search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத்"

    குஜராத்தில் வெளிமாநிலத்தவர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு வந்த குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானிக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடைபெற்றது. #Congressworkers #blackballoons
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    அம்மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள 6 மாட்டங்களில் இந்தி பேசும் வெளிமாநில கூலி தொழிலாளிகள் மீது அதிகமான தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டது.

    இங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் கடந்த ஒருவார காலத்தில் சுமார் 20 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், தொடர்ந்து வெளியேறி வருவதாகவும் பிரபல ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், வரும் 31-ம் தேதி குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை  விழாவில் பங்கேற்க வருமாறு உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி நேற்று லக்னோ நகருக்கு வந்தார்.

    லக்னோ விமான நிலையம் பகுதியில் நேற்றிரவு திரண்ட காங்கிரசார் கருப்பு பலூன்களை பறக்க விட்டு விஜய் ருபானிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். விஜய் ருபானியே திரும்பிப்போ என்னும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

    மேலும், இன்று முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டுக்கு விஜய் ருபானி வந்தபோதும் இதேபோல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலரை போலீசார் கைது செய்து ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையில், லக்னோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விஜய் ருபானி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், பிரதமர் மோடி ஆகியோர் பிறந்த குஜராத் மாநிலம் ஒரு குட்டி இந்தியாவாகும். இந்தியா எல்லோருக்குமே பொதுவானது. 

    குஜராத்தின் வளர்ச்சிக்காக உ.பி., பீகார், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட மாநில மக்கள் அதிகமாக உழைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். குஜராத்தில் அனைத்து மாநில மக்களுக்கான பாதுகாப்பு, வாழ்வாதாரம் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Congressworkers #blackballoons #GujaratCM #VijayRupani
    குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனார். #Gujarat #CarAccident
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டத்தில் உள்ள போடேலி நகரில் இருந்து 7 சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் ஹலோல் நகருக்கு காரில் சென்றனர். அங்கு அவர்கள் தங்களின் உறவினரை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    பாத் என்கிற கிராமத்துக்கு அருகே போடேலி-ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பள்ளத்தில் தண்ணீர் தேங்கியிருந்ததால் கார் அதில் மூழ்கியது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் 3 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. அவர்கள் பலத்த காயம் அடைந்திருந்தனர்.

    சிறுவர்கள் 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். #Gujarat #CarAccident #tamilnews 
    ×