search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்ப்ஸ்"

    • அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
    • 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை மேயர்ஸ் பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில் 2024-ம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8 சதவீதமாக இருந்தது.

    இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து லாரியல் குழுமத்தின் கிட்டத்தட்ட 35 சதவீத பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் வால்டன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 77.2 பில்லியன் டாலராகும்.

    இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கோச் இண்டஸ்ட்ரீசில் 42 சதவீத பங்குகளைப் பெற்ற அவர் எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    தனியார் நிறுவனமான மார்ஸ் இன்க்கின் வாரிசான ஜாக்குலின் மார்ஸ் 39.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    மார்ஸ் இன்க் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடம்பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

    6-வது இடத்தில் ரஃபேலா அபோன்டே-டயமண்டும், 7வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட்டும், 8-வது இடத்தில் ஜினா ரைன்ஹார்ட்டும், 9-வது இடத்தில் அபிகாயில் ஜான்சனும், 10-வது இடத்தில் மிரியம் அடெல்சனும் உள்ளனர்.

    • 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
    • மெஸ்சி 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.

    அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை (Business magazine Forbes) ஆண்டுதோறும் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடம் பிடித்துள்ளார்.

    இதன்மூலம் ரொனால்டோ தொடர்ந்து 4-வது முறையாக முதல் இடம் பிடித்துள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

    போர்ப்ஸ் தகவல்படி 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 260 மில்லியன் டாலர் சம்பளம் வாங்குவதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் அவருடைய சம்பளம் 136 மில்லியன் டாலரில் இருந்து இருந்து 260 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

    கால்பந்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் எதிரியாக பார்க்கப்படும் மெஸ்சி கடந்த முறை 2-வது இடத்தில் இருந்தார். தற்போது 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். பார்சிலோனாஅணிக்காக விளையாடி வந்த மெஸ்சி தற்போது அமெரிக்க கால்பந்து கிளப்பில் விளையாடி வருகிறார்.

    கோல்ஃப் வீரர் ஜான் ரஹ்ம் 218 மில்லியன் டாலருடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மெஸ்சி 135 மில்லியன் டாலருடன் 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். கூடைப்பந்து வீரர் லே'பிரோன் ஜேம்ஸ் 128.2 மில்லியன் டாலருடன் 4-வது இடத்தையும், மற்றொரு கூடைப்பந்து வீரர் ஜியான்னிஸ் ஆன்டேடோகவுன்ம்போ 111 மில்லியன் டாலருடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    கால்பந்து வீரர் எம்பாப்வே 110 மில்லியன் டாலருடன் 6-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

    நெய்மர் (கால்பந்து) 108 மில்லியன் டாலர், கரிம் பென்சிமா (கால்பந்து) 106 மில்லியன் டாலர், ஸ்டீபன் கர்ரி (கூடைப்பந்து) 102 மில்லியன், லாமர் ஜேக்சன் (அமெரிக்க கால்பந்து) 100.5 மில்லியன் டாலருடன் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

    • லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓவாக பதவி வகித்து வருபவர் ரேணுகா ஜக்தியானி.
    • போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.

    2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து மேலும் 25 பேர் கோடீஸ்வரர்கள் ஆக இணைந்துள்ளனர்.

    ரேணுகா ஜக்தியானி 2007-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த பெண் தொழிலதிபர் விருது பெற்றார். 2012-ல் அரபு நாடுகளின் தொழில்கூட்டமைப்பின் சிறந்த பெண் தொழிலதிபர் விருதையும் பெற்ற அவர், 2014-ல் உலக தொழில்முனைவோர் அமைப்பின் சிறந்த தொழில்முனைவோர் விருதையும் பெற்றுள்ளார்.

    • சந்தை மதிப்பில் இந்த ஆண்டில் 50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
    • மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கிடப்படுகிறது.

    அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகளவில், இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, அதானி இடம் பிடிப்பது வழக்கம்.

    தற்போது இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் 80 வயதான லலித் கைதான் இணைந்துள்ளார். இவர் மதுபான தயாரிப்பு நிறுவனமான ரேடிகோ கைதானின் அதிபர் ஆவார். இந்த நிறுவனத்தின் வருமானம் 380 மில்லியன் டாலர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த வருடத்தில் இவரது நிறுவனம் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், புதுவகையான பானங்கள் அறிமுகம் காரணமாக சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கீடப்பட்டுள்ளது.

    மதுபான நிறுவனத்தால் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ள லலித் கைதான் மது அருந்தாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 80 ஆகும்.

    • சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 4 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
    • இந்தப் பட்டியலில் ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடம் பிடித்துள்ளார்.

    நியூயார்க்:

    உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தை பிடித்து உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 4 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் முக்கியமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 32-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர் 5-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.

    இதைப்போல எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷினி நாடார் மல்கோத்ரா 60-வது இடத்தையும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 70-வது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார்-ஷா 76-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதில் ரோஷினி நாடார் மல்கோத்ரா, சோமா மண்டல், கிரண் மஜூம்தார்-ஷா ஆகியோர் கடந்த ஆண்டிலும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
    • கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    நியூயார்க்:

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

    கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட 6 இந்தியர்கள் இடம் பிடித்தனர்.
    • சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

    போர்ப்ஸ் பத்திரிகையின் இந்த பெருமை மிகுந்த பட்டியலில் முக்கியமாக 39 தலைமை செயல் அதிகாரிகள், 10 நாடுகளின் தலைவர்கள், 11 கோடீசுவரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவரது செல்வாக்கு மிகுந்த தலைமையை அடிப்படையாக கொண்டு பட்டியலில் முதலிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தப் பட்டியலில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லக்ராட் 2-ம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த 3 ஆண்டாக இந்தப் பட்டியலில் இடம்பிடித்து வரும் அவர், 4-வது முறையாக இந்த ஆண்டும் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.

    எச்.சி.எல். டெக் தலைவர் ரோஷிணி நாடார் மல்கோத்ரா 53-வது இடமும், செபி தலைவர் மாதபி புரி பக் 54-வது இடமும், இந்திய ஸ்டீல் ஆணைய தலைவர் சோமா மண்டல் 67-வது இடமும் பிடித்துள்ளனர்.

    போர்பஸ் பத்திரிகை வெளியிட்ட இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 11-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். #Forbes #MukeshAmbani
    புதுடெல்லி:

    பிரபல போர்பஸ் பத்திரிக்கை இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். 

    அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.

    விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


    தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார்

    இவர்களைத் தொடர்ந்து ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர். 

    100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளனர். பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா இப்பட்டியலில் 39-ம் இடம் பிடித்துள்ளார்.
    ×