என் மலர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து"
- இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன.
- இரு அணிகளும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மதியம் 2.00 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்று பெற்றுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியா நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த வகையில், இந்த நிலை நாளை மாறவிருக்கிறது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.
- ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
- ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். இந்த ஜோடி 68 ரன்களை சேர்த்த போது, கான்வே 35 ரன்களில் அவுட் ஆனார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிறகு ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து கொண்ட வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் அடித்தனர். கேன் வில்லியம்சம் 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ரச்சின் ரவீந்திரா 108 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மென் முறையே 29 மற்றும் 39 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 401 ரன்களை குவித்தது. இதை அடுத்து 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷஃபிக் 4 ரன்களில் அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை எடுத்தார். 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்த நிலையில், மழை குறிக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், டி.எல்.எஸ். விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
- நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது.
- விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
- நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.
இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
- கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருடத்தின் ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
- நியூசிலாந்ததில் புத்தாண்டு களைகட்டி வருகிறது.
நியூசிலாந்தில், இந்திய நேரப்படி சரியாக இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.
உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
கிரிபேட்டியை தொடர்ந்து நியூசிலாந்தில் 2024 வருட ஆங்கில புத்தாண்டு பிறந்தது.
இந்நிலையில், வாணவேடிக்கையுடன் நியூசிலாந்து மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மேலும், பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதனால், நியூசிலாந்ததில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
- நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
- இன குழு பெருமையை சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.
நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் ஆரவார பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 170 ஆண்டுகளில் நியூசிலாந்தின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மைபி கிளார்க். 21 வயதான இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்.பி. ஆனார். மௌரி இனத்தை சேர்ந்த இவர் நியூசிலாந்தின் பழங்குடி சமூகத்தினருக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
எம்.பி.யாக தேர்வான பிறகு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மைபி கிளார்க். உரையின் போது மௌரி இனத்தின் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்றான ஹக்கா செய்தது அரங்கத்தை அதிர செய்தது. போர், வெற்றி, ஒற்றுமை, இன குழு பெருமை என எல்லாவற்றையும் சொல்ல இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது.

அந்த வகையில் நியூசிலாந்தின் இளம் பெண் எம்.பி. வெற்றி முழக்கமிட்டு பேசியது பாராளுமன்றத்தை அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், "நான் உங்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன்.. ஆனாலும் நான் உங்களுக்காகவே வாழ்வேன்," என்று தெரிவித்தார்.
ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் இடையே உள்ள ஹன்ட்லி என்ற சிறு நகரத்தில் வசிக்கும் மைபி கிளார்க் தனது மௌரி இனத்தின் லூனார் காலண்டரின் படி குழந்தைகளுக்கு தோட்டத்துறை சார்ந்த கல்வியை கற்பித்து வருகிறார். எம்.பி. என்ற பதவியை தாண்டி இவர் தன்னை மௌரி மொழியை காப்பாற்றவும், அதனை உலகறிய செய்யவும் நோக்கமாக கொண்டிருக்கிறார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது.
- இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்திற்கு முன்னேறியது.
துபாய்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த தொடர் முடிவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.
அதன்படி, புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி 75 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (55%) 2வது இடத்திலும், இந்தியா (52.77%) 3வது இடத்திலும், வங்காளதேசம் (50%) 4வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), இங்கிலாந்து (25%), தென் ஆப்பிரிக்கா (25%), இலங்கை (0%) ஆகிய அணிகள் 5 முதல் 9 இடங்களில் உள்ளன.
- எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
- இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது
- டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
- ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
கயானா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு பேட்டியளித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:
நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். பேட் மற்றும் பந்தில் எங்களின் சிறப்பான செயல் திறன் இது. இப்படிப்பட்ட ஒரு அணியை வழிநடத்த நான் பெருமைப்படுகிறேன்.
எங்கள் பந்துவீச்சாளர்கள் திறமையைப் பயன்படுத்தி பந்து வீசும் பொழுது எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினம். நாங்கள் திறமையை சரியாகப் பயன்படுத்தினால் எங்களை வீழ்த்துவது கடினம். வெற்றியோ, தோல்வியோ நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் சரியாக செய்யவேண்டும். முடிவைப் பற்றி எப்பொழுதும் கவலைப்படுவது கிடையாது.
பந்துவீச்சில் எங்களுக்கு பரூக்கி மிகச்சிறந்த தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இரு போட்டிகளிலும் அவர் பந்து வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து தன்னுடைய பந்துவீச்சில் பணிபுரிந்தால் அவர் இதைவிட இன்னும் திறமையாக வரமுடியும் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது
டிரினிடாட்:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.
வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.
- சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.
- ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே சில அணிகள் முன்னேறி விட்டன.
அந்த வகையில், இன்று காலை நடைபெற்ற தொடரின் 29-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் க்ரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி லீக் சுற்றிலேயே தொடரில் இருந்து வெளியேறியது.

க்ரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக க்ரூப் சி-யில் நியூசிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை உகாண்டா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு ஆள் அவுட்டானது. உகாண்டா அணியில் 4 வீரர்கள் டக் அவுட்டும் அதில் 3 பேர் கோல்டன் டக் அவுட்டும் ஆனார்கள்.
41 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 5.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய டிம் சவுதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இத்தொடரின் தனது முதல் வெற்றியை நியூசிலாந்து அணி இன்று பதிவு செய்துள்ளது