என் மலர்
நீங்கள் தேடியது "பகத்சிங்"
- ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார்.
- இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது.
கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்ற பின்னர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் முறையாக டெல்லியில் உரையாற்றினார்.
இன்று பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர்.

நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.
ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. நீங்கள் (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள்.
எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.
பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
- சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
- தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்.
சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம். சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
என்று பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் தனது வாழ்க்கையை பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் அர்ப்பணித்தார்.
என்று பதிவிட்டுள்ளார்.
கோவை அரசு கலை கல்லூரியில் எம்.ஏ. வரலாறு பிரிவில் முதலாமாண்டு படித்து வருபவர் மாணவி மாலதி.
இவர் கடந்த 28-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.
பகத்சிங் பற்றி கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு, கல்லூரி முதல்வரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் துறை தலைவர் அனுமதி பெற்று எனது துறையில் மட்டும் நடத்துமாறு கூறினார்.
துறை தலைவர் விடுமுறையில் இருந்ததால் வகுப்பாசிரியரிடம் அனுமதி கேட்ட போது அவர் மறுத்துவிட்டு, இனிப்பு மட்டும் வழங்கி கொள் என கூறினார். பகத்சிங் பற்றி அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் தெரிய வேண்டும் என கருதி நான் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை திரட்டி நிகழ்ச்சி நடத்தினேன்.
இதற்காக 1-ந் தேதி நான் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக ஆசிரியர் கூறினார். ஆனால் முறைப்படி எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சஸ்பெண்ட் கடிதமும் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது எனது வீட்டு முகவரிக்கு சஸ்பெண்டு உத்தரவு அனுப்பியிருப்பதாக கூறினார்கள். ஆனால் அதுவும் வரவில்லை.
இதனால் 9-ந் தேதி நான் வகுப்புக்கு சென்றேன். அப்போது நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறி முதல்வர் அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் உத்தரவு நகலை எடுத்து வந்து காட்டினர்.
அந்த உத்தரவில் 1-ந் தேதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை பெறும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
நான் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் பொறுப்பில் உள்ளேன். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்தற்கான காரணம் இதுவரை எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. விசாரணை குறித்தும் இதுவரை எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதோடு உத்தரவு நகலை ரேஸ்கோர்ஸ் போலீசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி மாலதி மீதான நடவடிக்கை குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறியதாவது:-
கல்லூரியில் தனிப்பட்ட மாணவி கூறியதற்காக அனைத்து பிரிவு மாணவர்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு பிரிவிலும் யாராவது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கேட்பார்கள். எனவே தான் துறை தலைவர் அனுமதி பெற்று அந்த துறையில் மட்டும் நடத்துமாறு கூறினேன்.
ஆனால் மாலதி அனுமதி பெறாமலேயே பிற மாணவ, மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார். இதனாலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வருகிற 22-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற உள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சஸ்பெண்ட் உத்தரவு நகல் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான்.
இவ்வாறு அவர் கூறினார். #Malathi #BhagatSingh