என் மலர்
நீங்கள் தேடியது "மனைவி மரணம்"
மதுரை:
மதுரை மாவட்டம் புதுத்தாமரை பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவரது மனைவி சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. உடல் கருகிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் மன வேதனையில் இருந்த கண்ணன், மனைவியை பிரிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இதனையடுத்து கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த 3 நாளில் கணவரும் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒத்தக்கடை போலீசில் கண்ணனின் சகோதரர் சரவணகுமார் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். ஜெயலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ராமச்சந்திரனும், மாமனார் குருசாமியும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீதும் தீப்பற்றியது.
பலத்த தீக்காயங்களுடன் 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். ராமச்சந்திரன், குரு சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஜெயலட்சுமியின் தந்தை பாண்டியன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. நல்லு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாகூர்:
வீராம்பட்டினம் நாகூ ரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி என்ற கத்திரிமுத்து (வயது 30). ரவுடியான இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து போனதால் 2-வதாக ஒரு பெண்ணை கார்த்தி திருமணம் செய்தார். அந்த பெண்ணும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் கார்த்தி விரக்தியுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி படுகாயம் அடைந்தார்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் தண்ணீர்தொட்டி வீதியை சேர்ந்தவர் பார்த்திபராஜ் (வயது62) கட்டிட காண்டிராக்டர். இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தெய்வாணை என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெய்வாணை திடீரென இறந்து போனார். இதற்கிடையே பார்த்திபராஜ் மனவேதனைக்குள்ளானார். இதனை மறக்க பார்த்திபராஜ் குடிபழக்கத்துக்கு ஆளானார். ஆனாலும் மனைவி இறந்த வேதனையில் சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வீடு திரும்பிய பார்த்திபராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டு வாரண்டாவில் ஊஞ்சல் கட்டும் கொக்கியில் மின்வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.
இன்று காலையில் பார்த்திபராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவரது மகன் பலராமன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மடுகரை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.