என் மலர்
நீங்கள் தேடியது "பப்புவா நியூ கினியா"
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது பப்புவா நியூ கினியா.
- இன்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கான்பெர்ரா:
அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்து வரும் நாடு பப்புவா நியூ கினியா.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையே, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
- பப்புவா நியூ கினியா நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.
- சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
போர்ட் மோர்ஸ்பி:
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது. சுமார் 20 லட்சம் மக்கள் தொகை வசிக்கும் இந்த நாடு சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது.
இங்குள்ள பொதுமக்கள் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வரவேற்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நயூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவை சந்தித்தார்.
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் பிரதமர் மோடியை பார்த்த அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே, சட்டென பிரதமர் மோடி காலில் விழ முயன்றார்.
அவரை தடுத்த பிரதமர் மோடி, மராபேவின் முதுகில் தட்டியப்படி அவரை எழுப்பினார். வரவேற்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நயூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவை சந்தித்தார். சந்திப்பின் போது பப்புவா நியூ கினியாவில் பேசப்பட்டு வரும் டோக் பிசின் மொழிக்கு மாற்றப்பட்ட திருக்குறள் பதிப்பை நரேந்திர மோடி வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே வர்த்தகம், முதலீடு, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் என்று பல்வேறு பிரிவுகளில் உறவை பலப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேசினர். பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் பதிவிட்டார்.
2014 ஆண்டு ஃபிஜிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய பசிபிக் பகுதிகளில் சீனா தனது ராணுவ பலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் பப்புவா நியூ கினியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ முகநூல் பக்கத்தில் புகைப்படம் வெளியிடப்பட்டது
- சமீபத்தில் "தி லிட்டில் மெர்மெய்ட்" திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது
கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியம் தருபவை. அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம்.
கடற்கன்னிகள் போன்ற உயிரினங்கள் உண்மையா, பொய்யா என்பதை தாண்டி குழந்தைகளுக்கு இது போன்ற கடற்கன்னிகளும், அவை மனிதர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவுவது குறித்த தகவல்களும் மிகவும் பிடித்தமானவை.
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. இதன் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி (Port Moresby).
நேற்று, அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது. நியூ அயர்லேண்டர்ஸ் ஒன்லீ (New Irelanders Only) எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டது.
இத்தகைய உயிரினங்கள் "கிளாப்ஸ்டர்" (globster) என அழைக்கப்படுவதாக "லைவ் சைன்ஸ்" எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த "கிளாப்ஸ்டர்" உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்றும் அந்த வலைதளம் தெரிவிக்கிறது.
இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டி உயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் சொல்வது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால் உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை ஒதுங்கியிருக்கும் "கிளாப்ஸ்டர்" கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கன்னி குறித்த "தி லிட்டில் மெர்மெய்ட்" எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது. இந்நேரத்தில் இந்த "கடற்கன்னி" கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
- இதனால் அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது.
இதற்கிடையே, பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.8 கோடி) இந்தியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரழிவால் ஏற்படும் நெருக்கடி, பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது. பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளின் நட்பு, மக்களிடையிலான ஒற்றுமையின் அடையாளமாக பப்புவா நியூ கினியாவில் புனரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
- இதனால் அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
புதுடெல்லி:
பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது.
இதற்கிடையே, பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இயற்கை பேரழிவால் ஏற்படும் நெருக்கடி, பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது. பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்குகிறது.
அதன் ஒருபகுதியாக, 11 டன் பேரிடர் நிவாரணப் பொருள்கள் மற்றும் 6 டன் மருத்துவ உதவிகளுடன் இந்தியா சிறப்பு விமானத்தை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்பியுள்ளது.
நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், சானிட்டரி பேட்கள், ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள், கர்ப்ப பரிசோதனைக் கருவிகள், கொசு விரட்டிகள் மற்றும் குழந்தை உணவுகள் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.
- இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது- ஆஸ்திரேலியா பிரதமர்.
- நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்- போலீஸ் அதிகாரி.
பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன.
பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
"இந்த சண்டை அந்த தீவின் எங்கா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது" என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், "பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்" என்றார்.
பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும் மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.
இதே எங்கா மாகாணத்தில் கடந்த வரும் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
- சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியா தீவு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகர் வெவாக்கிலிருந்து 88 கிமீ தென்மேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
- நிலச்சரிவில் 100 -க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. இந்த நிலையில் பப்புவா நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் எங்க மாகாணத்தில் காகலம் கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து பலர் சிக்கி கொண்டனர். உடனே மீட்புப்படையினர் விரைந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நிலச்சரிவில் 100 -க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பலி எண்ணிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகினர்.
- இதையடுத்து, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர்ட் மோர்ஸ்பி:
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக வெளியான தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது என உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறுகையில், இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன என தெரிவித்தார்.
நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
- நிலச்சரிவில் சிக்கி 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
போர்ட் மோர்ஸ்பி:
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
இந்நிலையில், ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ கடந்துள்ளது என தெரிவித்த அவர், இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
நிலச்சரிவு ஏற்பட்டு 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
- உதவி செய்ய தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர்.
இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.