற்ற மெவார் மைதானம்) கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

    மோடிக்கு உலகளவில் கிடைத்த மரியாதை, அது பா.ஜனதா கட்சிக்கோ அல்லது மற்ற ஒருவருக்கோ கிடைத்த மரியாதை அல்ல. 130 கோடி மக்களுக்கும் கிடைத்த மரியாதை. ராஜஸ்தானில் 43 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    மத்திய பிரதேசம் கார்கோனில் நடைபெற்ற பெரணியில ஜே.பி. நட்டா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை விமர்சனம் செய்து பேசினார் ''லட்லி லட்சுமி யோஜனா (பெண் குழந்தைகள் படிப்பிற்காக சிவராஜ் சவுகான் கொண்டு வந்த திட்டம்) திட்டத்தை கமல்நாத் நிறுத்தினார். தற்போது மக்கள் நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அவரை நிறுத்திவிடுவார்கள் (தேர்தல் தோல்வி)'' என்றார்.

    மேலும், ''மத்தியில் மோடி, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் அரசு. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை உடனடியாக கொண்டு சேர்ப்பார்கள்'' என்றார்.

    • இரட்டை என்ஜினில் ஒன்று எப்போதுமே பழுது
    • ஒற்றை என்ஜின் சிறப்பாக செயல்பட்டு வருகிறது

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் சமூக பாதுகாப்பு பென்சன் திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுடன் உரையாடினார். அப்போது இரட்டை என்ஜின் அரசைவிட ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக செயல்படுகிறது எனது பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிலர் அவர்களுடைய அரசாங்கத்தை (மாநிலம் மற்றும் மத்தியில் ஆட்சி செய்வதால்) இரட்டை என்ஜின் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு இந்தியன் எப்போதுமே பழுதாகியே உள்ளது. உண்மையான என்ஜின் ராஜஸ்தான் அரசு.

    அவர்களுடைய இரட்டை என்ஜின் அரசைவிட இந்தியாவில் உள்ள எங்கும் ஒற்றை என்ஜின் ஆன எங்கள் ஒற்றை என்ஜின் அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. எங்களுடைய ஒற்றை என்ஜின் பாதுகாப்பானது உறுதியானது.

    பாரதிய ஜனதா அரசு மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான், நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசான இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கிண்டல் செய்துள்ளார்.

    மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாயை, அவர்களது கணக்கில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்த அசோக் கெலாட், இந்த திட்டத்திற்கான சட்டம் இயற்றப்படும் எனக் கூறினார்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமையாகவே இருக்கும். வரும் தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனக் கூறினார்

    சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் 21 தலைவர்கள், 42 பொதுச்செயலாளர்கள், ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர், 121 செயலாளர் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
    • ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது.

    இதற்கிடையே, 5 மாநில தேர்தல் தேதிகளுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

    ராஜஸ்தானில் நவம்பர் 23 அன்று தேர்தல் நடைபெறும். வருகிற 30-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று தொடங்கி நவம்பர் 6 வரை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என அறிவித்தது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 25 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது
    • தொடர்ந்து 2-வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம்

    ராஜஸ்தானில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி, மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க, துரிதமாக வேலை செய்து வருகிறது.

    அதேவேளையில், பா.ஜனதாவும் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பை தங்களுக்கு சாதகமாக்க நினைக்கிறது. ராஜஸ்தானில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாறிமாறி வந்துள்ளது. இதனால் பா.ஜனதா இந்த முறை தங்களுக்குதான் வாய்ப்பு என்ற முறையில் வேலை செய்து வருகிறது. தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்கள் ராஜஸ்தான் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த், பொது செயலாளர் (ஒருங்கிணைப்பு) கே.சி. வேனுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப்பின் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ''சேமிப்பு, நிவாரணம், வளர்ச்சி, பாதுகாப்பு, உயர்வு போன்ற அம்சங்களில் காங்கிரசின் நல்லாட்சியால் ராஜஸ்தான் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று நம்புகிறோம்'' என்றார்.

    • ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார்.
    • சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    அந்த வகையில் ராஜஸ்தானின் தவுசா மாவட்டத்தில் உள்ள சிக்ராய் நகரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பிரதமர் மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

    அவர்கள் (பா.ஜ.க.) ஆட்சியில் இருந்தபோது, ராஜஸ்தானில் எத்தனை திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்? மோடி மற்றும் பா.ஜ.க.வின் கவனம் உங்கள்(மக்கள்) நலனில் அல்ல, மாறாக ஆட்சியில் நீடிப்பதிலும், தங்களை பலப்படுத்திக் கொள்வதிலும்தான் உள்ளது.

    ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பெரும் தொழிலதிபர்களுக்கு கொடுப்பது அவர்களின் கொள்கையாகிவிட்டது.

    ஒரு உண்மையான தலைவர் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்கிறார். கடந்த காலத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசமாட்டார்.

    சேவை மற்றும் கருணை அடிப்படையிலான அரசியலால் மட்டுமே மக்கள் நலனை அடைய முடியும். வளர்ச்சியை பற்றி பேசாமல் மதம், சாதி பிரச்சினைகளை ஏன் பா.ஜ.க. முன்வைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.

    அதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.

    அதன்படி, ராஜஸ்தான் தேர்தலுக்கு முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில் 7 எம்.பி.க்கள் பெயரும் இடம்பெற்றது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 89 பேர் அடங்கிய 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தர ராஜே ஜலர்பதான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும், ராஜேந்திர ரதோட் தாராநகர் தொகுதியிலும், ஜோதி மிர்தா நகவ்ர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    • ராஜஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் இங்கு மீண்டும் வென்றால் கியாஸ் சிலிண்டர் ரூ.500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவித்தது.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பா.ஜ.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் நேற்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார்.

    முதல் மந்திரி அசோக் கெலாட் பங்கேற்று பேசுகையில், கிரகலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இது பல தவணைகளாக வழங்கப்படும். 1.05 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

    மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    • 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல்
    • நேற்று கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜனதா

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா வியூகம் அமைத்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது.

    இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால், நேற்று மதியம் வரை 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை பா.ஜனதா அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கடைசி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    உதைப்பூரில் உள்ள மாவ்லி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ.-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கோபால் சர்மா, தொழில் அதிபர் ரவி நய்யார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது.

    கடந்த 2-ந்தேதி 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் முன்னாள் மந்திரி தவ் சிங் பாதியின் மறுமகள் பூனம் கன்வார் பாதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்குப் பதிலாக அவரது, மகன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-வாக இருக்கும்  கிரிராஜ் மலிங்கா பா.ஜனதா கட்சிக்கு தாவியுள்ளார். நேற்று கட்சியில் இணைந்த நிலையில், பா.ஜனதா அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    • பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தேர்தலை எதிர்கொள்கிறது.
    • எங்களது முகம் பிரதமர் மோடி, தாமரை என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

    200 தொகுதிளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு அடைகிறது. இதனால் பா.ஜனதா கடைசி கட்டமாக 18 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். உடனே அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக பா.ஜனதா கட்சி மாநிலத் தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. இந்த நடைமுறையைத்தான் ராஜஸ்தானிலும் கடைபிடிக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சந்தியா ஓரங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் வேறு நபர்தான் முதல்வராக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில் ''தற்போது பிரதமர் மோடி மற்றும் தாமரைதான் எங்கள் முகம் (தேர்தலில் முன்னிறுத்துவது). பின்னர் எம்.எல்.ஏ.-க்கள், கட்சியின் பாராளுமன்ற குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள். முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் நபர் யாராக இருந்தாலும் அவருடைய பதிக்காலம் முழுமை அடைவதை உறுதி செய்வோம்'' என்றார்.

    • ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதேவேளையில், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் கஜானா திவாலாகுவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளதாக பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பூனவாலா கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. பிரியங்கா காந்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மின்சார கட்டணம் குறையும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு டீசல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை என காங்கிரஸ் சொல்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தை திவலாக்குவதற்கான உத்தரவாதத்தை காங்கிரஸ் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் கருவூலம் காலியாக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம், பென்சன் வழங்க மாநில அரசால் முடியவில்லை.

    அதேவேளையில் பா.ஜனதா வளர்ச்சி, நல்லாட்சி, கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு முன்னேற்றம் ஆகியவை குறித்து உத்தரவாதம் அளித்துள்ளது.

    இவ்வாறு பூனவாலா தெரிவித்துள்ளார்.

    ×