என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேரி கோம்"

    • தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார்.
    • மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    மணிப்பூரை சேர்ந்த மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றவர்.

    குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

    இந்நிலையில், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். அது இச்சமயம் மற்றொரு வீராங்கனையின் கணவருடன் தான் டேட்டிங் செய்வதாக வெளியான தகவலையும் மேரி கோம் மறுத்துள்ளார்.

    மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். 

    • மேரி கோமும், அவரது கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
    • இருவரும் விவாகரத்து பெறப் போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரை சேர்ந்த மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர்.

    இந்நிலையில், குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இருவரும் விவாகரத்து பெறப் போவதாக வெளியாகியிருக்கும் தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மற்றொரு வீராங்கனையின் கணவருடன் மேரி கோம் டேட்டிங் செல்வது காரண்மாகக் கூறப்படுகிறது.

    மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மேரி கோமின் கணவர் ஓன்லர். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசிக்கிறார்கள்.

    • 6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
    • லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    இம்பால் :

    6 முறை மகளிர் உலகக்குத்துச்சண்டை சாம்பியன் பட்டம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று, புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்பட 20 பேருக்கு இப்படி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த பூங்கா பற்றி முதல்-மந்திரி பீரன் சிங் தனது 'பேஸ்புக்' பக்கத்தில் குறிப்பிடுகையில், "ஒலிம்பிக் பூங்கா திறப்புக்கு தயாராக உள்ளது. நமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நமது புகழ்பெற்ற ஒலிம்பிக் சாதனையாளர்களின் சிலைகளை நாம் பார்க்கலாம்" என தெரிவித்திருந்தார்.

    ஆனால் மேரிகோமின் சிலையின் தோற்றம் பற்றி அவரது கணவர் ஆன்லர் கரோங் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "ஒலிம்பிக் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள என் மனைவி மேரிகோமின் சிலைத்தோற்றம், அவரைப்போல இல்லை" என தெரிவித்தார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    மேரிகோமின் சகோதரர் ஜிம்மி கோம், "இந்த ஒலிம்பிக் பூங்காவை திறந்து வைப்பதற்கு முன்பாக மேரிகோமின் சிலை மாற்றப்படும் என்று முதல்-மந்திரியின் அலுவலகம் எனக்கு உறுதி அளித்துள்ளது" என தெரிவித்தார்.

    ஆனால் இதுபற்றி முதல்-மந்திரி அலுவலகத்தில் விசாரித்தபோது, "இந்தப் பிரச்சினை பற்றி நாங்கள் பேச மாட்டோம்" என கூறிவிட்டனர்.

    ஆனால் ஜிம்மி கோம் மேலும் கூறும்போது, "இது அவரது (ஆன்லர் கரோங்) தனிப்பட்ட பிரச்சினை. எனது சகோதரி வெளியூர் சென்றிருந்தார். இப்போதுதான் ஊர் திரும்பி உள்ளார். அவருக்கு இந்த விவகாரம் குறித்து புதன்கிழமைதான் தெரிய வந்தது. நமது வீரர்களை, வீராங்கனைகளை கவுரவிக்கிற வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படலாம்" என தெரிவித்தார்.

    • கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    • வன்முறை தொடர்பான புகைப்படங்களை மேரிகோம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த ஒற்றுமை பேரணியின்போது வன்முறை வெடித்தது. பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

    இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம், இந்த கலவரம் தொடர்பாக வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, பிரதமர் அவர்களே தயவுசெய்து உதவுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

    • உலக குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4-வது இடத்தில் மேரி கோம் உள்ளார்.
    • 40 வயதான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மேரி கோம் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

    இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான மோரி கோம், பத்ம விபூசண் விருது உட்பட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆவார்.

    சர்வதேச குத்துச்சண்டை மையத்தின் (AIBA) தரவரிசையில், உலக குத்துச்சண்டை வீராங்கனைகளில் 4-வது இடத்தில் மேரி கோம் உள்ளார். 

    இந்நிலையில் இங்கிலாந்தின் வின்ட்சரில் ஆண்டுதோறும் நடைபெறும் UK-இந்தியா விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டின் குளோபல் இந்தியன் ஐகான் விருது மேரி கோமுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இங்கிலாந்திற்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமியிடமிருந்து 40 வயதான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மேரி கோம் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

    • சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதிப்படி 40 வயதிற்கு மேல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.
    • வயது கடந்ததால் கட்டாய ஓய்வை அறிவித்துள்ளார் மோரி கோம்.

    இந்தியாவின் சாதனை வீராங்கனையாக திகழ்பவர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தவர். மேலும், 2012 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்.

    சாதனை வீராங்கனையான இவர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

    40 வயது வரைதான் ஆண்கள் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க முடியும் என சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி சொல்கிறது.

    ஆனால், 40 வயதை கடந்த பின்னரும் பதக்கம் வெல்லும் வேட்கையில் மேரி கோம் உள்ளார். இருந்த போதிலும் வயது காரணமாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் "இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்" என்றார்.

    • இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார்.
    • மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்று 6 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் செயல்படுவார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருந்து 41 வயதான மேரி கோம் நேற்று விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'நாட்டுக்கான வேலை செய்வதை எல்லா வகையிலும் நான் பெருமையாக கருதுகிறேன். அதற்காக நான் மனதளவில் தயாராக இருந்தேன். இந்த கவுரவமிக்க பொறுப்பில் என்னால் இருக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    தனிப்பட்ட காரணத்துக்காக இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்குவது எனக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனால் இதனை தவிர எனக்கு வேறு வழியில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது நாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேரி கோம் விலகலை உறுதிப்படுத்தி இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, 'தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகியது வருத்தம் அளிக்கிறது. மேரி கோமின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். அவருக்கு பதிலாக அந்த பொறுப்பில் யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்' என்றார்.

    • மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் புனித நீராடினார்.
    • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

    இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட மேரி கோம், தண்ணீரில் ஓடி பாக்சிங்கும் செய்துகாண்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது ஒரு நல்ல அனுபவம். ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இதை உலகத்தரம் வாய்ந்த யாத்திரையாக மாற்றியுள்ளனர். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும், இந்த நிகழ்விற்கு ஆதரவளிக்க வந்தேன்.

    என மேரிகோம் கூறினார்.

    • இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய டெல்லியில் தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது
    • காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    புதுடெல்லி:

    பயிற்சி போட்டியில் இருந்து விலகியதன் மூலம் காமன்வெல்த் போட்டிக்கு இந்த முறை மேரி கோம் செல்ல முடியாது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்-வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டி டெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்து வருகிறது. 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் மற்றும் பல்வேறு நட்சத்திர வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் மேரி கோம், அரியானாவின் நிதுவை சந்தித்தார். முதல் ரவுண்டில் 39 வயதான மேரிகோம் எதிராளிக்கு குத்துவிட முயற்சித்த போது, நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு இடது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடுவர் நிறுத்தினார். உடனடியாக மேரிகோம் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

    மேரி கோம் போட்டியில் இருந்து பாதியில் விலகியதால், அவரை எதிர்த்து மோதிய நிது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எனவே, இந்த முறை காமன்வெல்த் போட்டிக்கு மேரி கோம் செல்ல முடியாது.

    இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
    கவுகாத்தி:

    2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டிக்கான பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது.

    6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.



    மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் சரிதா தேவி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

    இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்று தங்கம் வென்றார்.
    சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் வெளியிட்டுள்ள தரவரிசையில் மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். #AIBA #MaryKom
    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையாக திகழ்பவர் மேரி கோம். 36 வயதாகும் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. என்றாலும், அபாரமாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்தார்.

    சர்வதேச குத்துச்சண்டை அசோசியேசன் இன்று குத்துச்சண்டை உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் 45 முதல் 48 கிலோ லைட் பிளை பிரிவில் இடம்பிடித்துள்ள மேரி கோம் 1700 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 2018 காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறை தங்கம் வென்று சாதனை படைத்த மேரி கோமுக்கு, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #MaryKom #WorldWomensBoxing
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.

    இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை வென்றார். குத்துச்சண்டை அரங்கில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் மேரிகோமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள். இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “‘இந்திய விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமிதமான தருணம். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில்  தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தது” என தெரிவித்துள்ளார்.

    மேலும் தங்கம் வென்ற மேரி கோமுக்கு, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MaryKom #WorldWomensBoxing #pmmodi #presidentramnathkovind 
    ×