search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நக்சலைட்"

    சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர்களில் 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களுடன் போலீசாரிடம் சரணடைந்தனர். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    அவ்வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தேர்தலை சீர்குலைப்பதற்காகவும், வன்முறை தாக்குதல்களை நடத்துவதற்காவும் நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளதால் அவர்களை வேட்டையாட மாநிலம் முழுவதும் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கு முதல்கட்ட தேர்தலை சந்திக்கவுள்ள பஸ்ட்டார், நாராயணப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 62 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரணாகதி அடைந்தனர்.

    இந்த நடவடிக்கைக்காக சத்தீகர் மாநில முதல் மந்திரி ரமண் சிங் மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். #62Naxals #Naxalssurrender #NaxalsChhattisgarh
    சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக அனுப்பிய வீடியோ பதிவை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 2 போலீசாரும், அவர்களுடன் சென்ற தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாகுவும் பலியானார்கள். தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் உயிர்தப்பினர்.

    முன்னதாக, துப்பாக்கி சண்டைக்கு நடுவே, மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக பேசி, வீடியோவில் பதிவு செய்தார். ஒரு கால்வாய்க்குள் படுத்தபடி அவர் பதிவு செய்த வீடியோவில், துப்பாக்கி குண்டுகள் சீறிப்பாயும் காட்சி தெரிகிறது.

    அதில், ‘அம்மா, இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை’ என்று அவர் பேசி உள்ளார். அந்த வீடியோவை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    நக்சலைட்டுகளை 3 ஆண்டுகளில் நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சூளுரைத்தார். #RajnathSingh #Naxalism #BJP
    லக்னோ:

    ஆர்.ஏ.எப். என்று அழைக்கப்படுகிற அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டதின் 26-வது ஆண்டு விழா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆயுதப்படை முகாமில் நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நாட்டில் நக்சலைட்டுகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, சில காலத்துக்கு முன்பாக 126 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை, வெறும் 10 அல்லது 12 என்ற அளவில் குறைந்து விட்டது.

    நமது நாட்டில் இருந்து நக்சலைட்டுகளை அடியோடு ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. 1 அல்லது 2 அல்லது 3 வருடங்களில் ஒழித்துக்கட்டுவோம். இது உங்களது உறுதியாலும், துணிச்சலாலும், கடின உழைப்பாலும் சாத்தியப்படும்.

    இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் நீங்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தகுந்தவை. இதுவரை 131 மாவோயிஸ்டுகளையும், பயங்கரவாதிகளையும் கொன்று குவித்திருக்கிறீர்கள். 1,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேரை சரண் அடையவும் வைத்திருக்கிறீர்கள்.

    காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு படையாக மத்திய ஆயுத போலீஸ் படை செயல்பட்டு வருகிறது. காஷ்மீரை இந்தியாவின் ஒரு அங்கம் என்ற நிலையில் இருந்து யாராலும் பிரிக்க முடியாது. அங்கே சில இளைஞர்கள், பயங்கரவாதத்துக்கு தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் இந்தப் படையினர் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    கலவரங்களின்போதும், போராட்டங்களின் போதும் நீங்கள் விரைவாகவும், அதிரடியாகவும் செயல்பட வேண்டும். ஆனால் ஒருபோதும் பொறுப்பற்று இருந்து விடக்கூடாது.

    அனைத்து போலீஸ் படையினரும் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும், மிருகத்தனமானவர்கள் என்று கூறத்தக்க விதத்தில் நடந்து கொள்ளக்கூடாது.

    கூட்டத்தை கட்டுப்படுத்துகிறபோது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவரும் உணர்ந்து நடக்க வேண்டும். எப்போது பலத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து, அதற்கு ஏற்ப நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் ஒருவன் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டான். #Naxalgunneddown #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஐ.ஜி. சுந்தர் ராஜ் தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது எடப்பால் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    இதனால், நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Naxalgunneddown
    சத்தீஸ்கர் மாநில அரசால் தலைக்கு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட் கமாண்டரை சுக்மா மாவட்டத்தில் சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Naxalkilled #Chhattisgarhencounter
    ராய்ப்பூர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள கந்தர்பாரா காட்டுப் பகுதிக்குள் நேற்று மாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் உள்ளூர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் ஜக்கு என்பவனை சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.  

    படேஸ்ட்டி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கிராமத் தலைவரை கொன்ற வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டுவந்த ஜக்குவின் தலைக்கு சத்தீஸ்கர் மாநில அரசு 3 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Naxalkilled  #Chhattisgarhencounter
    ×